இஸ்ரோ விஞ்ஞானி ஐதராபாத்தில் சடலமாக மீட்பு

ISRO scientist found dead : இஸ்ரோ மூத்த விஞ்ஞானி சுரேஷ், ஐதராபாத்தில் உள்ள தனது வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம், அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Mother Killed Son, Theni Cumbum
Mother Killed Son, Theni Cumbum

இஸ்ரோ மூத்த விஞ்ஞானி சுரேஷ், ஐதராபாத்தில் உள்ள தனது வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம், அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எஸ்.ஆர். நகர் போலீசார் இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இஸ்ரோவின் நேசனல் ரிமோட் சென்சிங் சென்டரில் மூத்த விஞ்ஞானியாக இருப்பவர் சுரேஷ். கேரள மாநிலத்தை சேர்ந்த இவர், ஐதராபாத்தின் அமீர்பேட் பகுதியில் பிளாட் ஒன்றில் தனியாக வசித்து வருகிறார். மனைவி வங்கி அதிகாரியாக உள்ளார். இவர் சமீபத்தில் தான் சென்னைக்கு மாற்றலாகி சென்றுள்ளார். ஒரு மகன் அமெரிக்காவிலும், மகள் டில்லியிலும் வசித்து வருகின்றனர்.

சுரேஷின் மனைவி, தொலைபேசியில் சுரேஷை பலமுறை தொடர்பு கொண்டும் பதில் இல்லாததால், அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் விசாரிக்க சொல்லியுள்ளார். வீடு தட்டப்பட்டும் திறக்காத நிலையில், எஸ்.ஆர். போலீசில் புகாரில் புகார் அளிக்கப்பட்டது. அவர்கள் வீட்டை உடைத்து பார்த்தனர்.

சுரேஷ், சடலமாக கிடந்தார். சுரேஷின் தலையில் பலத்த காயம் இருந்தது. பெரிய ஆயுதத்தால் கடுமையாக தாக்கியதால் ஏற்பட்ட காயம் ஆக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். வீட்டினுள் நுழைந்த மர்மநபர்கள், இவரை கடுமையாக தாக்கியிருக்கலாம் என்று யூகித்துள்ள போலீசார், விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனர்.

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Hyderabad isro scientist found dead in his flat

Next Story
பெங்களூரு மேயர் தேர்தலில் பா.ஜ. வெற்றி ; பெங்களூரு மேயர் ஆனார் கவுதம் குமார்bbmp elections, karnataka local body elections, bengaluru, bengaluru mayor, BJP, victory
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express