வங்காளத்தின் முதலமைச்சர் மம்தா பானர்ஜி சமீபத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில் பிரபல கட்சி ஒன்று தன்னை கொலை செய்ய திட்டமிட்டுள்ளது என்றும், இதற்காக அக்கட்சி கூலிப்படையினர் மூலமாகச் செயல்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார். முதலில் ஒருவரின் ஆளுமையைத் தீர்த்துக்கட்டிய பிறகு, ஆளையே கொலை செய்யத் திட்டமிட்டுள்ளதாக மம்தா கூறினார்.
மேலும், மம்தாவை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ள அரசியல் கட்சி, கூலிப்படையினரை வைத்து, இவரின் வீடு, அலுவலகம் எனச் செல்லும் இடம் அனைத்தையும் உளவு பார்த்து வருவதாகவும் கூறியுள்ளார். இவர் அனைத்தையும் கூறிய மம்தா பானர்ஜி, தான் மரணத்திற்கு அஞ்சுபவர் அல்ல என்றும், மக்களைத் தான் மிகவும் நேசிக்கிறேன் அவர்களின் மேம்பாட்டிற்காகப் பணியாற்றுவேன். அதற்காக யாரும் என்னை மிரட்ட முடியாது என்றும் கூறியிருக்கிறார்.
இவ்வாறு நிலவி வரும் சூழலால் பதற்றம் உருவாகியிருக்கிறது. எனவே, இவரின் பாதுகாப்பிற்காக மம்தாவின் வீட்டை மாற்றுமாறு காவல்துறை மற்றும் உளவுத்துறை அவருக்கு அறிவுரை வழங்கியுள்ளது.