Advertisment

பிறந்து 5 நாட்களேயான குழந்தையுடன் கணவருக்கு அஞ்சலி செலுத்தும் ராணுவ அதிகாரி

பிறந்து 5 நாட்களேயான குழந்தையுடன், ராணுவ உடை அணிந்து, இறந்த தன் கணவரின் சடலத்துக்கு பெண் ராணுவ அதிகாரி அஞ்சலி செலுத்தினார்.

author-image
WebDesk
Feb 24, 2018 13:23 IST
பிறந்து 5 நாட்களேயான குழந்தையுடன் கணவருக்கு அஞ்சலி செலுத்தும் ராணுவ அதிகாரி

பிறந்து 5 நாட்களேயான குழந்தையுடன், ராணுவ உடை அணிந்து, இறந்த தன் கணவரின் சடலத்துக்கு அஞ்சலி செலுத்தும் பெண் ராணுவ அதிகாரியின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisment

அசாமில் விங் கமாண்டராக பணியாற்றி வந்தவர் டி.வட்ஸ். கடந்த 15-ஆம் தேதி விமானப்படை ஹெலிகாப்டர் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில், வட்ஸ் உள்ளிட்ட இரண்டு கமாண்டர்கள் உயிரிழந்தனர்.

டி.வட்ஸின் மனைவி குமுத் தோக்ரா, ராணுவத்தில் மேஜராக பணியாற்றி வருபவர். இந்நிலையில், பிறந்து 5 நாட்களேயான தன் குழந்தையுடன், ராணுவ உடையணிந்து குமுத் மோத்ரா, கணவருக்கு அஞ்சலி செலுத்தப்போகும் புகைப்படம் இணையத்தில் வைரலாகிறது.

குமுத் மோத்ராவின் வலிமையையும், நெஞ்சுரத்தையும் சமூக வலைத்தளங்களில் பலரும் பாராட்டி நெகிழ்ந்து வருகின்றனர்.

#Indian Army
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment