நரேந்திர மோடி போலவே நானும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர் என திரிபுரா முதல்வர் பேச்சு. சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி அகர்தலாவில் 'பராக்ரம் பர்வ்’ (Parakram Parv) என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அந்த விழாவிற்கு தலைமை ஏற்றார் திரிபுரா முதல்வர் பிப்லாப் குமார் டெப்.
நானும் நரேந்திர மோடி போலவே ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவன்
மோடிக்கு ஒரு வயதான தாயார் இருக்கிறார். ஆனால் அவரைக் கூட தன்னுடைய பிரதமர் இல்லத்தில் தங்கவிடவில்லை மோடி. நரேந்திர மோடியின் சகோதரர்களில் ஒருவர் இன்றும் ஆட்டோ ஓட்டி சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்” என்று கூறினார்.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
மேலும் “நரேந்திர மோடி 4 வருடங்களாக இந்தியாவின் பிரதமராக பணியாற்றி வருகிறார். அதற்கு முன்பு 13 வருடங்களாக குஜராத்தின் முதலமைச்சராக செயல்பட்டு வந்தார். இருப்பினும் அவரின் தாய் இன்றும் 10x12 வீட்டில் தான் வசித்து வருகிறார்.
அவரின் மற்றொரு சகோதரர் மளிகைக் கடை வைத்து நடத்தி வருகிறார். உலகில் உங்களால் இது போன்ற மற்றொரு பிரதமரை பார்க்க முடியுமா? என்றும் வங்க மொழியில் பேசி கேள்வி எழுப்பியிருக்கிறார்” பிப்லாப் குமார் டெப்.
மேலும் நானும் ஏழைக் குடும்பத்தை சேர்ந்தவன் தான். அடுத்த மூன்று வருடங்களில் திரிபுரா மாநிலத்தை தலைசிறந்த மாநிலமாக மாற்றிவிடுவோம் என்று அவர் கூறினார்.