கேராளவில் சமீபகால சர்ச்சைக்கு மையமாக இருந்த கேரள தொழில் மற்றும் வணிகத்துறை இயக்குனர் கே.கோபாலகிருஷ்ணன் மற்றும் வேளாண் துறை சிறப்பு செயலாளர் என்.பிரசாந்த் ஆகிய இரு ஐஏஎஸ் அதிகாரிகளை கேரள அரசு திங்கள்கிழமை சஸ்பெண்ட் செய்தது.
'மலையாள இந்து அதிகாரிகள்' என்ற பெயரில் வாட்ஸ் அப் குழு தொடங்கி பல சமுதாயங்களை சேர்ந்த சக ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இணைத்ததோடு மதம் சார்ந்த கருத்துகளை பதிவிட்ட புகாரில் 2 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை கேரள அரசு சஸ்பெண்ட் செய்ததுள்ளது.
2013-ம் ஆண்டு பேட்ச் அதிகாரியான கோபாலகிருஷ்ணன், இந்த மாதம் “மல்லு இந்து அதிகாரிகள்” (மலையாள இந்து அதிகாரிகள்) என்ற வாட்ஸ்அப் குழுவை உருவாக்கியதைத் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கினார். 2017-ம் ஆண்டு பேட்ச் அதிகாரியான பிரசாந்த், கடந்த மூன்று நாட்களாக சக ஐஏஎஸ் அதிகாரியான கூடுதல் தலைமைச் செயலாளர் ஏ.ஜெயதிலக்கிற்கு எதிராக சமூக ஊடகங்களில் பல கருத்துகளை வெளியிட்டு இவரும் சர்ச்சையில் சிக்கினார்.
தலைமைச் செயலாளர் சாரதா முரளீதரனின் அறிக்கையின் அடிப்படையில் இருவரையும் சஸ்பெண்ட் செய்ய முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டார். முந்தைய நாள், வருவாய்த்துறை அமைச்சர் கே ராஜன், “அதிகாரிகளை அவர்கள் நினைப்பது போல் செயல்பட அரசாங்கம் அனுமதிக்காது… அதிகாரிகள் விதிமுறைகள் மற்றும் நடைமுறைகளின்படி செயல்பட வேண்டும்” என்று கூறினார்.
"மல்லு இந்து அதிகாரிகள்" குழு அக்டோபர் 30 ஆம் தேதி உருவாக்கப்பட்டது, அதில் இந்து மதத்தை பின்பற்றும் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டனர். பல அதிகாரிகள் இந்த குழுவுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த குழு உருவாக்கப்பட்ட சில மணிநேரங்களில் டெலிட் செய்யப்பட்டது.
இதன்பின் ஓரிரு நாளில், கோபாலகிருஷ்ணன் தனது மொபைல் போன் ஹேக் செய்யப்பட்டு பின்னர் குழு உருவாக்கப்பட்டதாக போலீசில் புகார் கூறினார். இருப்பினும், கோபாலகிருஷ்ணன் சஸ்பெண்ட் செய்யப்பட்ட உத்தரவில், போலீஸ் விசாரணையில் அவர் கூறியது போல் போன் ஹேக் செய்யப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று தெரியவந்துள்ளது.
ஆங்கிலத்தில் படிக்க: IAS officer caught in ‘Hindu-Muslim’ WhatsApp group row suspended in Kerala: ‘Created communal formations and alignments within cadres’
மேலும் தடயவியல் பரிசோதனைக்கு அவர் போனை சமர்ப்பிப்பதற்கு முன்பு பலமுறை போன் ரீசெட் செய்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது" என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
கூடுதல் தலைமைச் செயலாளர் ஜெயதிலக்கிற்கு எதிராக சமூக ஊடகங்களில் பல பதிவுகளை வெளியிட்டதை அடுத்து மற்றொரு அதிகாரி பிரசாந்த் இடைநீக்கம் செய்யப்பட்டார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.