Advertisment

வேலை மாறியிருச்சா? கவலைப்படாதீங்க...: ஆன்லைனிலேயே பி.எப். பணத்தை மாற்றிக்கொள்ளலாம்

EPF balance transfer through online : ஒரு வேலையில் இருந்து புதிய வேலைக்கு நீங்கள் மாறியிருந்தால், பழைய நிறுவனத்தில் கட்டிய பி.எப். தொகை என்ன ஆகும் என்ற கவலை இனி இல்லை.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Employees Provident Fund,Employees Provident Fund transfer,EPf transfer,Provident Fund,Provident Fund transfer,EPF balance transfer,EPF money withdrawal,PF withdrawal,EPF withdrawal,EPF transfer,provident fund withdrawal,PF transfer online,EPFO online facility

Employees Provident Fund,Employees Provident Fund transfer,EPf transfer,Provident Fund,Provident Fund transfer,EPF balance transfer,EPF money withdrawal,PF withdrawal,EPF withdrawal,EPF transfer,provident fund withdrawal,PF transfer online,EPFO online facility, பிஎப் தொகை, யுஏஎன் எண், நிறுவனம், பென்சன், ஆன்லைன், பாஸ்வேர்ட், வேலை

அரசு நிறுவனங்கள் மட்டுமல்லாது தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் பி.எப். தொகை, தங்களது ஓய்வுக்காலத்தில் சுய தேவைகளை நிறைவேற்ற முக்கிய பங்காற்றுகிறது என்பதை யாராலும் மறுக்க இயலாது.

Advertisment

ஒரு வேலையில் இருந்து புதிய வேலைக்கு நீங்கள் மாறியிருந்தால், பழைய நிறுவனத்தில் கட்டிய பி.எப். தொகை என்ன ஆகும் என்ற கவலை இனி இல்லை. ஏனெனில், புதிய நிறுவனத்தில், உங்களது யுஏஎன் எண்ணைக்கொண்டு புதிய பிஎப் கணக்கு துவங்கப்படும். அதன்பின், நீங்கள் ஆன்லைனிலேயே, பழைய நிறுவனத்தில் கட்டிய பி.எப். தொகையை, புதிய நிறுவன கணக்குடன் எளிதாக இணைத்துவிட முடியும்.

 

publive-image

அதற்கான வழிமுறை இதோ...

யுஏஎன் எண் மற்றும் பாஸ்வேர்டை கொண்டு உங்களது பிஎப் கணக்கை, ஆன்லைனில் லாகின் செய்யவும்.

ஆன்லைன் சர்வீசஸ் என்ற பகுதிக்கு செல்லவும்.

அதில் ஒன் மெம்பர் - ஒன் இபிஎப் அக்கவுண்ட் டிரான்ஸ்பர் ரிகொஸ்ட் என்ற பிரிவிற்கு செல்லவும்

அதில் மீண்டும் உங்களது யுஏஎன் எண் அல்லது பழைய நிறுவனத்தின் பிஎப் கணக்கு எண்ணை உள்ளீடவும். அதன் விபரங்கள் திரையில் தெரியும்.

பின் எந்த அக்கவுண்ட்டில் இருந்து எந்த அக்கவுண்டிற்கு பணத்தை டிரான்ஸ்பர் செய்ய வேண்டும் என்பதை குறிப்பிடவும்.

பழைய நிறுவன கணக்கை தேர்வு செய்தவுடன், ஒன்டைம் பாஸ்வேர்ட் ஜெனரேட் ஆகும்.

அந்த ஒன்டைம் பாஸ்வேர்டை, அதற்குரிய கட்டத்தில் பதிவு செய்தவுடன், உங்களது கோரிக்கை, அந்த நிறுவனத்துக்கு சென்றுவிடும்.

நமது கோரிக்கை எந்த நிலையில் உள்ளது என்பதை, Track Claim Status பிரிவிற்கு சென்று தெரிந்துகொள்ளலாம்.

ஊழியர்கள், இந்த ஆன்லைன் வசதியை, பிஎப் பணத்தை எடுப்பதற்கும், பென்சன் பணத்தை எடுப்பதற்கும் மற்றும் பிஎப் அட்வான்ஸ் தொகையை பெறுவதற்கும் பயன்படுத்தலாம்.

Epfo
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment