/indian-express-tamil/media/media_files/2025/04/06/48fLApOReIrpmlLQsA2Y.jpg)
பிரதாப்கர் மாவட்டத்தைச் சேர்ந்த ராம்குமார் திவாரி, இந்திய விமானப் படையின் ஆகாஷ் கங்கா ஸ்கை டைவிங் குழுவில் பாரா ஜம்ப் பயிற்சியாளராக இருந்தார். சம்பவத்தன்று சுமார் 1,000 அடி உயரத்தில் ஹெலிகாப்டரில் இருந்து ராம்குமார் திவாரி குதித்தார். அப்போது பாராசூட் செயலிழந்து, அவரது உயிரிழப்புக்குக் காரணமாக அமைந்தது.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க கிளிக் செய்யவும்
கீழே விழுந்து படுகாமடைந்த திவாரி உடனடியாக ராணுவ மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும், சில மணி நேரங்களுக்குள் அவர் உயிரிழந்ததாகவும் போலீசார் கூறினர். "ஆகாஷ் கங்கா ஸ்கை டைவிங் குழுவைச் சேர்ந்த பாரா ஜம்ப் பயிற்சியாளர் ஆக்ராவில் நடந்த பயிற்சியின்போது ஏற்பட்ட காயங்களால் உயிரிழந்தார். IAF ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது. குடும்பத்தினருக்கு இதயப்பூர்வமான இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது. இந்த துயர நேரத்தில் அவர்களுடன் உறுதியாக நிற்கிறது" என்று IAF அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு பிப்ரவரியில் மல்புரா டிராப்பிங் பகுதியில் வழக்கமான பாராஜம்பிங் பயிற்சியின் போது கர்நாடகாவைச் சேர்ந்த ஜூனியர் அதிகாரி மஞ்சு நாத் (36) இறந்ததைத் தொடர்ந்து, ஆக்ராவில் சரியான நேரத்தில் பாராசூட் திறக்காததால் 2-வது சம்பவம் இதுவாகும். 2002-ம் ஆண்டு இந்திய விமானப்படையில் சேர்ந்த ராம்குமார் திவார், தனது மனைவி மற்றும் 2 மகன்களுடன் விமானப்படை குடியிருப்பு பகுதியில் வசித்து வந்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.