IE100: The list of most powerful Indians in 2019: இந்தியன் எக்ஸ்பிரஸ் 2019 ஆம் ஆண்டில் அதிகாரமிக்க 100 இந்தியர்களைப் பட்டியலிட்டுள்ளது. இந்த பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், ஜெயசங்கர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். கடந்த ஐந்து ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட அதிகாரக் கட்டமைப்பு வலுவூட்டப்பட்டிருக்கிறது என்பது இந்த 2019 ஆம் ஆண்டில் தெளிவாகத் தெரிகிறது.
303 இடங்களுடன் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்து அதிகாரத்தை புதுப்பித்து வலுப்படுத்தியதோடு மட்டுமல்லாமல், நிறுவனங்கள் மற்றும் அரசாங்கத்திற்கு வெளியேயும் சமன்பாடுகளை மறுவடிவமைக்கத் தொடங்கியுள்ளது. அதன்படி இந்தியன் எக்ஸ்பிரஸின் அதிகாரமிக்கவர்கள் பட்டியல் 2019 வெளியிட்டுள்ளது.
இந்த பட்டியலில் மிக அதிகாரம் மிக்க 10 நபர்களில் பாஜக – ஆர்.எஸ்.எஸ்.-ஐ சேர்ந்தவர்களைத் தவிர இந்தியாவின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவரும் மேலாண்மை இயக்குனருமான முகேஷ் அம்பானியும் இடம் பெற்றுள்ளனர். இதில் முதல் 20 பேர்களில் எதிர்க்கட்சியைச் சேர்ந்த பஞ்சாப் முதலமைச்சர் அமரிந்தர் சிங், காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி ஆகிய இருவர் மட்டுமே இடம் பெற்றுள்ளனர்.
பிராந்திய தலைவர்கள் பெரிய வீழ்ச்சியைக் கண்டுள்ளனர். மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி 6வது இடத்தில் இருந்து 21வது இடத்துக்கு சென்றிருக்கிறார். இந்த பட்டியலில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோர் 70களில் உள்ளனர். லாலு பிரசாத்தின் குடும்பம் இன்னும் மோசமாக உள்ளது. ஹர்திக் படேல் மற்றும் ஜிக்னேஷ் மேவானி போன்றோர் வெறும் தலைப்புச் செய்திகளாக மட்டுமே இருக்கின்றனர்.
இந்த பட்டியல் மேலும் ஒரு செய்தியைக் கூறுகிறது. அது என்னவென்றால் காஷ்மீரில் ஏற்பட்ட கிளர்ச்சியாகும். 370வது பிரிவை திருத்துவதன் மூலம் மோடி அரசாங்கம் ஜம்மு காஷ்மீரின் வரலாறு மற்றும் புவியியலை துணிச்சலாக மாற்றி அமைத்ததில் முன்னணி பங்கு வகித்தவர்களில் ஒருவரான தேசிய பாதுகாப்பு முகமையின் (என்.எஸ்.ஏ) அஜித் தோவல் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனைவிட அதிகாரமிக்கவர்கள் பட்டியலில் 7வது இடத்தில் உள்ளார்.
களத்தில் திட்டத்தை செயல்படுத்தும் மனிதராக ஜம்மு காஷ்மீர் தலைமைச் செயலாளர் பி.வி.ஆர். சுப்ரமண்யம் உள்ளார். ஒரு காலத்தில் அம்மாநிலத்தில் அனைத்து அதிகாரங்களும் மிக்க அப்துல்லாக்கள் மற்றும் முப்திகளைவிட முன்னணியில் பி.வி.ஆர். சுப்ரமண்யம் உள்ளார்.
இருப்பினும், சுப்ரமண்யம் தவிர அரசாங்கத்தின் செல்வாக்குகளை வைத்திருக்கும் அதிகார மட்டங்கள் இன்னும் சிலர் உள்ளனர். அவர்களின் ஓய்வுக்குப் பிறகு முக்கிய அமைச்சகங்களுக்கு பலரை நியமிக்கப்பட்டுள்ளனர்(முன்னாள் வெளியுறவு செயலாளர் எஸ்.ஜெய்சங்கர் நேரடியாக வெளியுறவு அமைச்சர் ஆனார்.)
விதிவிலக்காக இந்த பட்டியலில் முதல் 40 இடங்களில் அரசியல் மற்றும் வணிகத்தில் முக்கிய நபர்களாக பிரதமர் அலுவலக அதிகாரி பி.கே.மிஸ்ரா மற்றும் பி.கே. சின்ஹா மற்றும் அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கவ்பா ஆகியோர் உள்ளனர். அரியனையின் பின்னால் அதிகாரம் குவிவதால் பட்டியலில் உள்ள மற்ற குரல்களுக்கான இடம் சுருங்கி வருகிறது.
ஒரு வணிக அழுத்தத்தை சந்திப்பதால் வணிக உலகம் பெரும்பாலும் அமைதியாக இருப்பைக் குறிக்கிறது.
விளையாட்டில், கிரிக்கெட் உலகக் கோப்பையை வெற்றிகொள்ள முடியாவிட்டாலும் இந்த பட்டியலில் விராட் கோலி இடம் பெற்றிருக்கிறார். அதே போல, இறகுப் பந்து போட்டியில் உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றதன் மூலம் பி.கோபிசந்த் மற்றும் பி.வி.சிந்துவும் அதிகாரம் மிக்கவர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
கான்களால் நீண்ட காலமாக ஆதிக்கம் செலுத்தப்படும் பொழுதுபோக்கு உலகமும் சலசலப்பைக் காட்டுகிறது. அது அளவுக்கு அதிகமாக விரிவடைந்துவருகிறது. பாலிவுட்டின் புத்திசாலித்தனமானவராக கரண் ஜோஹர் இடம் பெற்றுள்ளார்.
பாக்ஸ் ஆபிஸுக்கு வெளியே வெற்றி என்றால் பிரதமர் மோடியுடன் ஒரு நேர்காணலை செய்ததிலும் அவருடைய பதவியேற்புக்கான அழைப்பிலும் – அக்ஷய் குமார் மற்றும் கங்கனா ரனாவத் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இதற்கு அடுத்து என்றென்றைக்கு பிடித்தமானவர்கள் உள்ளனர். மோடி அண்ட் நிறுவனமும் இப்போது அந்த மரியாதைக்கு உரிமை கோர முடியும் என்றாலும் 2014 முதல் இந்த பட்டியலில் முதலிடம் வகித்திருப்பதால் இந்த களம் அமிதாப்பச்சனுக்கு சொந்தமாகிறது.
சில தரவரிசையில் ஏற்ற இறக்கமும், சில சர்ச்சைகளில் மேலே கீழே என இருந்தாலும் 76 வயதான சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் தாதாசாகேப் பால்கே விருது பெற்றுள்ளார்.
அதிகாரமிக்கவர்கள் பட்டியல்

1.நரேந்திர மோடி, 69, இந்தியாவின் பிரதமர், (2018-இல் முதல் இடம்)
ஏன்?
பொதுத் தேர்தல்களில் 303 இடங்களைப் பெற்று சாதனை படைத்த முதன்மை சிற்பியாக நரேந்திர மோடி இரண்டாவது முறையாக பிரதமராகி கட்சி மற்றும் ஆட்சி என அரசாங்கத்தின் அனைத்து அம்சங்களையும் பெற்றுள்ளார். உதிரிகளான எதிர்க்கட்சிகள் அவரது வலிமையான பிரபலத்தையும் அவரது ஆணை மற்றும் கட்டுப்பாட்டையும் பெருக்க மட்டுமே உதவியது.
முக்கிய அதிகார நடவடிக்கை
தனது இரண்டாவது பதவியேற்பில் ஒரு வேகமான தொடக்கத்துடன் இறங்கினார். முக்கியமான உள்துறை அமைச்சகத்தில் தனது நம்பிக்கைக்குரிய அமித்ஷாவை நியமித்தார். முத்தலாக் மசோதா, ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தல் சட்டமாக்கினார். அமெரிக்காவின் ஹூஸ்டனில் பிரதமர் நட்சத்திரமானது முன்னாள் வெளிவிவகாரத்துறை அமைச்சராக தேர்வு செய்தது எல்லா சந்தேகத்தையும் தீர்த்துள்ளது.
அடுத்தது என்ன?
அவரது முதல் பதவிக்காலத்தின் நலத்திட்டங்கள் பாஜகவின் 2019 வெற்றியில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருந்ததால், பொருளாதார வீழ்ச்சியை எதிர்கொண்டு நல்லெண்ணத்தைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும்.
இதுமட்டுமில்லாமல், தொலைக்காட்சி செய்தி சேனல்களில் ஒரு நாளைக்கு பலமுறை டிக்கர்களில் ஒளிபரப்பாவதைப் பார்க்கிறார்.

2. அமித்ஷா, 54, மத்திய உள்துறை அமைச்சர் (2018-இல் 2வது இடம்)
ஏன்?
பாஜகவை வெற்றிகரமான தேர்தல் வெற்றி இயந்திரமாக மாற்றியவர் அமித்ஷா. இப்போது நரேந்திர மோடி அரசாங்கத்தின் மிக சக்திவாய்ந்த அமைச்சராக உள்ளார். அமைச்சராக அவர் எடுத்த முடிவுகள் பாஜக மற்றும் அதன் கருத்தியல் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். இன் உள் வட்டங்களில் புதிய இரும்பு மனிதர் என்ற பட்டத்தை அவருக்குப் பெற்றுத் தந்துள்ளது.
முக்கிய அதிகார நடவடிக்கை
உள்துறை அமைச்சராக இருந்த தனது முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடரில், அமித்ஷா 370 வது பிரிவை திருத்தம் செய்து ஜில்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை பறிக்கவும் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கவும் மசோதாக்களை நகர்த்தினார். இதுவரை அவர் இந்த இரண்டு நகர்வுகளையும் வெற்றிகரமாக வழிநடத்தியுள்ளார்.
அடுத்து என்ன?
ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க.வின் இதயங்களுக்கு நெருக்கமான ஒரு முக்கிய நிகழ்ச்சி நிரல் – 370 வது பிரிவை திருத்தம் செய்து ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது. பாஜகவின் நீண்டகால வாக்குறுதியான அயோத்தியில் ராமர் கோயில் மற்றும் ஒரு பொது சிவில் சட்டம் உள்ளிட்ட பிற நீண்டகால சங்க கோரிக்கைகள் மீதான ஷாவின் நகர்வுகள் இருக்கும் என்று பார்க்கப்படுகிறது.
இதுமட்டுமில்லாமல், கடந்த சில மாதங்களாக அவர் மராத்தா வரலாற்றைப் பற்றி விரிவாக வாசித்து வருகிறார்.

3. நீதிபதி ரஞ்சன் கோகாய், 64, இந்தியாவின் தலைமை நீதிபதி (2018-இல் 45வது இடம்)
ஏன்?
இவர் அஸ்ஸாம் முன்னாள் முதலமைச்சர் கேஷப் சந்திர கோகாயின் மகன். நீதிபதி கோகாய் 2012 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். ஜனவரி 2018-இல் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளுக்கு வழக்குகள் ஒதுக்கப்படுவது தொடர்பாக எழுந்த பிரச்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த 4 நீதிபதிகளில் ஒருவர். இது அவர் உச்ச நீதிமன்ற நீதிபதியாக உயர்த்தப்படுவதற்கான ஒரு பின்னணியைக் காட்டியது.
முக்கிய நடவடிக்கை
இவரது தலைமையிலான ஒரு அமர்வு அஸ்ஸாமின் தேசிய குடிமக்கள் பதிவின் முடிவை உறுதிப்படுத்தியது. இவருடைய தலைமையிலான மற்றொரு அமர்வு உயர் நீதிமன்றங்கள் கீழமை நீதித்துறையில் காலியிடங்களை நிரப்பாததற்காக பணிக்கு அழைத்துச் சென்றது. உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 31-இல் இருந்து 34 ஆக உயர்த்த அரசாங்கத்திடம் கேட்டுப் பெற்றார்.
அடுத்து என்ன?
அவர் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வு, அயோத்தி நில உரிமை வழக்கில் விசாரணைகளை விரைவாக மேற்கொண்டுள்ளது. மேலும், இரு தரப்பினரும் தங்களுடைய வாதங்களை முடிவுக்கு கொண்டுவர காலக்கெடுவை நிர்ணயித்துள்ளது. அனைத்தும் உறுதியாக இருந்தால், நவம்பர் 17 ஆம் தேதி ரஞ்சன் கோகாய் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பதவியில் இருந்து ஓய்வு பெறுவதற்கு முன்னர் இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்கக்கூடும்.
