Advertisment

பாகிஸ்தான் பிடியில் இருக்கும் அபிநந்தன் நிகழ்வு நச்சிகேதாவை நினைவுப்படுத்தும்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
k nachiketa, அபிநந்தன்

k nachiketa, அபிநந்தன்

இந்தியன் விமானப் படை வீரர் ஒருவர் கட்டுப்பாட்டில் உள்ளதாக இஸ்லாமபாத் தெரிவித்தது ஆனால் இது குறித்து இந்திய அரசு கூறுகையில், “மாயமான விமானப்படை வீரர்” பற்றிய தகவல்களை சேகரித்து வருவதாகத் தெரிவித்தது. பாகிஸ்தான் ராணுவ பிடியில் இருப்பது அபிநந்தன் என்பது உறுதி செய்யப்பட்டால், இது 1999ம் ஆண்டு மே 27ம் தேதி பிடிப்பட்ட நச்சிகேதாவை நினைவுப்படுத்துவதாகும்.

Advertisment

கடந்த புதன்கிழமையன்று, இந்திய விமானப்படை விமானத்தை பாகிஸ்தான் தாக்கியதில் விமானப்படை வீரர் ஒருவர் மாயமானதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்தது. இது குறித்து வெளியுறவுத்துறை அதிகாரப்பூர்வமாக கூறுவதற்கு முன்பே, பாகிஸ்தான் ராணுவம் 46 நொடிகள் அடங்கிய வீடியோ ஒன்றை வெளியிட்டது. கண்கள் மூடப்பட்டு காணப்படும் நபர் இந்திய விமானப்படை வீரர் அபினந்தன் என்று கூறப்பட்டது. அன்று மாலையே, அதே நபர் தம்மை பாகிஸ்தான் ராணுவம் நல்லமுறையில் நடத்தியதாக கூறுவது போன்று ஒரு வீடியோ வெளியானது. இந்த இரண்டு வீடியோக்களின் நம்பகத்தன்மை இன்னும் உறுதிசெய்யப்படவில்லை மற்றும் இந்திய அதிகாரிகளும் அந்த வீடியோக்கள் குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை.

நச்சிகேதாவை நினைவுப்படுத்தும் அபிநந்தன்

விமானப்படை வீரர் பிடிப்பட்டிருக்கிறார் என்பது இந்தியா தரப்பில் உறுதி செய்யப்பட்டால், கார்கில் போரில் பாகிஸ்தான் ராணுவத்திடம் ராணுவ வீரர் நச்சிகேதா என்பவர் சிக்கிக் கொண்டதே நினைவுப்படுத்தும். 1999ம் ஆண்டு மார்ச் 27ம் தேதி மிக்-27 விமானம் கோளாறு காரணமாக கீழே விழுந்ததில் அவரை பாகிஸ்தான் ராணுவம் சிறைப்பிடித்தது. பின்னர் எல்லா விசாரணைக்கும் பிறகு அவர் 8 நாட்களுக்கு பிறகு இந்திய நாடு திரும்பினார்.

பாகிஸ்தான் ராணுவத்தின் பிடியில் இருந்த நச்சிகேதா கடுமையாக தாக்கப்பட்டார். உயர் அதிகாரி ஒருவர் குறுக்கிட்டு அவரை தாக்கியவர்களை கண்டித்தார். பின்னர் இந்தியா மேற்கொண்ட நடவடிக்கைகளை தொடர்ந்து அவர் நச்சிகேதாவை ரெட் கிராஸிடம் ஒப்படைத்தனர். பின்னர் அவர்களின் உதவியுடன் இந்தியா திரும்பியவரை அப்போதைய குடியரசு தலைவர் ஆர். நாராயணன் மற்றும் பிரதமர் வாஜ்பாய் வரவேற்றனர்.

அதே போரில், மற்றொரு வீரர் அஜய் அஹுஜா என்பவரும் எதிரியின் பிடியில் மார்ச் 27ம் தேதி சிக்கிக் கொண்டார். அஹுஜா பயணித்த விமானம் தாக்கப்பட்டு கீழே விழுந்தது. அவரின் விமானத்தை தாக்கிய எதிரி படை அருகே உள்ளது என்று தெரிந்து தனது உயிரை நினைத்து ஒரு நொடிப்பொழுதும் யோசிக்காமல், மற்றொரு விமானியை தேடினார். ஆனால் துரதிஷ்டவசமாக எதிரியின் பிடியில் சிக்கிய அவர், பிடிப்பட்டிருக்கும் காலத்திலேயே மரணமடைந்தார்.

India Pakistan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment