இந்தியாவின் முப்படை தளபதி பிபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்திய முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் குன்னூர் அருகில் உள்ள நஞ்சப்பசத்திரம் குடியிருப்பு பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. கோவை சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து குன்னூரின் வெலிங்டன் பயிற்சி மையத்திற்கு சென்றப்போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் அதிகாரிகள் எம்.ஐ. -17வி5 என்ற ஹெலிகாப்டரில் பயணம் மேற்கொண்டனர். இந்த ஹெலிகாப்டர் நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே விபத்துக்குள்ளானது.
இந்தநிலையில், குன்னூர் விமானப்படை ஹெலிகாப்டர் விபத்தில் அதில் பயணித்த 14 பேரில் 13 பேர் உயிரிழந்துள்ளதாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
இதனையடுத்து,"ஆழ்ந்த வருத்தத்துடன், ஜெனரல் பிபின் ராவத், திருமதி மதுலிகா ராவத் மற்றும் விமானத்தில் இருந்த 11 பேர் துரதிர்ஷ்டவசமான விபத்தில் இறந்தது இப்போது உறுதி செய்யப்பட்டுள்ளது" என்று இந்திய விமானப் படை ஒரு ட்வீட்டில் தெரிவித்துள்ளது.
“இந்த விபத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களின் குடும்பங்களுக்காக எனது இதயம் துடிக்கிறது. தற்போது வெலிங்டனில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கேப்டன் வருண் சிங் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil