Shubhajit Roy
Howdy Modi Narendra Modi Article 370 : அரசு முறைப்பயணமாக 1 வாரம் அமெரிக்க சென்றுள்ள இந்திய பிரதமர் மோடி, நேற்று இந்தியர்கள் குழுமியிருந்த ஹவ்டி மோடி என்ற நிகழ்வில் கலந்து கொண்டார். 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரெம்ப் மற்றும் அந்நாட்டு அரசியல் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். பல்வேறு விசயங்கள் தொடர்பாக பேசிய மோடி, அங்கும் ஜம்மு-காஷ்மீர் பிரச்சனையை விட்டுவைக்கவில்லை. அது குறித்தும் உரையாடியுள்ளார்.
இந்த கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க
ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்த்தான ஆர்ட்டிக்கிள் 370-ஐ நீக்கி நாடாளுமன்றத்தில் ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி அறிவித்தார் உள்துறை அமைச்சர் அமித் ஷா. நேற்று அமெரிக்காவில் நடைபெற்ற ஹவுடி மோடியில், அந்த சட்டத்திற்கு பிரியாவிடை கொடுத்துவிட்டார் மோடி என்று தான் கூற வேண்டும். 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அமர்ந்திருந்த அரங்கில், இறுதியாக 70 ஆண்டுகள் கழித்து ஒரு விசயத்தை வழியனுப்பி வைத்தோம் என்று அவர் கூறுகையில் மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு ஆரவாரமாக முழக்கம் எழுப்பினார்கள். பின்பு, அந்த விசயம் சட்டம் 370வது தான் என்றும் அவர் கூறினார்.
உலகில் இருக்கும் மற்ற மக்கள் அனுபவிக்கும் அனைத்துவிதமான சுதந்திரத்தை தற்போது மக்கள் காஷ்மீரிலும் அனுபவிக்கலாம் என்று அவர் கூறினார். இரண்டு அவைகளிலும் மணிக்கணக்கில் ஆலோசனைகள் நடத்தப்பட்ட பின்னரே, இம்முடிவை அரசு எட்டியது. ராஜ்யசபையில் பாஜக உறுப்பினர்கள் குறைவாக இருந்த பட்சத்திலும், மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள், மத்திய அரசின் இந்த முடிவை ஆதரித்தது என்று அவர் கூறினார்.
/tamil-ie/media/media_files/uploads/2019/09/modi-howdy.jpg)
அமெரிக்க அதிபர் மற்றும் அந்நாட்டு அரசியல்வாதிகள் மட்டும் அமர்ந்திருக்க, இந்த மாபெரும் மாற்றத்தை உருவாக்கிய இந்திய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு, 50 ஆயிரம் மக்களும் எழுந்து நின்று தங்களின் மரியாதையையும் பாராட்டுகளையும் கைத்தட்டல்கள் மூலம் தந்தனர்.
பாகிஸ்தான், இந்த விவகாரத்தில் தலையிடுவது குறித்து அவர் பேசுகையில் “தன்னாட்டில் இருக்கின்ற பிரச்சனைகளுக்கே முடிவு எடுக்க இயலாத நாடு, இந்திய நாட்டின் பிரச்சனைகள் குறித்து கவலை கொள்கிறார்கள் . அவர்கள் எப்படி தீவிரவாதத்திற்கு ஆதரவாக இருந்தார்கள் என்பதை இந்த உலகம் அறியும்” என்று கூறினார். மும்பை தாக்குதல், மற்றும் அமெரிக்காவின் இரட்டைக் கோபுரம் தாக்குதலை மேற்கோள்காட்டி பேசிய மோடி, தீவிரவாதத்திற்கு எதிராக போராடும் நேரம் வந்துவிட்டது என்றும், அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தீவிரவாதத்திற்கு எதிராக நிற்பார் என்றும் கூறினார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரெம்புக்கு அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்துங்கள் என்று கூறியபோது, அமெரிக்க அரசியல்வாதிகள் உள்ளிட்டோர் எழுந்து நின்று தங்களின் மரியாதையை எழுத்தினர். அமெரிக்காவும், இந்தியாவும் ஒன்றிணைந்து, தீவிரவாதத்திற்கு எதிராக போர் தொடுக்கும் என்று கூறியுள்ளார். ஐக்கிய நாடுகளின் ஜெனரல் அசெம்பலியில் பேச இருக்கும் மோடி, அந்நிகழ்வில் கலந்து கொள்ள இருக்கும் இம்ரான் கானுக்கு தேவையான செய்தியை இந்த நிகழ்விலேயே கூறிவிட்டார்.
/tamil-ie/media/media_files/uploads/2019/09/m-t.jpg)
நேற்று நடைபெற்ற இந்நிகழ்வில் அமெரிக்க அரசியலில் இருக்கும் காங்கிரஸ் உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர். ஸ்டெனி ஹோயர், ஹாஸ்டன் மேயர் சில்வஸ்டெர் டர்னர், கென்டக்கி மாகாண கவர்னர் மாட் பெவின் மற்றும் செனேட்டர் டெட் க்ரூஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மோடியும் டொனால்ட் ட்ரெம்பும் கலந்து கொண்ட இந்த நிகழ்வில், ட்ரெம்பினை மோடி மிகவும் உற்ற நண்பர் என்றும், பழகுவதற்கு மிகவும் இனிமையானவர் என்றும், ”ஆப்கி பார் ட்ரெம்ப் சர்கார்” என்றும் கூறினார். அவர் அமெரிக்கவின் மீது வைத்திருந்த பற்று குறித்தும், தலைமைப் பொறுப்பு குறித்தும், உலகத்திற்கும், அமெரிக்காவும் அவர் செய்து கொண்டிருக்கும் மிகப்பெரிய அர்பணிப்புகள் குறித்தும் தொடர்ந்து உரையாடினார். ட்ரெம்ப் 24 நிமிடங்கள் பேசினார். அமெரிக்காவின் விசுவாசமான நண்பர்களில் மோடியும் ஒருவர் என்று கூறிய அவர் இந்திய-அமெரிக்க குடிகளிடம் உங்களுக்கு டொனால்ட் ட்ரெம்ப்பை விட மிகச்சிறந்த நண்பன் இந்நாட்டில் இல்லை என்று கூறினார்.
300 மில்லியன் மக்களை வறுமைக்கோட்டில் இருந்து காப்பாற்றிய மோடி என்று பேச துவங்கிய ட்ரெம்ப், இந்திய மற்றும் உலக பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்கு குறித்தும் பேசினார். முன்பு எப்போதும் இல்லாத அளவில் அமெரிக்காவில் இந்தியர்களின் முதலீடு அதிகரித்து உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மோடி பேசிய போது அனைவரும் நலமா என்று இந்திய மொழிகள் 6-ல் பேசி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். மேலும் இந்தியாவின் வளர்ச்சி குறித்து பேசிய போது, நாங்கள் எங்களுடன் தான் போட்டியிடுகின்றோம். எங்களை நாங்கள் வளர்த்து கொள்வதற்காக என்ற கூறினார்.
மேலும் படிக்க : நேற்று ஹவுடி மோடியில் நடைபெற்ற முக்கிய அம்சங்கள் என்னென்ன?