Advertisment

ஹவ்டி மோடி நிகழ்ச்சிக்கு தன்னார்வலர்கள் நிதி அளித்தனர்; எவ்வளவு செலவானது தெரியாது - பாஜக

Howdy Modi funded by volunteers answered BJP: அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பும் பிரதமர் மோடியும் கலந்துகொண்ட ஹூஸ்டன் நகரில் நடைபெற்ற ஹவ்டி மோடி நிகழ்ச்சியை பாஜக ஏற்பாடு செய்யவில்லை என்று பாஜகவின் வெளிநாட்டு விவகாரங்கள் துறைத் தலைவர் விஜய் சௌதைவாலே வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
howdy modi, prime minister narendra modi donald trump howdy modi, pm modi howdy modi event houston, ஹவ்டி மோடி, ட்ரம்ப், மோடி, modi houston event, bjp howdy modi

howdy modi, prime minister narendra modi donald trump howdy modi, pm modi howdy modi event houston, ஹவ்டி மோடி, ட்ரம்ப், மோடி, modi houston event, bjp howdy modi

Howdy Modi funded by volunteers answered BJP: அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பும் பிரதமர் மோடியும் கலந்துகொண்ட ஹூஸ்டன் நகரில் நடைபெற்ற ஹவ்டி மோடி நிகழ்ச்சியை பாஜக ஏற்பாடு செய்யவில்லை என்று பாஜகவின் வெளிநாட்டு விவகாரங்கள் துறைத் தலைவர் விஜய் சௌதைவாலே வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.

Advertisment

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஹூஸ்டனில் செப்டம்பர் 22 ஆம் தேதி நடந்த ‘ஹவ்டி மோடி’ என்ற மெகா நிகழ்வில் இந்திய புலம்பெயர்ந்தோர் இடையே பிரதமர் மோடி உரையாற்றினார். இந்த நிகழ்வில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உட்பட 50,000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வு அமெரிக்காவைச் சேர்ந்த இந்திய தன்னார்வலர்களால் ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் ஆளும் பாஜகவோ அல்லது மத்திய அரசோ இதற்குப் பின்னால் இல்லை என்றும் சௌதைவாலே தெரிவித்துள்ளார். மேலும், தன்னார்வலர்களில் ஒரு பெரும் பகுதியினர் இந்த நிகழ்வுக்கு நிதியளித்தனர். அவர்கள் பெயர் குறிப்பிடாமல் இருக்க விரும்பினர். அதற்கு பதிலாக அவர்கள் எதையும் விரும்பவில்லை என்றும் அவர் கூறினார். மேலும், நிகழ்வின் மொத்த செலவு குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றும் சௌதைவாலே கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் அமெரிக்காவின் குடியரசுக் கட்சியினர் மற்றும் ஜனநாயகக் கட்சியினர் என இருதரப்பினருமே கலந்துகொண்டனர். ஹவ்டி மோடி நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புடன் 9, 10 ஜனநாயகக் கட்சியினரும் கலந்துகொண்டதாக விஜய் சௌதைவாலே தெரிவித்துள்ளார்.

“இதுபோன்ற நிகழ்வுகளுக்காக நாங்கள் மக்களை அணிதிரட்டும்போது, ​​அவர்களுக்கு வழங்கப்பட்ட முதல் செய்தி என்னவென்றால், இது ஒரு இந்திய அரசாங்கத்தின் நிகழ்வோ அல்லது பாஜக - ஆர்எஸ்எஸ் நிகழ்வோ அல்ல என்பதுதான். மேலும், ‘ஹவ்டி, மோடி!’ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 50,000 பேரில் 80 சதவீதத்துக்கும் அதிகமானோர் கட்சியைச் சேராதவர்கள்”என்று விஜய் சௌதைவாலே பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு தெரிவித்துள்ளார்.

ஹவ்டி மோடி நிகழ்சிக்கு வெளியே ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் பற்றிய கேள்விக்கு பதில் அளித்த சௌதைவாலே, “அவர்களில் பெரும்பாலானோர் காலிஸ்தான் மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள்” என்று கூறினார்.

இருப்பினும், சில உண்மையான எதிர்ப்பாளர்களும் இருந்திருக்கலாம் என்றும் அவர்களை இந்தியாவுக்கு எதிரானவர்கள் என்று நாங்கள் கூறவில்லை என்றும் விஜய் சௌதைவாலே கூறினார்.

Bjp Narendra Modi Rss Donald Trump President Donald Trump
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment