/tamil-ie/media/media_files/uploads/2018/09/3-26.jpg)
sbi bank onlinenetbanking
IBPS Clerk 2018 Recruitment Notification Out: வேலை வாய்ப்பை தேடி அலைக்கும் இளைஞர்களுக்காக ஐ.பி.பி.எஸ் தேர்வாணையம் இந்தாண்டிற்கான (2018 - 19) வங்கிகளில் கிளார்க் பதவிற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
IBPS Clerk 2018 Recruitment Notification Out:
வங்கிகளுக்கு, ஊழியர்களை தேர்வு செய்யும் பணியை 'ஐ.பி.பி.எஸ்.,' (Institute of Banking Personnel Selection) தேர்வாணையம் ஏற்று நடத்தி வருகிறது.இந்த வரிசையில் 2018 - 19ம் ஆண்டுக்கான ஐ.பி.பி.எஸ்., கிளார்க் பதவிக்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகளில் மொத்தம் 7275 கிளார்க் பணிக்கான காலியிடங்கள் உள்ளன. இந்த பணியில் சேர விரும்புவர்கள் ஐ.பி.பி.எஸ். தேர்வாணையத்தின் அதிகாரப் பூர்வ இணையதளாத்தில் விண்ணபிக்கலாம். அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதாவது ஒரு பட்டப்படிப்பு முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
தேர்வு குறித்த முழு விபரம் :
விண்ணப்பிப்பவர்களுக்கான வயது வரம்பு 20 - 28 வயதுக்குள் இருக்க வேண்டும். முதலில் பிரிலிமினரி ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடத்தப்படும். கட்-ஆப் மதிப்பெண் அடிப்படையில் இதில் தேர்ச்சி பெறுவோர் மெயின் தேர்வுக்கு தேர்வு செய்யப்படுவர். மெயின் தேர்வில் கட்-ஆப் மதிப்பெண்கள் அடிப்படையில் பணியிடங்களில் வேலைக்கு அமர்த்தப்படுவர்.
இத்தேர்வுக்கு www.ibps.in என்ற இணையதளத்தில் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். செப்டம்பர் 18 முதல் அக்டோபர் 10 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.மேலும் விவரங்களுக்கு www.ibps.in என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.
இந்த தேர்வில் ஆப்ஸ் கணிதம், ரீசனிங், இங்கிலிஸ் நாலேஜ், பொது அறிவு, நடப்பு நிகழ்வுகளில் இருந்துதான் கேள்வி அமையும்.
முக்கியமான நாட்கள்:
விண்ணப்பிக்க வேண்டிய நாட்கள்: செப்டம்பர் 18 முதல் அக்டோபர் 10 ஆம் தேதி வரை, இதே நாட்களுக்குள் தேர்வு எழுதுவதற்கான ஃபீசகியும் கட்டி முடித்திருக்க வேண்டும். நவம்பர் 26 முதல் டிசம்பர் 1 ஆம் தேதி வரை பயிற்சி வகுப்புகள் நடைபெறும். பிரிலிமினரி ஆன்லைன் தேர்வுகள் டிசம்பர் 8,9. 15, 16 ஆகிய நாட்களில் நடைபெறும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.