I am the only leader who met PM Modi and told him to withdraw CAA says mamata banerjee - 'பிரதமரை சந்தித்து சிஏஏவை கைவிட சொன்ன ஒரே தலைவர் நான் தான்' - மாணவர்களுக்கு மம்தா பானர்ஜி பதில்
பிரதமர் மோடி 2 நாள் பயணமாக இன்று கொல்கத்தா வருகை தந்தார். பாரம்பரியம் மிக்க பழைமை வாய்ந்த கட்டடங்களை புதுப்பிக்கும் திட்டத்தின் கீழ் கரன்சி கட்டடம், பெல்வடேரே ஹவுஸ், மெட்காபே ஹவுஸ் மற்றும் விக்டோரியா மெமரியோல் அரங்கு ஆகியவை புதுப்பிக்கப்பட்டு நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட உள்ளன. கோல்கத்தா துறைமுகத்தின் 150வது ஆண்டு விழாவில் மோடி பங்கேற்றார். இந்த நிகழ்ச்சிகளில் மாநில முதல்வர் மம்தா பானர்ஜியும் பங்கேற்றார்.
Advertisment
கோயம்பேடு திணறுகிறது: பொங்கல் பண்டிகையின் போது நெரிசலை தவிர்க்க சிறப்பு ஏற்பாடுகள்..
தான் ஒரு வசூல் ’மன்னன்’ என்பதை மீண்டும் நிரூபித்த ரஜினி!
மம்தா பானர்ஜி தொடர்ந்து மத்திய அரசை கடுமையாக விமர்சித்தும் மத்திய அரசின் திட்டங்களுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தியும் வருகிறார். பிரதமரையும், மத்திய அரசையும் கடுமையாக மம்தா விமர்சித்து வரும் நிலையில், மோடியும் மம்தாவும் ஒரே மேடையில் சந்தித்துக் கொண்டனர்.
#WATCH West Bengal: Prime Minister Narendra Modi unveiled Dynamic Architectural Illumination with synchronised light & sound system of Rabindra Setu (Howrah Bridge) today, as a part of 150th anniversary celebrations of #Kolkata Port Trust pic.twitter.com/qzOFQBShJb
— ANI (@ANI)
#WATCH West Bengal: Prime Minister Narendra Modi unveiled Dynamic Architectural Illumination with synchronised light & sound system of Rabindra Setu (Howrah Bridge) today, as a part of 150th anniversary celebrations of #Kolkata Port Trust pic.twitter.com/qzOFQBShJb
முன்னதாக கொல்கத்தா விமான நிலையம் வந்த பிரதமர் மோடியை மாநில ஆளுநர், அமைச்சர்கள், பாஜக தலைவர்கள் வரவேற்றனர். இதனைத் தொடர்ந்து ராஜ்பவனுக்கு சென்ற பிரதமர் மோடியை, அங்கு முதல்வர் மம்தா பானர்ஜி சந்தித்து பேசினார்.
பின்னர் மம்தா பானர்ஜி கூறுகையில், "நான் பிரதமர் மோடியிடம், இதைச் சொல்வதற்கு இது பொருத்தமான நேரம் அல்ல. ஆனால் நாங்கள் CAA மற்றும் NPR க்கு எதிராக போராட்டம் நடத்தி வருகிறோம். நாங்கள் பிரிவினைவாதிகளுக்கு எதிரானவர்கள் என்று சொன்னேன். யாரும் அட்டூழியங்களை எதிர்கொள்ளக்கூடாது. CAA குறித்து மறுபரிசீலனை செய்யுங்கள். தயவுசெய்து அதை திரும்பப் பெறுங்கள்" என்று வலியுறுத்தினேன். அதற்கு பிரதமர் மோடி, "சில திட்டமிடப்பட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தான் இங்கு வந்துள்ளேன் என்றும் இதுபோன்ற விஷயங்கள் பின்னர் டெல்லியில் விவாதிக்கலாம்" என்றார்.
இந்நிலையில், மம்தா பானர்ஜி பிரதமர் மோடியை சந்தித்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து, மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இதற்கு பதில் அளித்துள்ள மம்தா, "நரேந்திர மோடியை சந்தித்து, சி.ஏ.ஏ, என்.ஆர்.சி மற்றும் என்.பி.ஆர் ஆகியவற்றை செயல்படுத்த முடியாது என்று அவரிடம் சொன்ன ஒரே தலைவர் நான்" என்று குறிப்பிட்டுள்ளார்.
மோடியை சந்திப்பதில் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்திய முதலமைச்சர், இது அவரது அரசியலமைப்பு கடமை என்று கூறினார். இடதுசாரி மாணவர்கள் அவருக்கு எதிராக எதிர்ப்புத் தெரிவித்ததோடு, CAA க்கு எதிரான போராட்டத்தை நீர்த்துப்போகச் செய்ய விளக்கம் கோரியதையடுத்து, மம்தா இவ்வாறு தெரிவித்துள்ளார்.