ஐதராபாத்தில் தெலுங்கு தொலைக்காட்சியின் பெண் செய்தி வாசிப்பாளர், 5-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீப காலமாக சின்னத்திரையில், பிரபலங்களின் தற்கொலை பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது. தமிழில் தொடங்கி, இந்தி, மலையாளம் என நீண்டு தற்போது தெலுங்கிலும் இது தொடர் கதையாக மாறியுள்ளது. ஐதராபாத்தில் உள்ள தெலுங்கு தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றிய ராதிகா ரெட்டி நேற்று(1.4.18) 5 மாடியிலிருந்து தற்கொலைக் கொண்டுள்ளார்.
தற்கொலைக்கு முன்பு, ராதிகா எழுதி வைத்த கடிதம் ஒன்றும் தற்போது வெளியாகியுள்ளது. அதில் ராதிகா, “ எனது மூளைத்தான் என்னுடைய எதிரி. இந்த தற்கொலைக்கு யாரும் காரணமில்லை. இது நானே தேடிக் கொண்ட முடிவு” என்று எழுதியுள்ளார்.
அதைத்தொடர்ந்து, ராதிகாவின் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்ததாகவும், அதன் காரணமாகதான் தற்கொலை செய்துக் கொண்டது தெரிய வந்துள்ளது.
6 மாதங்களுக்கு முன்பாக தன் கணவரை விவாகரத்து செய்த ராதிகா, அதன்பின்னர் கடும் மன அழுத்தத்தில் இருந்துள்ளார். சம்பவதன்று, வழக்கம் போல் வேலைக்கு சென்று வந்த அவர், இரவு நேரம் திடீரென்று 5 ஆவது மாடிக்கு சென்று அங்கிருந்து கீழே விழுந்துள்ளார்.
விழுந்த வேகத்தில், ராதிகாவின் காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. தலையின் பின்புறம், தரையில் முட்டிய வேகத்தில் சம்பவ இடத்திலியே அவர் உயிரிழந்துள்ளார். ராதிகாவிற்கு 14 வயதில் ஒரு மகன் இருக்கிறான். தனது தாயின் இறப்பை நேரில் பார்த்த அவன், பாட்டி, தாத்தாவிடம் கதறி அழுதது காண்போரையும் கண்கலங்க வைத்துள்ளது. பிரதேச பரிசோதனைக்கு பின்பு, ராதிகாவின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கபடவுள்ளது.