வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு- அமித் ஷா ; தீர்ப்பை மதிக்கிறோம் - காங்கிரஸ்
Amit shah in Ayodhya verdict : அயோத்தி வழக்கில், உச்சநீதிமன்றம் வரலாற்று முக்கியத்தும் வாய்ந்த தீர்ப்பை வழங்கியுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்
Amit shah in Ayodhya verdict : அயோத்தி வழக்கில், உச்சநீதிமன்றம் வரலாற்று முக்கியத்தும் வாய்ந்த தீர்ப்பை வழங்கியுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்
அயோத்தி வழக்கில், உச்சநீதிமன்றம் வரலாற்று முக்கியத்தும் வாய்ந்த தீர்ப்பை வழங்கியுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
Advertisment
அமித் ஷா, இந்த தீர்ப்பு தொடர்பாக, டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அவர் அதில் குறிப்பிட்டுள்ளதாவது, அயோத்தி வழக்கில், வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கி, தனது பெருமை மற்றும் புகழை மீண்டும் நிலைநாட்டியுள்ளது. இந்த தீர்ப்பின் மூலம், நாட்டின் ஒற்றுமை ஒருமைப்பாடு மற்றும் பாரம்பரியம் பலப்படுத்தப்பட்டுள்ளது.
ராம் ஜென்மபூமி விவகாரத்தில் சட்டப்பூர்வமாக தீர்வு எட்டப்பட்டுள்ளது. நீண்டகாலமாக நடைபெற்று வந்த இந்த விவகாரத்தில் தீர்வு காணப்பட்டுள்ளது. இதற்காக இந்திய நீதித்துறை மற்றும் நீதிபதிகளுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
முன்னதாக, இந்த வழக்கில், ஒருமித்த தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதிகள் தரப்பு அறிவிக்கப்பட்டது வரவேற்கத்தக்க நிகழ்வு ஆகும் என்று அமித் ஷா குறிப்பிட்டுள்ளார்.
தீர்ப்பை மதிக்கிறோம் - காங்கிரஸ்
அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை காங்கிரஸ் கட்சி மதிப்பதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் செயற்குழு, இந்த தீர்ப்பு குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, அயோத்தி வழக்கின் தீர்ப்பை மதிக்கிறோம். இந்த விவகாரத்தில், அனைவரும் கண்ணியம் காக்க வேண்டும். இந்திய ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் விளைவிக்கும் நடவடிக்கைகளில் யாரும் ஈடுபட வேண்டாம். நாட்டின் ஒருமைப்பாடு, மக்களின் ஒற்றுமை உள்ளிட்டவைகளை காப்பதில் நம் அனைவருக்கும் பங்கு உள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீர்ப்பு தொடர்பாக, டில்லியில் பத்திரிகையாளர்களை சந்தித்த காங்கிரஸ் கட்சி செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சுரஜ்வாலா கூறியதாவது, அயோத்தி விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு வந்துள்ளது. ராமர் கோயில் கட்டுவதற்கு நாங்கள் ஆதரவு அளிக்கிறோம். இந்த தீர்ப்பு, கோயில் கட்டுவதற்கு அனுமதி கதவுகளை மட்டும் திறக்கவில்லை, பா.ஜ., மற்றும் இந்த விவகாரத்தை வைத்து அரசியல் செய்த மற்றவர்களின் கதவுகளையும் மூடி உள்ளது. இவர்களின் அரசியலாக்கும் முயற்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது என்றார்.