இந்தியாவின் பல மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை

இந்திய வானிலை மையம் கனமழை எச்சரிக்கை

அடுத்த 24 மணி நேரத்திற்கு இந்தியாவின் பல மாநிலங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.

இதுகுறித்து இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அருணாச்சல பிரதேசம், அசாம், மேகாலயா, நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம், திரிபுரா, மேற்குவங்கம், சிக்கிம், ஒடிசாவின் கடலோர பகுதிகள், உ.பி., அரியானா, சண்டிகள், டெல்லி, பஞ்சாப், காஷ்மீர், கிழக்கு ராஜஸ்தான், குஜராத், கோவா, மத்திய மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் கேரளாவின் கடலோர பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என எச்சரிக்கப்பட்டுள்ளது. ஒடிசா மற்றும் தெற்கு சட்டீஸ்கரில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே கர்நாடகாவில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள அணைகள் அனைத்தும் நிரம்பி உள்ளன. மேட்டூர் அணையும் அதன் முழு கொள்ளளவை எட்டிவிட்டது. நான்கு ஆண்டுகளுக்கு பிறகு, மேட்டூர் அணை நிரம்பியுள்ளது. தற்போது, 40,000 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கேஆர்எஸ் அணையில் இருந்து 51,038 கனஅடியும், கபினி அணையில் இருந்து 30,000 கனஅடி நீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close