Advertisment

ஹைதராபாத் இரட்டைக் குண்டு வெடிப்பு வழக்கு : செப்டம்பர் 4ல் தீர்ப்பு

170 சாட்சியங்களிடம் விசாரணை மேற்கொண்டு தீர்ப்பு வெளியிடப்படுகிறது...

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ஹைதராபாத் இரட்டைக் குண்டு வெடிப்பு

ஹைதராபாத் இரட்டைக் குண்டு வெடிப்பு

ஹைதராபாத் இரட்டைக் குண்டு வெடிப்பு : ஹைதராபாத் நகரில் கடந்த 2007ம் ஆண்டு ஆகஸ்ட் 25ம் தேதி இரட்டை குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன. ஹைதரபாத்தில் இயங்கி வந்த பிரபலமான உணவகமான கோகுல் சாட் என்ற இடத்தில் இரவு 7.45 மணி அளவில் ஒரு குண்டு வெடித்தது.

Advertisment

அதனை தொடர்ந்து அடுத்த 5வது நிமிடத்தில் ஆந்திர அரசின் தலைமைச் செயலகம் அருகேயுள்ள லும்பினி பூங்கா திறந்தவெளி திரையரங்கம் ஒன்றில் மற்றொரு குண்டு வெடித்தது.

கோகுல் சாட்டில் 32 நபர்களும், லும்பினி பார்க்கில் 10 நபர்களும்ன் உடல் சிதறி உயிரிழந்தனர். 50ற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தார்கள்.

அதன் பின்பு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட ஆந்திர காவல்துறையினர் தில்சுக் நகரில் வெடிக்காத குண்டினையும் கைப்பற்றினார்கள்.

ஹைதராபாத் இரட்டைக் குண்டு வெடிப்பு வழக்கு விசாரணை : 

இந்த வழக்கு கடந்த 12 வருடங்களாக இந்த குண்டு வெடிப்பு வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த வெடிகுண்டு தாக்குதலுக்கு முஜாகிதீன் தீவிரவாதிகள் தான் காரணம் என்று கண்டுபிடிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து இந்த குண்டு வெடிப்பில் சம்பந்தப்பட்ட ஷாஃபிக் சையத், முகமது ஷாதிக், அக்பர் இஸ்மாயில் சௌதரி, அன்சார் அகமது ஷேக் ஆகியோர் 2008ம் ஆண்டு கைது செய்யப்பட்டனர்.

publive-image

செப்டம்பர் 4ற்கு தீர்ப்பு ஒத்தி வைப்பு :

இந்த விசாரணையின் இறுதிக்கட்ட விசாரணை நடந்து முடிந்த நிலையில் இன்று இதன் இறுதி தீர்ப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த விசாரணையின் தீர்ப்பினை வருகின்ற செப்டம்பர் 4ம் தேதிக்கு ஒத்தி வைத்து அறிவித்தது ஹைதரபாத் உயர்நீதி மன்றம்.

இந்த வழக்கு தொடர்பாக இதுவரை 170 பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Hyderabad Bomb Blast
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment