hyderabad kacheguda train accident cctv footage - ஹைதராபாத்தில் நேருக்கு நேர் மோதிய ரயில்கள் - சிசிடிவி வீடியோ வெளியீடு
ஹைதராபாத் கச்சிகுடா ரயில் நிலையத்தில் ஒரே தண்டவாளத்தில் எதிர் எதிராக வந்த இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 16க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Advertisment
Kacheguda Railway Station Accident : ஹைதராபாத் ரயில் விபத்து
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகேயுள்ள கச்சிகுடா ரயில் நிலையத்தில், கர்னூல் - செகுந்தராபாத் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில், நேற்று காலை 10.30 மணியளவில் பிளாட்பாரத்தை நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது, அதே தண்டவாளத்தில் எதிரே வந்த புறநகர் மின்சார் ரயில் எக்ஸ்பிரஸ் மீது மோதியது.
Advertisment
Advertisements
இந்த விபத்தில் ரயில் பெட்டிகள் தடம் புரண்டன. 16க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர். இதில் புறநகர் ரயிலின் ஓட்டுநர் என்ஜினில் சிக்கினார். அவரை மீட்கும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன. சுமார் 8 மணிநேர போராட்டத்துக்குப் பின்னர் ஓட்டுநர் சந்திரசேகர் மீட்கப்பட்டார்.
அவர் உடனடியாக உஸ்மானியா மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
ரயில் நிலையம் என்பதால், ரயில்கள் குறைந்த வேகத்தில் இயங்கியுள்ளன. இதனால், பெரிய அளவிலான விபத்து தவிர்க்கப்பட்டது. சிக்னல் கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்து காரணமாக அந்த வழித்தடத்தில் இயங்கும் பல ரயில்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளது.
இரு ரயில்களும் மோதிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.