Advertisment

வெளிநாட்டு நன்கொடையை வங்கிக் கணக்கில் வைக்க தடை: நெருக்கடியில் திருப்பதி தேவஸ்தானம்

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா திருப்பதி தேவஸ்தானம் அறக்கட்டளைக்கு நியமிக்கப்பட்ட கணக்கில் "உண்டி" நன்கொடைகள் என விவரிக்கப்படும் வெளிநாட்டு பங்களிப்புகளை டெபாசிட் செய்வதற்கு தடை செய்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Hundi collections: FCRA on hold Tirupati trust Tamil News

Tirumala Tirupati Devasthanams (TTD) Tamil News: நாட்டின் உள்ள பணக்கார மத அறக்கட்டளைகளுள் ஆந்திர பிரதேச மாநிலத்தின் திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) முதன்மையான ஒன்றாக இருந்து வருகிறது. இந்நிலையில், கடந்த 3 ஆண்டுகளாக எஃப்.சி.ஆர்.ஏ (வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டம்) இன் கீழ் பதிவு செய்யப்பட்டதன் மூலம், திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD), முன்னெப்போதும் இல்லாத சூழ்நிலையை எதிர்கொள்கிறது. சமீபத்தில் பெயர் தெரியாத வகையில் ரொக்கமாக வெளிநாட்டு பணம் அதன் 'உண்டியலில்' போடப்பட்டுள்ளது. இதனால், திருப்பதி தேவஸ்தானம் அந்தப் பணத்தை நியமிக்கப்பட்ட வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

Advertisment

ஆந்திரப் பிரதேசத்தின் திருப்பதியைத் தலைமையிடமாகக் கொண்டு, திருமலை வெங்கடேஸ்வரா கோயில் மற்றும் 70 இதர சன்னதிகளை நிர்வகிக்கும் திருப்பதி தேவஸ்தானம், இந்த சூழலில் இருந்து வெளிவர தற்போது அரசின் தலையீட்டைக் கோரியுள்ளது. ஆனால், பதிலுக்காக காத்திருந்த இடைப்பட்ட நேரத்தில் திருப்பதி தேவஸ்தானத்திற்கு அபராதம் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் அறிந்துள்ளது.

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) அறக்கட்டளை அதன் நியமிக்கப்பட்ட கணக்கில் "உண்டி" நன்கொடைகள் என விவரிக்கப்படும் வெளிநாட்டு பங்களிப்புகளை டெபாசிட் செய்வதற்கு தடை செய்துள்ளது. இதன் காரணமாக, வெளிநாட்டு நாணய நன்கொடை ரூ.26.86 கோடி வரை ஒரு வருடத்தில் குவிந்துள்ளது.

திருப்பதி தேவஸ்தானம் சமீபத்தில் உள்துறை அமைச்சகத்திற்கு 11.50 கோடி மதிப்புள்ள அமெரிக்க டாலர்களை உள்ளடக்கிய பிரிப்பை (கீழே பாக்சில் பார்க்கவும்) அனுப்பியது; மலேசியன் ரிங்கிட்ஸ் ரூ.5.93 கோடி, சிங்கப்பூர் டாலர்கள் ரூ.4.06 கோடி என்றும் அதில் குறிப்பிட்டு இருந்தது.

கடந்த ஆண்டு, தகவல்களின்படி, திருப்பதி தேவஸ்தானம் மொத்த "உண்டி வசூல்" ரூ.1,450 கோடி ஆகும்.

மார்ச் 5 அன்று, உள்துறை அமைச்சகத்தின் எஃப்.சி.ஆர்.ஏ பிரிவு திருப்பதி தேவஸ்தானம் தலைமைச் செயலாளருக்கு கடிதம் எழுதியது. அதில் அவர்களின் வருடாந்திர வருமானம் "தவறான" வடிவத்தில் இருப்பதாகவும், ரூ. 3.19 கோடி அபராதம் விதித்ததாகவும் அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் தெரிவித்தன. 2019 ஆம் ஆண்டின் இறுதியில் எஃப்சிஆர்ஏ பதிவை புதுப்பிக்காததால், திருப்பதி தேவஸ்தானம் ஏற்கனவே செலுத்திய ரூ.1.14 கோடி அபராதத்துடன் கூடுதலாக இந்த அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் அணுகிய விவரங்கள், இது "தொழில்நுட்ப முரண்பாடுகள்" மற்றும் நிதியை தவறாகப் பயன்படுத்தவில்லை என்பதை வெளிப்படுத்துகிறது. இதன் காரணமாக கடந்த மூன்று ஆண்டுகளாக திருப்பதி தேவஸ்தானம் மீதான எஃப்.சி.ஆர்.ஏ பதிவு நிறுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு அரசுக்கு அனுப்பிய தங்கள் குறிப்புகளில், அறக்கட்டளையானது ஆந்திரப் பிரதேச அறநிலையத்துறை மற்றும் இந்து சமய நிறுவன அறக்கட்டளைச் சட்டம் (APCHR) 1987 இன் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு இடையே வேறுபாடு இருப்பதாக வாதிட்டது. அதன் கீழ் மற்றும் எஃப்.சி.ஆர்.ஏ-வின் திருத்தப்பட்ட விதிகள் அது நிர்வகிக்கப்படுகிறது.

கொரோனா தொற்று பரவலின் போது ஏற்பட்ட இடையூறு காரணமாக கணக்குகளை தாக்கல் செய்வதில் தாமதம் ஏற்பட்டதாக திருப்பதி தேவஸ்தானம் கூறியது. இது உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளை மேற்கோள் காட்டியது (சமீபத்தில் ஜனவரி 10, 2022 அன்று), அதில் நீதிமன்றங்கள் மற்றும் தீர்ப்பாயங்களில் மனுக்கள்/விண்ணப்பங்கள்/மேல்முறையீடுகளை தாக்கல் செய்வதற்கு வழக்காடுபவர்களுக்கு ஒரு வரம்பு காலம் அனுமதிக்கப்பட்டது.

எஃப்.சி.ஆர்.ஏ சட்டத்தில் 2020 திருத்தங்களின்படி, எஸ்.பி.ஐ வங்கியில் என்.ஜி.ஓ-க்களால் ஒரு கணக்கைத் தொடங்க வேண்டும் என்பது வெளிநாட்டு பங்களிப்புகளை வைப்பது தொடர்பான பிரச்சனைக்கு முக்கியமானது.

இருப்பினும், நன்கொடையாளர்களின் அடையாளம் தெரியாததால் வெளிநாட்டு நாணயத்தை டெபாசிட் செய்ய எஸ்.பி.ஐ வங்கி மறுத்துவிட்டது. அரசாங்கத்திற்கு அனுப்பிய தகவல்களில், "நபரின் விவரங்கள் அறியப்படாத உண்டியில் பெறப்பட்ட" தன்னார்வ பங்களிப்புகளுக்கான செயல்முறையை எஃப்.சி.ஆர்.ஏ சட்டம் குறிப்பிடவில்லை என்று திருப்பதி தேவஸ்தானம் கூறியுள்ளது.

எஃப்சிஆர்ஏவின் கீழ் அனுமதிக்கப்படாத வசதி, வெளிநாட்டு பங்களிப்புகள்/நன்கொடைகள் மீது திருப்பதி தேவஸ்தானம் பெற்ற வட்டியை "பயன்படுத்த" அமைச்சகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

APCHR சட்டத்தின் பிரிவு 111, உண்டியில் டெபாசிட் செய்யப்பட்ட காணிக்கைகள் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் "ஒரு பகுதி" என்று குறிப்பிட்டுள்ளது என்று திருப்பதி தேவஸ்தானம் சுட்டிக்காட்டியுள்ளது. எனவே, அதன் நிலையான வைப்புத்தொகையை "எப்சி (வெளிநாட்டு பங்களிப்பு) முதலில் தாக்கல் செய்த வருமானத்தில் பயன்படுத்தப்பட்டது" எனக் காட்டியது.

அதன் கணக்குகளைத் திருத்துவதற்கான அரசாங்கத்தின் வழிகாட்டுதலைத் தொடர்ந்து, திருப்பதி தேவஸ்தானம் அதன் அறிக்கைகளை - சம்பாதித்த மற்றும் பயன்படுத்திய வட்டி உட்பட - திருத்தி மார்ச் 26, 2022 அன்று சமர்ப்பித்ததாகக் கூறியது.

எவ்வாறாயினும், திருப்பதி தேவஸ்தானம் தனது கணக்குகளின் (முதலீடுகள் மற்றும் சம்பாதித்த வட்டி உட்பட) "விளக்கமாற்றம்" என்று விவரித்தது மத்திய அமைச்சகத்தால் "தவறானது" என்று ஆட்சேபிக்கப்பட்டது மற்றும் ரூ. 3.19 கோடி புதிய அபராதம் விதிக்கப்பட்டது.

இந்தியன் எக்ஸ்பிரஸின் எஃப்.சி.ஆர்.ஏ பதிவு மற்றும் முன்னோக்கிச் செல்லும் வழியில் உள்ள சிக்கல்கள் குறித்த எழுத்துப்பூர்வ கேள்விகளுக்கு திருப்பதி தேவஸ்தானம் தலைமை நிர்வாகி மற்றும் செய்தி தொடர்பு அதிகாரி என யாரும் பதிலளிக்கவில்லை.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

India Tirupati Andhra Pradesh
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment