வங்கி பணியாளர்கள் தேர்வு நிறுவனம் (The Institute of Banking Personnel Selection (IBPS)) சார்பில் கிராமப்புற வங்கிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு ஆங்கிலம், இந்தி மட்டுமல்லாது 13 பிராந்திய மொழிகளில் நடத்தப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் மக்களவையில் தெரிவித்துள்ளார்.
Examination for Regional Rural Banks to be conducted in 13 regional languages: Smt @nsitharaman@PIB_India @MIB_India @BJPLive pic.twitter.com/eutp9Vp1BI
— NSitharamanOffice (@nsitharamanoffc) 4 July 2019
கிராமப்புற வங்கிகளில் காலியாக உள்ள அதிகாரி ( ஸ்கேல் 1) மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு அதிகளவில் உள்ளூர் இளைஞர்கள் தேர்ந்தெடுக்கும் பொருட்டு, இப்பணிக்கான தேர்வு, 13 பிராந்திய மொழிகளில் நடத்தப்படும் என்று அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்துள்ளார்.
அதிகாரி (ஸ்கேல் 1) பணியிடங்களுக்கான தேர்வு, ஆகஸ்ட் மாதம் 3, 4 மற்றும் 11ம் தேதிகளிலும், அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வு ஆகஸ்ட் 17, 18 மற்றும் 25ம் தேதிகளில் நடைபெற உள்ளது.
இந்த பணியிடங்களுக்கு வங்கிபணியாளர்கள் தேர்வு நிறுவனம்( IBPS), முதனிலை, மெயின், நேர்காணல் முறைகளில் பணியாளர்களை தேர்வு செய்கிறது.நேர்காணல் நடவடிக்கைகளை, நபார்டு உதவியுடன் IBPS மேற்கொள்கிறது. இந்த பணியிடங்கள், 2020 ஜனவரி மாதத்திற்குள் நிரப்பப்படும்
வங்கிபணியாளர்கள் தேர்வு நிறுவனம்( IBPS), அதிகாரி பணியிடங்களுக்கான தேர்வுக்கான பயிற்சியை, ஆதிதிராவிடர், பழங்குடியினர், சிறுபான்மை சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு வழங்குகிறது. அதேபோல, அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வுக்கான பயிற்சியை ஆதிதிராவிடர், பழங்குடியினர், சிறுபான்மை சமூகத்தினர், முன்னாள் ராணுவ வீரர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு வழங்குகிறது.
இந்த தேர்வுக்கான பயிற்சி, வாராங்கல், அனந்தபூர், கவுகாத்தில அஜ்மீர், ரேபரேலி, குண்டூரு, ராய்ப்பூர், காந்திநகர், ஸ்ரீநகர், லக்ஜோ, மண்டி, ஜம்மு, ராஞ்சி, தார்வாத், வாரணாசி, மலப்புரம், பாட்னா, இம்பால், ஜோத்பூர், ஷில்லாங், அய்ஜ்வால், கோஹிமா, இந்தூர், புவனேஸ்வர், சேலம், ஹவுரா, மொராதாபாத், புதுச்சேரி, லூதியானா, கோரக்பூர், ரோதக், ராஜ்கோட், ஐதராபாத், அகர்தலா, முஜாபர்பூர், டேராடூன் மற்றும் நாக்பூர் மையங்களில் வழங்க உள்ளன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.