காணாமல் போன இந்திய விமானப்படை விமானம்… 13 நபரில் ஒருவர் கூட பிழைக்கவில்லை!

இந்த பெரும் இழப்பினை பொறுத்துக் கொள்ளும் மன திடத்தினை அவர்களின் குடும்பத்தினருக்கு கடவுள் அளிக்க வேண்டும் – அருணாச்சல பிரதேச முதல்வர்

IAF AN-32 Aircraft crash : No survivors among 13 on board aircraft
IAF AN-32 Aircraft crash : No survivors among 13 on board aircraft

ஜூன் 3ம் தேதி மதியம் 12:30 மணிக்கு அசாம் மாநிலத்தின் ஹோர்ஹ்த் என்ற பகுதியில் இருந்து ஷி யோமி மாவட்டத்திற்கு 13 பேர் கொண்ட விமானப்படை குழு ஒன்று சென்றது. 1 மணி அளவில் அவர்களிடம் இறுதியாக விமானநிலையத்தில் இருந்து தொடர்பு கொள்ளப்பட்டது. அதற்கு பின்பு அந்த விமானம் ஷி யோமியில் தரையிறங்கவில்லை. 9 நாட்களாக தொடர் தேடுதல் பணிகளில் ஈடுபட்டு வந்தது பாதுகாப்பு படைக்குழு.

12000 அடிக்கு மேலே அமைந்திருக்கும் லிபோ என்ற பகுதிக்கு 16 கி.மீ வடக்கே, டட்டோவிற்கு வடகிழக்கு பகுதியிலும் காணாமல் போன விமானத்தின் பாகங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக இந்திய விமானப்படை அறிவித்திருந்தது.

இன்று விமானம் விழுந்து நொருங்கிய பகுதிக்கு சென்ற விமானப்படையினர், 13 நபர்களில் ஒருவரும் பிழைத்திருக்கவில்லை என்று அறிவித்துள்ளனர்.

அருணாச்சல பிரதேச முதல்வர் பேமா காண்டு தன்னுடைய இரங்கல் செய்தியினை ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.  விமானப்படை வீரர்கள் மரணமடைந்தது எனக்கு மிகவும் வருத்தம் அளிக்கின்றது. வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு என்னுடைய அஞ்சலிகள். இந்த பெரும் இழப்பினை பொறுத்துக் கொள்ளும் மன திடத்தினை அவர்களின் குடும்பத்தினருக்கு கடவுள் அளிக்க வேண்டும் என்று ட்வீட் செய்துள்ளார்.

மேலும் படிக்க : இஸ்ரோ உதவியுடன் 9 நாட்களாக தேடப்பட்டு வந்த ஏ.என். 32

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Iaf an 32 aircraft crash no survivors among 13 on board aircraft

Next Story
ஆட்சி மாறினாலும் பதவி ஆசை போகவில்லை : திருப்பதி தேவஸ்தான போர்டு பதவியை ராஜினாமா செய்யாத அதிகாரிகளால் பரபரப்புTemples in India - List of Famous temple in India
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com