மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் செல்வாக்கைப் பெற்றவரும், தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளருமான ராம மோகன் ராவ், தெலுங்கு நடிகர் பவன் கல்யாணின் ஜன சேனா கட்சியின் அரசியல் ஆலோகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இது பற்றி பேசிய அவர், “பழகுவதற்கு மிகவும் எளிமையானவர் பவன் கல்யாண். கட்சியையும் அவரையும் வழி நடத்த அவரே விரும்பி கேட்டுக்கொண்டதால் தான் ஜன சேனாவில் இணைந்தேன். அவரை பல விஷயங்களில் முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவுடன் ஒப்பிட்டு சொல்ல முடியும்.
நடிகராக இருந்து அரசியலுக்கு வந்து, மக்கள் பற்றியே எப்போது சிந்திக்கும் குணம் ஜெயலலிதா போல், பவனிடமும் உள்ளது. ஜெயலலிதாவுக்கு உறுதுணையாக இருந்தது போல், கடைசிவரை பவன் கல்யாணின் ஆலோசகராக இருக்க விரும்புகிறேன்” என்றார்.