/tamil-ie/media/media_files/uploads/2019/03/Bulgarian_Air_Force_Mikoyan-Gurevich_MiG-21bis_Lofting-4.jpg)
IAF mig21 fighter aircraft crashes
IAF mig21 fighter aircraft crashes : ராஜஸ்தானில் இந்திய விமானப்படை போர் விமானம் கீழே விழுந்து நொறுங்கி விபத்து. விமானி உயிர் தப்பியதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. விபத்துக்கு உள்ளானது மிக் 21 ரக விமானம் என்பது குறிப்பிடத்தக்கது.
IAF mig21 fighter aircraft crashes
ராஜஸ்தானின் சோபா சர் கி தானி என்ற பகுதியில் இந்த விமானம் விபத்திற்குள்ளானது. பைகனேர் நகரத்திற்கு சுமார் 12 கி.மீ அருகில் அமைந்துள்ளது இந்த இடம்.
பறவை மோதியதால் விபத்திற்கு உள்ளானது என்று முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் இந்த விபத்து தொடர்பாக முறையான விசாரணை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரின் புத்காம் பகுதியில் மி-17 போர் விமானம் விபத்துக்குள்ளாகி 6 வீரர்கள் கொல்லப்பட்ட நிலையில் மீண்டும் ஒரு போர் விமான விபத்து ஏற்பட்டது மிகப் பெரும் அதிர்ச்சியை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பான முழுமையான தகவல்களுக்கு தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணையத்துடன் இணைந்திருங்கள்.
மேலும் படிக்க : பாலகோட் தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட வெடிபொருட்கள் குறித்து புதிய தகவல்கள்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us