covid -19 : அனைத்து நபர்களையும் பரிசோதித்தல் நல்லது.. ஐசிஎம்ஆர் தகவல்!

இந்தியா போன்ற ஒரு பெரிய நாட்டில் கோவிட் 19 சோதனைக்கான அணுகல் இன்னும் பெரிய சவாலாகவே உள்ளது

இந்தியா போன்ற ஒரு பெரிய நாட்டில் கோவிட் 19 சோதனைக்கான அணுகல் இன்னும் பெரிய சவாலாகவே உள்ளது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ICMR

ICMR

Karishma Mehrotra :

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) கோவிட் 19 சோதனையில் அனைத்துவிதமான அறிகுறிகள் உள்ள நபர்களையும் பரிசோதனைக்கு உட்படுத்தலாம் என தெரிவித்துள்ளது.

Advertisment

ஐ.சி.எம்.ஆர் கடந்த செவ்வாய்க்கிழமை கோவிட் 19 பரிசோதனையில் புதிய கட்டுப்பாடுகளை முன்வைத்துள்ளது. நாட்டின் ஒவ்வொரு பகுதிகளில் உள்ள அனைத்து அறிகுறிகளுடன் இருக்கும் நபர்களை பரிசோதனைக்கு உட்படுத்துதல் ஆகும். மருத்துவமனைகள், கட்டுப்பாட்டு பகுதிகள், ரெட் அலர்ட் பகுதிகள், உறுதிப்படுத்தப்பட்ட கோவிட் 19 தொற்று உள்ளவர்களுடன் நேரடி தொடர்பில் இருந்தவர்கள், மருத்துவமனை சார்ந்த ஊழியர்கள், பயணம் மேற்கொண்டவர்களுக்கு மட்டுமே இப்போது பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இவர்களுடன் அனைவரையும் பரிசோதனைக்கு உட்படுத்துதல் நல்ல முன்னேற்றத்தை தரும் என ஐ.சி.எம்.ஆர் குறிப்பிட்டுள்ளது.

ஜூன் 23 வரை 73,52,911 கொரோனா மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 2,15,195 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன என ஐசிஎம்ஆர் தகவல் அளித்துள்ளது.

ஐ.சி.எம்.ஆரின் கீழ் தொற்றுநோயியல் மற்றும் கண்காணிப்பு பணிக்குழுவின் உறுப்பினர் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிடம் ,கூறியிருப்பதாவது, “ எந்த ஒரு அறிகுறியும் இல்லாத நபர்களுக்கும் சோதனை அறிவுறுத்தப்பட்டது இதுவே முதல் முறையாகும்.

Advertisment
Advertisements

"சோதனை, தடமறிதல் மற்றும் சிகிச்சையானது நோய்த்தொற்று பரவுவதைத் தடுப்பதற்கும் உயிர்களைக் காப்பாற்றுவதற்கும் ஒரே வழி என்பதால், நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள அனைத்து நபர்களுக்கும் சோதனை மேற்கொள்ள வலியுறுத்தப்படுவது அவசியமாகிறது.

தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்கான வழி சோதனை வழிமுறைகள் மூலம் மேலும் பலப்படுத்தப்படுகிறது. பல்வேறு சோதனைகளின் மாதிரிகளை பயன்படுத்துவதன் மூலம் COVID-19 தொற்றை கட்டுப்படுத்தவும் தேவையான நடவடிக்கைகள் குறித்தும் அனைத்து மாநில அரசுகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கும் ஐ.சி.எம்.ஆர் அறிவுறுத்தியுள்ளது என்றார்”

ஐ.சி.எம்.ஆர் தனியார் மருத்துவமனைகள், அலுவலகங்கள் மற்றும் பொதுத்துறை பிரிவுகளை சார்ந்த நிறுவனங்களுக்கு கண்காணிப்பு நடவடிக்கையாக ஆன்டிபாடி பரிசோதனையை நடத்துமாறு வலியுறுத்தியுள்ளது. "இது சுகாதாரப் பணியாளர்கள், அலுவலக ஊழியர்கள் போன்றோரின் அச்சத்தையும் பதட்டத்தையும் போக்க உதவும்" என்றும் ஐ.சி.எம்.ஆர் சார்ந்த உறுபினர்கள் கூறுகின்றனர். இதற்கு முன்பு ஆன்டிபாடி பரிசோதனை ஆலோசனைகள் கட்டுப்பாட்டு மண்டலங்கள், புலம்பெயர்ந்தோர் மையங்கள் மற்றும் சுகாதார வசதிகள் குறித்து கவனம் செலுத்தியிருந்தன.

புதிய வகையான சோதனைக் கருவிகள் சேர்க்கப்பட்ட போதிலும், இந்தியா போன்ற ஒரு பெரிய நாட்டில் கோவிட் 19 சோதனைக்கான அணுகல் இன்னும் பெரிய சவாலாகவே உள்ளது. "விரைவான நோயை கண்டறியும் சோதனைகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் நோய் கட்டுப்பாட்டை தீவிரப்படுத்தலாம்.

சோதனையின் அளவை அதிகரிக்க ஒரு முறையான தேவை உள்ளது. மேலும், சில சூழ்நிலைகளில் ஐ.ஜி.ஜி அடிப்படையிலான ஆன்டிபாடி சோதனைகளுடன் செரோசர்வேக்கள் முறையை கையாளுவதன் மூலம் சில விளைவுகளையும் சந்திக்க நேரிடுகிறது. இதைக் கருத்தில் கொண்டு, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் சோதனைகளின் அணுகல் மற்றும் கிடைக்கும் தன்மையை மேம்படுத்த கூடுதல் சோதனை முறைகளைச் சேர்க்க இப்போது பரிந்துரைக்கப்படுகிறது.

முந்தைய ஆன்டிஜென் சோதனை உத்திகளை சுகாதார அமைப்புகள் பட்டியலிட்டுள்ள நிலையில், புதிய ஆலோசனை அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகள் மற்றும் அங்கீகாரம் பெற்ற தனியார் மருத்துவமனைகள் மற்றும் ஆய்வகங்கள் சோதனைக் கருவியைப் பயன்படுத்த வேண்டும் என்று குறிப்பிடுகிறது. முந்தைய ஆலோசனைக் கூட்டத்தில் பாதுகாப்பு, காவல்துறை, பத்திரிக்கை துறை, கிராமப்புற மக்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், நகராட்சி அமைப்பு ஊழியர்கள், ஓட்டுநர்கள், விமான ஊழியர்கள் மற்றும் கைதிகள் உள்ளிட்டோருக்கு ஆன்டிபாடி சோதனை முன்னிலைப்படுத்தப்பட்டது.

பல புதிய நோயறிதல் சோதனைகள் சேர்க்கப்பட்டுள்ளதால், சாத்தியமான அனைத்து புதிய நோயறிதல் நுட்பங்களையும் பயன்படுத்துமாறு ஆலோசகர்கள் கூறுகின்றனர். இவை அனைத்தும் கட்டுப்பாட்டு மண்டலங்களில் அல்லது அதற்கு வெளியே, மருத்துவமனைகள் அல்லது அதற்கு வெளியே உள்ளவர்களுக்கும் பொருந்தும். ”அறிகுறி உள்ள அனைவரையும் சோதிக்க வேண்டும்” என்று ஐசிஎம்ஆரின் ஆராய்ச்சி மேலாண்மை, கொள்கை, திட்டமிடல் மற்றும் பயோமெடிக்கல் கம்யூனிகேஷன் தலைவர் ரஜினி காந்த் ஸ்ரீவாஸ்தவா கூறியுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Corona Coronavirus Corona

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: