scorecardresearch

விடுமுறையே அளித்தாலும் விமானப்படையிலேயே தான் இருப்பேன் – அபிநந்தன்

ஏற்கனவே 12 நாட்கள் விடுமுறை முடிந்த பின்னர் மீதம் இருக்கும் 18 நாட்களும் அங்கு தான் அவர் தங்க உள்ளார்.

IAF pilot Abhinandan Varthaman
IAF pilot Abhinandan Varthaman

IAF pilot Abhinandan Varthaman : பிப்ரவரி மாதம் இறுதியில் இருந்து தொடர்ந்து ஹெட்லைனாக இருப்பவர் சென்னையை சேர்ந்த விங் கமாண்டர் அபிநந்தன் வர்த்தமான் தான்.

இந்தியாவிற்குள் நுழைந்த பாகிஸ்தான் விமானங்களை துரத்திச் சென்ற வர்த்தமானின் மிக்-21 பைசன் ஜெட் எல்லை தாண்டி பாகிஸ்தானிற்குள் நுழைய, பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் அவரை சிறைபிடித்தனர்.

IAF pilot Abhinandan Varthaman

2 நாட்கள் விசாரணைக்குப் பிறகு, ஐநாவின் போர் நிறுத்த ஒப்பந்தப்படி அவரை விடுவித்தது பாகிஸ்தான் அரசு. இதனால் போர் சூழல் தவிர்க்கப்பட்டது என்று பாகிஸ்தானின் பிரதமருக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்த வண்ணம் இருந்தன.

மார்ச் 1ம் தேதி வாகா எல்லை வழியாக இந்தியா அழைத்து வரப்பட்டார் அபிநந்தன். அதன் பிறகு இரண்டு வாரங்கள் முழு உடல் பரிசோதனை மற்றும் விசாரணைகளை மேற்கொண்டது இந்திய ராணுவம். பின்னர் நான்கு வாரங்களுக்கு அவருக்கு மருத்துவ விடுமுறை அளிக்கப்பட்டது.

சென்னையில் இருக்கும் அவருடைய இல்லத்திற்கு அவர் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் ஸ்ரீநகரில் இருக்கும் அவருடைய விமானப்படைக்கே சென்றுள்ளார். அங்கே தன்னுடைய மருத்துவ விடுமுறையை கழிக்க விரும்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே 12 நாட்கள் விடுமுறை முடிந்த பின்னர் மீதம் இருக்கும் 18 நாட்களும் அங்கு தான் அவர் தங்க உள்ளார்.

மேலும் படிக்க : அபிநந்தன் புகைப்படத்தை பயன்படுத்திய பாஜக எம்எல்ஏ.. தேர்தல் ஆணையம் எடுத்த அதிரடி ஆக்‌ஷன்!

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Iaf pilot abhinandan varthaman returns to his squadron in srinagar