/indian-express-tamil/media/media_files/jFX9hJtWjb5R9IwKQuvy.jpg)
ஆந்திரப் பிரதேச முன்னாள் முதல்வர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டியின் ஜூப்ளி ஹில்ஸ் இல்லத்திற்கு வெளியே நடைபாதையில் கட்டப்பட்டு இருந்த 2 தற்காலிக பாதுகாவலர் அறைகளை இடிப்பதற்கு அனுமதித்த ஒரு நாள் கழித்து அவரை இடமாற்றம் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஐதராபாத் மாநகராட்சி மண்டல ஆணையராக (கைரதாபாத் மண்டலம்) இருந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி போர்கோட் ஹேமந்த் சஹதியோராவ்வை தெலங்கானா அரசு ஞாயிற்றுக்கிழமை இடமாற்றம் செய்துள்ளது. ஆந்திரப் பிரதேச முன்னாள் முதல்வர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டியின் ஜூப்ளி ஹில்ஸ் இல்லத்திற்கு வெளியே நடைபாதையில் கட்டப்பட்டு இருந்த 2 தற்காலிக பாதுகாவலர் அறைகளை இடிப்பதற்கு அனுமதித்த ஒரு நாள் கழித்து அவரை இடமாற்றம் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆங்கிலத்தில் படிக்க: IAS officer transferred day after demolition of 2 sheds outside former CM Jagan Reddy’s home
தெலங்கானா முதல்வர் ஏ. ரேவந்த் ரெட்டி நகராட்சி நிர்வாக இலாகாவை வைத்துள்ளார். மேலும், முன்னாள் முதல்வர் ஒருவரின் வீட்டிற்கு வெளியே உள்ள கட்டிடங்கள் இடிக்கப்பட்டது குறித்து தகவல் தெரிவிக்காமல் இருந்ததால் முதல்வர் அலுவலகம் கோபமடைந்தது.
தாமரைக்குளம் குடியிருப்புக்கு வெளியே உள்ள இரண்டு அறைகள் ஜெகனின் பாதுகாப்புக் குழுவினரால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், அது குறுகிய சாலையில் இடையூறாக இருந்தது. இது பயணிகளின் புகார்களுக்கு வழிவகுத்தது. தெலங்கானா அரசாங்கத்தில் ஒரு அமைச்சர் புகார் அளித்துள்ளதாகவும், 2018-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ் அதிகாரியான போர்கோட், தனது அதிகார வரம்பிற்குட்பட்ட குழுக்களை அவைகளை இடிக்குமாறு கேட்டுக் கொண்டதாகவும் வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும், ஜெகன் மோகன் ரெட்டி இனி முதல்வராக இல்லாததால், அவரது இல்லத்திற்கு வெளியே அதிக அளவிலான பாதுகாப்புப் பணியாளர்கள் இருப்பதில்லை என்றும் கூறப்பட்டது.
உயர் அதிகாரிகளை வளையத்தில் வைத்திருந்தால், முன்னாள் முதல்வரின் வீட்டை இடிக்கும் முன், முதலமைச்சர் அலுவலகத்திடம் தெரிவித்து அனுமதி பெற்றிருப்பார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஐதராபாத் மாநகராட்சி பொறுப்பு ஆணையர் அம்ரபாலி கதா, சஹதியோராவை நிர்வாக காரணங்களுக்காக இடமாற்றம் செய்து, பொது நிர்வாகத் துறைக்கு அறிக்கை அளிக்கும்படி உத்தரவிட்டார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.