இது மட்டுமில்லாமல். இவர் தொடர்ந்து பயணிக்க விரும்புபவர்.

4.மோகன் பகவத், 68,
ஆர்.எஸ்.எஸ் தலைவர் (2018-இல் 4வது இடம்)
ஏன்?
அவருக்கு கீழ், அடுத்தடுத்த தேர்தல்களில் பலம் பெற ஆர்.எஸ்.எஸ் உதவியது. பகவத் ஆர்.எஸ்.எஸ். தன்னை மீண்டும் கண்டடைவதற்கான நடவடிக்கைகளைத் தொடங்கினார். அதன் சொற்பொழிவுகளை மூடிய கதவுகளுக்குள் ரகசியமாக இருந்ததை திறந்த தளங்களுக்கு மாற்றினார். கடந்த ஆண்டு ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்தில் அதன் தன்னார்வலர்கள் கூட்டத்தில் உரையாற்ற மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் குடியரசுத் தலைவருமான பிரணாப் முகர்ஜியை அழைந்த்திருந்தார்.
முக்கிய நடவடிக்கை
தலைநகரில் நடந்த ஒரு மாநாட்டில் பகவத் பாஜகவின் காங்கிரஸ் இல்லாத இந்தியா என்ற முழக்கத்திற்கு அதிருப்தி தெரிவித்தார். தேசத்தைக் கட்டியெழுப்புவது ஒருவரால் செய்ய முடியாது என்று கூறினார்.
அடுத்து என்ன?
பாஜக அனைத்து அதிகாரங்களுடனும் தனது கருத்தியல் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். இடமிருந்து அதிகம் விலகாமல் இருப்பதை பகவத் உறுதி செய்ய வேண்டும்.
இதுமட்டுமில்லாமல், ஒருமுறை சமூக ஊடகங்கள் வேண்டாம் என்று கூறினார். இப்போது அவருக்கு ட்விட்டர் கணக்கு உள்ள நிலையில், அவர் ஒருபோதும் ட்வீட் செய்வதில்லை.

தலைவர் மேலாண்மை இயக்குனர், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
5. முகேஷ் அம்பானி, 62,
தலைவர் மேலாண்மை இயக்குனர், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (2018-இல் 10வது இடம்)
ஏன்?
மிகப் பெரிய பணகார இந்தியர். இவருடைய எண்ணெய் தொலைத்தொடர்பு கூட்டு நிறுவனம் மிகப்பெரிய லாபம் ஈட்டும் நிறுவனமாகும். இந்த நிதியாண்டில் ரூ.35,000 கோடிக்கு மேல் நிகர லாபம் ஈட்டியுள்ளது. அவரது ரிலையன்ஸ் ஜியோ இந்தியாவின் மிகப்பெரிய தொலை தொடர்பு ஆப்பரேட்டர் சந்தாதாரர்களின் எண்ணிக்கை 331 மில்லியனாக உள்ளது.
முக்கிய நடவடிக்கை
இப்போது நாட்டின் மிகப்பெரிய சில்லறை விற்பனையாளரான ரிலையன்ஸ் குழுமம் சமீபத்தில் உலகின் மிகப்பெரிய பொம்மை சில்லறை விற்பனையாளரான ஹாம்லீஸை வாங்கியது.
அடுத்து என்ன?
ஒருங்கிணைப்பு மற்றும் கடன் குறைப்பு ஆகியவை அம்பானிக்கு முன்னோக்கி செல்வதற்கான வழி என்று தெரிகிறது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சவுதி அரம்கோவிற்கு சுமார் 20 சதவீத பங்குகளை விற்பனை செய்வதாக அறிவித்துள்ளது.
இதுமட்டுமில்லாமல், அர்மானி ஹ்யூகோ பாஸ், ஜிம்மி சூ மற்றும் எம் அண்ட் எஸ் உள்ளிட்ட 55-க்கும் மேற்பட்ட உலகளாவிய பிராண்டுகளின் கூட்டுறவை இந்தியாவில் கூட்டாக நடத்துகிறார்.

6.ராஜ்நாத் சிங், 68, பாதுகாப்பு அமைச்சர் (2018-இல், 7வது இடம்)
ஏன்?
மத்திய அமைச்சரவை வரிசையில் பிரதமர் மோடிக்கு அடுத்தபடியாக தொழில்நுட்ப ரீதியாக நம்பர் 2. ராஜ்நாத் சிங் இப்போது ரைசினா ஷில்ஸில் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக வசிக்கிறார். முதலில் உள்துறை அமைச்சராகவும் பிறகு இப்போது பாதுகாப்பு அமைச்சராகவும் இருக்கிறார். தேசிய பாதுகாப்பின் அனைத்து அம்சங்களையும் கையாளும் இரு அமைச்சகங்களுக்கு தலைமை தாங்கும் அரிய கௌரவத்தை பெற்றுள்ளார்.
முக்கிய அதிகார நடவடிக்கை
மோடி இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்தபோது அரசாங்கம் புதிய அமைச்சரவைக் குழுக்களை அறிவித்தபோது, ராஜ்நாத் சிங் இரண்டில் மட்டுமே இருந்தார். ஆனால், அமித்ஷா அனைத்திலும் இருந்தார். ஆனால், 16 மணி நேரத்திற்குள் இந்த குழுக்களில் ராஜ்நாத் சிங் உறுப்பினராக உள்ளார் என்று அரசாங்கம் தனது உத்தரவை திருத்திக்கொண்டது.
அடுத்து என்ன?
நாட்டின் தலைமை பாதுகாப்பு பணியாளர்களைத் தேர்ந்தெடுப்பது.
இதுமட்டுமில்லாமல், மோடியின் முதல் அரசாங்கத்தின் போது அமெரிக்கா அல்லது இங்கிலாந்துக்கு விஜயம் செய்யாத ஒரே பாஜக அமைச்சராக ராஜ்நாத் சிங் இருந்தார்.

7.அஜித் தோவல், 74, தேசிய பாதுகாப்பு முகமையின் ஆலோசகர் (2018-இல் 23வது இடம்)
ஏன்?
தேர்ந்தெடுக்கப்பட்ட சிலரில், இவர் ஆகஸ்ட் 5 காஷ்மீர் திட்டத்தைப் பற்றி அறிந்திருப்பதாகக் கூறப்படுகிறது. தோவலின் யோசனைகள் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை அகற்றுவதற்கான முடிவில் ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருந்தன.
முக்கிய நடவடிக்கை
பள்ளத்தாக்கு முடக்கப்பட்ட நிலையில், தோவல் காஷ்மீரில் முகாமிட்டார். இவர் மோடி அரசாங்கத்தின் முதல் அதிகாரிகளில் ஒருவர். களத்தின் நிலைமையை அறிய மோடி -2ல் மீண்டும் நியமிக்கப்பட்ட பின்னர், அவரது அந்தஸ்து அமைச்சரவை பதவிக்கு உயர்த்தப்பட்டுள்ளது.
அடுத்து என்ன
பாதுகாப்புத் தளபதியின் அலுவலகத்தை அமைக்க அரசாங்கம் முடிவு செய்துள்ள நிலையில், என்.எஸ்.ஏ இப்போது மிகவும் பயனுள்ள தேசிய பாதுகாப்பு உத்தியைக் கொண்டு வர முடியும்.
இதுமட்டுமில்லாமல், இவர் பாலிவுட் நட்சத்திரம் அக்ஷய் குமாரின் ஒரு படத்தில் நடிக்க வாய்ப்புள்ளது.

8. நிர்மலா சீதாராமன், 60, நிதி அமைச்சர் (2018-இல் 22வது இடம்)
ஏன்?
ஒரு தசாப்தத்தில், ஒரு காலத்தில் ஜே.என்.யு-வில் படிக்கும் போது தாராள சிந்தனையாளர்கள் குழுவில் அங்கம் வகித்த நிர்மலா சீதாராமன் 2006 ல் பாஜகவில் சேர்ந்தார். ஒரு குறைவான தகுதி உள்ள தலைவராக இருந்து தொலைக்காட்சி விவாதங்களில் கட்சியின் குரல் கொடுக்கும் பாதுகாவலராக உயர்ந்தார். இந்தியாவின் முதல் பெண் பாதுகாப்பு அமைச்சராக இருந்தார். இப்போது நிதி அமைச்சராக உள்ளார். நிர்மலா சீதாராமன் உண்மையில், பாதுகாப்புக்கான உயரடுக்கு அமைச்சரவைக் குழுவின் ஒரே பெண் உறுப்பினர்.
முக்கிய நடவடிக்கை
நிதியமைச்சராக, 1991-92 சீர்திருத்தங்களுக்குப் பின்னர் மிகப்பெரிய பெருநிறுவன வரி விகிதக் குறைப்பை அவர் அறிவித்துள்ளார்.
அடுத்து என்ன?
இந்திய பொருளாதாரம் சருக்குப்பாதையில் சவாரி செய்வதால், எந்தவொரு நிதி அமைச்சருக்கும் இது கடினமான காலம்தான்.
இது மட்டுமில்லாமல், இவரிடம் கைத்தறி புடவைகளின் பெரிய சேகரிப்பு உள்ளது. நெசவாளர்களிடமிருந்து நேரடியாக வாங்குகிறார்.

9.நிதின் கட்கரி, 62,
சாலை மற்றும் நெடுஞ்சாலை போக்குவரத்து மற்றும் சிறு மற்றும் மத்திய தொழில் நிறுவனங்கள் அமைச்சர் (2018-இல் 12வது இடம்)
ஏன்?
மோடியின் முதல் ஆட்சிகாலத்தில் மிக வெற்றிகரமான அமைச்சர்களில் ஒருவராக அவர் கருதப்பட்டார், நெடுஞ்சாலைத் துறையை மீண்டும் உற்சாகப்படுத்திய பெருமைக்குரியவர். மோட்டார் வாகனங்கள் (திருத்தம்) மசோதா இரண்டாவது பதவிக்காலத்தின் தொடக்கத்தில் நிறைவேற்றப்படுவது பெரும்பாலும் கட்கரியின் விடாமுயற்சியின் விளைவாகவும், எதிர்க்கட்சித் தலைவர்களுடனான அவரது தனிப்பட்ட சமன்பாடுகளின் விளைவாகவும் காணப்படுகிறது.
முக்கிய நடவடிக்கை
மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் கடுமையான அபராதங்களை எதிர்ப்பதில் பாஜக ஆட்சி செய்யும் பல மாநிலங்கள் இருந்தபோதிலும், அவர் தனது நோக்கத்தில் குறியாக உள்ளார்.
அடுத்து என்ன?
டெல்லி-மும்பை அதிவேக நெடுஞ்சாலை போன்ற உயர் மதிப்பு திட்டங்களை வழங்குவது, நில செலவுகள் அதிகரித்த போதிலும், வாகனங்களை அகற்றுவது குறித்த கொள்கையை விரைவாகக் கண்காணிப்பது அவரது முன்னுரிமைப் பகுதிகளாக உள்ளன.
இதுமட்டுமில்லாமல், இவருக்கு இந்தி பாடல்களைப் பாடுவது மிகவும் பிடிக்கும்.

10. ஜே.பி.நட்டா, 58, பாஜக செயல்தலைவர்
ஏன்?
அமித்ஷா அமைச்சரவையில் இணைந்தவுடன் பாஜகவில் அவரது வலது கையாக இருப்பவர் ஜே.பி.நட்டா. உலகின் மிகப்பெரிய அரசியல் கட்சியின் உட்கட்சி தேர்தல் செயல்முறை முடிந்ததும் அதன் ஆட்சியைக் கைப்பற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமாஜ்வாடி – பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணிக்கு எதிராக உத்தரப் பிரதேசத்தில் கட்சியின் பொறுப்பாளராக 2019 தேர்தலின் போது நட்டா தனது திறனை நிருபித்தார்.
முக்கிய நடவடிக்கை
அவரது தலைமையின் கீழ், கட்சி 7 கோடி புதிய உறுப்பினர்களைச் சேர்த்துள்ளது.
இதுமட்டுமில்லாமல், இவர் ஒரு தூய்மை விரும்பி. அவர் தொடர்ந்து சுத்தம் செய்வதற்காக தனது மேஜையில் ஒரு டஸ்டரை வைத்திருக்கிறார்.
இவர்களை அடுத்து, அதிகாரமிக்கவர்கள் பட்டியலில் இடம்பெற்றவர்கள் வரிசையாக குறிப்பிடப்படுகிறது.
மேலும், அதிகாரம் மிக்க 100 இந்தியர்களின் பட்டியலை கீழே உள்ள இணைப்பில் ஆங்கிலத்தில் விரிவாக காணலாம்: .https://indianexpress.com/article/india/ie100-list-of-most-powerful-indians-in-2019-narendra-modi-amit-shah-mukesh-ambani-gogoi-mohan-bhagwat-6039930/
11. யோகி ஆதித்யநாத், 47,
உத்தரபிரதேச முதல்வர் (2018-இல் 9வது இடம்)
12. தேவேந்திர ஃபட்னாவிஸ், 49
மகாராஷ்டிரா முதல்வர் (2018இல் 16வது இடம்)
13. பியூஷ் கோயல், 55
ரயில்வே, வர்த்தக அமைச்சர் (2018-இல் 33வது இடம்)
14. தர்மேந்திர பிரதான், 50
பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் (2018-இல் 32வது இடம்)
15. அமரீந்தர் சிங், 77
பஞ்சாப் முதல்வர் (2018இல் 31வது இடம்)
16. பி எல் சந்தோஷ், 53
பொதுச் செயலாளர் (அமைப்பு), பாஜக
17. சோனியா காந்தி, 72
இடைக்கால காங்கிரஸ் தலைவர் (2018-இல் 5வது இடம்)
18. நிதீஷ் குமார், 68
பீகார் முதல்வர் (2018-இல் 49வது இடம்)
19. பி கே மிஸ்ரா, 71
பிரதமர் மோடியின் முதன்மை செயலாளர் (2018-இல் 44வது இடம்)
20. ரவிசங்கர் பிரசாத், 65
சட்டம் & நீதி; தகவல் தொடர்பு, மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் (2018இல் 38வது இடம்)
21. மம்தா பானர்ஜி, 64
மேற்கு வங்க முதல்வர்; திரிணாமுல் காங் தலைவர் (2018இல் 6வது இடம்)
22. சுப்ரமண்யம் ஜெய்சங்கர், 64
வெளிவிவகார அமைச்சர்
23 பிரகாஷ் ஜவடேகர், 68
சுற்றுச்சூழல், காடுகள், காலநிலை மாற்றம்; தகவல் மற்றும் விளம்பர அமைச்சர் (2018இல் 56வது இடம்)
24. உத்தவ் தாக்கரே, 59
சிவசேனா தலைவர் (2018-இல் 40வது இடம்)
25. ராகுல் காந்தி, 49
காங்கிரஸ் மூத்த தலைவர் (2018இல் 11வது இடம்)
26. ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி, 47
ஆந்திர மாநில முதல்வர்; ஒய்.எஸ்.ஆர்.சி.பி தலைவர் (2018-இல் 35வது இடம்)
27. உதய் கோடக், 60
எம்.டி & சி.இ.ஓ, கோட்டக் மஹிந்திரா வங்கி
28.கௌதம் அதானி, 57
தலைவர், அதானி குழுமம் (2018இல் 29வது இடம்)
இந்த பட்டியலில் இந்த பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், ஜெயசங்கர் தவிர திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 30வது இடத்தைப் பெற்றிருக்கிறார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 43வது இடத்தைப் பிடித்துள்ளார். ஜம்மு காஷ்மீர் தலைமைச் செயலாளர் பி.வி.ஆர்.சுப்ரமண்யம் 44வது இடத்தைப் பிடித்துள்ளார். கர்நாடக இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா 45வது இடத்தைப் பிடித்துள்ளார்.இதன் மூலம் இந்தியன் எக்ஸ்பிரஸின் அதிகாரம் மிக்க 100 இந்தியர்களின் பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த 6 பேர் இடம்பிடித்துள்ளனர்.
மேலும், அதிகாரம் மிக்க 100 இந்தியர்களின் பட்டியலை கீழே உள்ள இணைப்பில் ஆங்கிலத்தில் விரிவாக காணலாம்: .https://indianexpress.com/article/india/ie100-list-of-most-powerful-indians-in-2019-narendra-modi-amit-shah-mukesh-ambani-gogoi-mohan-bhagwat-6039930/