27 வயதான ஹைதராபாத் கால்நடை மருத்துவரின் குடும்ப உறுப்பினர்கள் வெள்ளிக்கிழமை காலை நடந்த என்கவுன்டரில் குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரையும் சுட்டுக் கொன்ற காவல்துறையினருக்கு நன்றி தெரிவித்தனர்.
கொலையான பெண் கால்நடை மருத்துவரின் தந்தை போலீசாரைப் புகழ்ந்து கூறுகையில், “நாங்கள் பல இரவுகள் தூக்கம் இல்லாமல் கழித்திருக்கிறோம். எங்கள் குடும்பம் மட்டுமல்ல, ஹைதராபாத் மக்களும் நாட்டின் மொத்த மக்களும் கோபத்தில் உள்ளனர். அந்த குற்றவாளிகள் தப்பிக்க முயன்றனர். அதனால், அவர்களை சுட்டுக் கொன்றதன் மூலம் போலீசார் சிறப்பாகச் செயல்பட்டுள்ளனர்.” என்று கூறினார். மேலும், அவர் தனது மகளின் ஆத்மா இப்போது நிம்மதியாக இருக்கும் என்றும் கூறினார்.
கொலையான பெண்ணின் சகோதரி கூறுகையில், “நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம். இந்த என்கவுண்ட்டர் கொலையை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. அவர்கள் நீதிமன்றங்கள் மூலம் தூக்கிலிடப்படுவார்கள் என்று நாங்கள் நினைத்தோம்.” என்று கூறினார்.
மேலும், “எங்களுக்கு ஆதரவாக நின்ற அனைவருக்கும் நன்றி. இந்த சம்பவத்துடன், மக்கள் இதுபோல பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட பயப்பட வேண்டும்” என்று அவர் கூறினார்.
குற்றம் நடந்த இடத்தில் அதை நடித்துக்காட்டுவதற்காக குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரையும் வியாழக்கிழமை நள்ளிரவுக்குப் பின் இன்று அதிகாலை சட்டப்பள்ளிக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. அங்கே அவர்கள் காவல்துறையைத் தாக்கிவிட்டு தப்பிக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. அவர்கள் வெறிச்சோடிய பாதையை நோக்கி ஓடியபோது போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் இருட்டைப் பயன்படுத்திக்கொண்டு ஒன்று அல்லது இரண்டு பேர் போலீசில் இருந்து தப்பிக்கலாம் என்று கருதியதாக போலீசார் குற்றம் சாட்டியுள்ளனர்.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் ஒரு அதிகாரி கூறுகையில், குற்றம் சாட்டப்பட்டவளை நள்ளிரவில் குற்ற நிகழ்வுகளை வரிசைப்படுத்தி உறுதிசெய்ய அழைத்துச் செல்லப்பட்டார்கள். அந்த பெண்ணின் உடலை எரிக்க பெட்ரோல் வாங்குவதற்கா நின்ற இடத்திலிருந்து, அவரது இரு சக்கர வாகனம் அப்புறப்படுத்தப்பட்ட இடத்திற்கு, பொதுமக்களுடன் மோதலைத் தவிர்ப்பதற்காக அந்த நேரத்தில் அழைத்து செல்லப்பட்டனர்.” என்று கூறினார்.
இது குறித்து சைபராபாத் போலீஸ் கமிஷனர் வி சி சஜ்ஜனார் கூறுகையில், “அப்போது குற்றம் சாட்டப்பட்டவர்கள் போலீசாரைத் தாக்கினால் காவல்துறையினர் பார்த்துக்கொண்டிருப்பார்களா?” என்று கூறினார்.