/tamil-ie/media/media_files/uploads/2019/02/D0UcqWxW0AAHZla.jpg)
IAF Mirage 2000
IAF Mirage 2000 விமானத்தின் சுவாரசிய தகவலகள் : இன்று அதிகாலை, இந்தியா, பாகிஸ்தான் எல்லையில் அமைந்திருக்கும் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பின் முகாம்களை விமானப்படை தாக்குதல் மூலம் அழித்தது. இதற்கு இந்திய விமானப்படையில் இருக்கும் விமானமான மிரேஜ் 2000 பயன்படுத்தப்பட்டது.
IAF Mirage 2000 விமானம் பற்றிய சுவாரசிய தகவலகள்
1982ம் ஆண்டு 36 போர் விமானங்களை ஆர்டர் செய்து பெற்றது இந்திய விமானப்படை. இதற்கு வஜ்ர என்று பெயர் சூட்டியுள்ளது இந்திய ராணுவம்.
கார்கில் போர் 1999ல் இந்த விமானம் பயன்படுத்தப்பட்டது.
ஆரம்பத்தில் ஒருவர் மட்டும் அமர்ந்து பயணிக்கக் கூடிய வகையில் இந்த ஜெட் வடிவமைக்கப்பட்டது. தற்போது விமானப்படையினரின் வேண்டுகோளுக்கு இணங்க இரண்டு பேர் அமர்ந்து பயணிக்கக் கூடிய வகையில் மாற்றம் செய்யப்பட்டது.
இந்த விமானத்தின் மொத்த எடை 7500 கிலோவாகும். எரிபொருட்கள் மற்றும் வெடிகுண்டுகள் ஆகியவை அடங்கும் போது இதன் மொத்த எடை சுமார் 17000 கிலோவாக இருக்கும்.
இதனுடைய அதிகபட்ச வேகம் என்பது மேக் 2.2 (2336 kmph) ஆகும்.
59000 அடி உயரம் வரை பறக்கக் கூடியது இந்த போர் விமானம்.
லேசர் கெய்டட் வெடி குண்டுகள், வானிலேயே இலக்கினை தாக்கி அழிக்கும் ஏவுகணைகள், வானில் இருந்து நிலத்தை நோக்கி இலக்குகளை தாக்கி அழிக்கும் ஏவுகணைகள், துப்பாக்கிகள் ஆகியவற்றை இந்த விமானத்தில் இருந்து இயக்க இயலும்.
ரஃபேல் போர் விமானங்களை உற்பத்தி செய்ய இந்தியா அனுமதி அளித்திருக்கும் டாசால்ட் நிறுவனம் தான் இந்த போர் விமானங்களையும் தயாரித்தது.
ஃபிரான்ஸ் நாட்டில் உருவாக்கப்பட்ட இந்த போர் விமானம் ஃபிரான்ஸ், எகிப்து, அமீரகம், பெரு, தைவான், க்ரீஸ், ப்ரேசில் ஆகிய நாடுகள் பயன்படுத்தி வந்தன. ப்ரேசில் நாடு தற்போது இந்த போர் விமானத்தின் பயன்பாட்டினை நிறுத்திவிட்ட நிலையில், மீத நாடுகள் இன்னும் பயன்படுத்தி வருகின்றன.
கடந்த 30 வருடங்களில் சுமார் 583, மிரேஜ் 2000 ரக போர் விமானங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
மேலும் படிக்க : 1971ம் ஆண்டிற்கு பின்பு பாகிஸ்தான் எல்லையில் இந்த விமானப்படை தாக்குதல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.