IAF Pilot wing commander Abhi Nandan Varthaman release today : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் மத்தியில் போர் பதற்றத்தை தணிக்கும் படியாக முதல் முடிவினை எடுத்துள்ளார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான். பாகிஸ்தானில் சிறை கைதியாக பிடிபட்டிருக்கும் இந்திய விமானி அபிநந்தன் வர்த்தமான் இன்று விடுதலை செய்யப்படுவார் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார்.
உலக நாடுகளின் சீரிய நடிவடிக்கைகளின் பலனாக இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. வர்த்தமான் பயணித்த மிக்-21 பைசன் போர் விமானம் பாகிஸ்தான் விமானப்படையால் தாக்குதலுக்கு ஆளக்கப்பட்ட நிலையில் அதற்கு பதில் தாக்குதல் நடத்தப்பட வேண்டும் என்ற எண்ணத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனவும் உலக நாடுகள் வலியுறுத்தின. அதனைத் தொடர்ந்து பாகிஸ்தானின் பாராளுமன்றத்தில் இந்த அறிவிப்பினை வெளியிட்டார் பிரதமர் இம்ரான் கான்.
முப்படை அதிகாரிகள் செய்தியாளர்கள் சந்திப்பு
நேற்று மாலை முப்படை அதிகாரிகள் நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பில் மேஜர் ஜெனரல் சுரேந்திர சிங் மஹால் கூறும் போது, இந்திய ராணுவம் மக்கள் மத்தியில் அமைதியையும் நிலைத்தன்மையையும் நிலை நிறுத்துவது என உறுதி பூண்டுள்ளது.
தாக்குதலில் முதலில் ஈடுபட்டது பாகிஸ்தான் தான். மீண்டும் இது போன்ற தாக்குதலில் ஈடுபட்டால் நிச்சயம் எதிர் தாக்குதல் நடத்துவோம் என்றும், பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகளுக்கு அளித்துவரும் ஆதரவினை நிறுத்திக் கொள்ளும் வரை தீவிரவாத முகாம்கள் மீதும் பயிற்சியாளர்கள் மீதும் தாக்குதல் தொடரும் என்றும் அறிவித்துள்ளனர்.
பிப்ரவரி 14ம் தேதிக்குப் பிறகு போர் நிறுத்த ஒப்பந்தங்களை நிறைய முறை மீறியுள்ளது பாகிஸ்தான். கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 35 முறை மீறியுள்ளதாக அவர் கூறினார். மேலும் அவர்களின் தாக்குதலுக்கு இந்தியா தக்க பதிலடி குடுத்தது என்பதையும் குறிப்பிட்டார்.
பின்பு ஏர் வைஸ் மார்ஷல் கபூர் பேசினார். அபிநந்தன் வருகைக்காக காத்திருக்கின்றோ என்று கூறிய அவர், பாலகோட் தாக்குதல் குறித்து கேள்வி எழுப்பிய போது, அங்கு தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதிற்கு போதுமான ஆதாரங்கள் எங்களிடம் இருக்கின்றன. ஆனால் அதில் எத்தனை பேர் இறந்தனர் என்பதை சரியாக கூற இயலாது என்றார்.
அதன் பிற்கு நேற்று மாலை, பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பாகிஸ்தானால் பாலகோட் தாக்குதலை ஏற்றுக் கொள்ள இயலாது. அப்படி ஏற்றுக் கொண்டால் அவர்கள் தீவிரவாத அமைப்புகளுக்கு ஆதரவு அளித்து வந்தது உண்மையாகிவிடும் என்றும் கூறினார்.
இந்த விவகாரத்தில் அமெரிக்கா இரு நாடுகளுக்கும் சமரசம் செய்து வைக்க தங்களின் ஆலோசனைகளை முதலில் அளித்தது. பாகிஸ்தானின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி பேசும் போது, தற்போதும் கூட இந்த பிரச்சனைகள் தொடர்பாக இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் பேச தயாராக இருக்கிறார் இம்ரான் கான். ஆனால் அதற்கு டெல்லி நிர்வாகம், முதலில் தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கை. அதன் பின்பு தான் பேச்சு வார்த்தை என்று திட்டவட்டமாக கூறிவிட்டது என்றும் குறிப்பிட்டார்.
மேலும் படிக்க : யார் இந்த விமானி அபிநந்தன் வர்த்தமான் ?