Advertisment

ஹெலிகாப்டர் விபத்தில் உயிர் பிழைத்த குரூப் கேப்டன் வருண் சிங் வீரதீர செயலுக்காக விருது பெற்ற வீரர்

உயிருக்கு ஆபத்தான சூழலில் அனைவருக்கும் முன்மாதிரியாக செயல்பட்டு மிகவும் அமைதியான முறையில் விமானத்தின் கட்டுப்பாட்டை அவர் திரும்பப்பெற்று விமானத்தை செலுத்தியதற்காக சவுரிய சக்ரா விருது வழங்கப்பட்டது.

author-image
WebDesk
New Update
Group captain Varun Singh

Krishn Kaushik

Advertisment

IAF helicopter crash Lone survivor: குன்னூரில் நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் உயிர் பிழைத்த ஒரே ஒரு ராணுவ உறுப்பினரான க்ரூப் கேப்டன் வருண் சிங் தற்போது வெலிங்கடனில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

ஓராண்டுக்கு முன்பு இலகுரக ராணுவ விமானத்தை அவர் ஓட்டிச் சென்ற போது தொழில்நுட்ப குறைபாடு காரணமாக கட்டுப்பாட்டை இழந்தது. கடமைக்கு அப்பால் சென்று அவர் விமானத்தை பத்திரமாக தரையிறக்கினார். இந்த வீரதீர செயலுக்காக இந்த ஆண்டு நடைபெற்ற சுதந்திர தினத்தின் போது அவருக்கு சவுரிய சக்ரா வழங்கி கவுரவிக்கப்பட்டது.

தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் “ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் குரூப் கேப்டன் வருண் சிங் விரைவில் நலம் பெற வேண்டிக்கொள்கிறேன்”என்று குறிப்பிட்டார்.

ஐ.ஏ.எஃப். அதிகாரியான இவர் வெலிங்க்டனின் பாதுகாப்பு சேவை கல்லூரியின் இயக்குநரக அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.கோவை மாவட்டம் சூலூரில் அமைந்திருக்கும் விமானப்படை தளத்தில் விங் கமெண்டராக அவர் பணியாற்றினார்.

அக்டோபர் 12, 2020 அன்று "அவர் ஃப்ளைட் கண்ட்ரோல் சிஸ்டம் (எஃப்சிஎஸ்) மற்றும் பிரஷரைசேஷன் சிஸ்டம் (உயிர் ஆதரவு சுற்றுச்சூழல் கட்டுப்பாட்டு அமைப்பு) ஆகியவற்றின் பெரிய திருத்தத்திற்குப் பிறகு, பெற்றோர் தளத்திலிருந்து விலகி, எல்சிஏவில் ஒரு சிஸ்டம் செக் சோர்ட்டியை பறக்கவிட்டார்".

அவர் பறந்து கொண்டிருந்த விமானம் அதிக உயரத்தில் செல்லும் போது காக்பிட்டில் அழுத்தக் குறைப்பாடு ஏற்பட்டது. இதனை சரியாக கணித்த வருண் விமானத்தை தாழ்வான உயரத்திற்கு கொண்டு வர முயற்சி மேற்கொண்டார். உயரம் குறைய குறைய விமானம் முழுமையாக கட்டுப்பாட்டை இழந்தது.

இது முன்பு எப்போதும் ஏற்படாத பேரழிவாகும். உயரத்தில் விரைவான இழப்பு ஏற்பட்டது. மேலும் கீழுமாக பறந்து ஜி வரம்புகளின் முனைகளை நோக்கி விமானம் சென்றது. இது போன்ற மனம் மற்றும் உடல் அழுத்தத்தின் மத்தியில், உயிருக்கு ஆபத்தான சூழலில் அனைவருக்கும் முன்மாதிரியாக செயல்பட்டு மிகவும் அமைதியான முறையில் விமானத்தின் கட்டுப்பாட்டை அவர் திரும்பப்பெற்று விமானத்தை செலுத்தினார். அதனால் அவருக்கு சவுரிய சக்ரா விருது வழங்கப்பட்டது என்று கூறப்பட்டுள்ளது.

கட்டுப்பாடடற்ற பிச்சிங் மூலமாக மீண்டும் 10 ஆயிரம் அடி உயரத்தில் விமானம் கட்டுப்பாட்டை இழந்தது. விமானி விமானத்தை கைவிடும் முடிவுக்கே வந்துவிட்டார். ஆனால் தனது உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் வகையில் தன்னுடைய தைரியம் மற்றும் திறமையையும் வெளிப்படுத்தி விமானத்தை பாதுகாப்பாக தரை இறக்கினார் வருண் சிங்.

உயிருக்கு மிகவும் ஆபத்தான சூழலில் கூட உயர்ந்த தொழில்முறை, அமைதி, மற்றும் விரைவாக முடிவெடுத்து பொதுமக்களின் சொத்து மற்றும் மக்கள் உயிரையும் பாதுகாத்தார் என்றும் வழங்கப்பட்ட விருதின் ஆவணத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Bipin Rawat
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment