If India asks help i will do it says RBI former governor Raghuram Rajan
RBI former governor Raghuram Rajan : கொரோனா நோய் தொற்றினால், ஏற்கனவே சரிவில் இருந்த இந்தியாவின் பொருளாதாரம் மேலும் மோசம் அடைந்துள்ளது. நிலைமைகள் சரியாக காலம் ஆகும். இந்நிலையில் ஆர்.பி.ஐ முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜனிடம் ”இந்தியா மீண்டும் உங்களின் சேவை தேவை என அழைத்தால் வருவீர்களா?” என்று தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றில் அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு அவர் நிச்சயமாக வந்து பொறுப்பினை ஏற்றுக் கொள்வேன் என்று கூறியுள்ளார்.
Advertisment
சமீபத்தில் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் “அனைத்து நிகழ்வுகளும் பிரதமரின் அலுவலகத்தை மையமாக கொண்டு செயல்பட்டால் ஒன்றும் சரி வராது. துறை சார் வல்லுநர்களை அழைத்து அவர்களிடம் உதவி கேட்க வேண்டும் என்று அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கணிசமாக தினமும் உயர்ந்து கொண்டே உள்ள நிலையில் ஊரடங்கு உத்தரவு மேலும் சில வாரங்களுக்கு நீட்டிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. எந்த வேலைகளும் நடைபெறாத நிலையில், இந்தியா மட்டுமல்லாது உலக நாடுகளில் நடைபெற்று வந்த அனைத்துவிதமான தொழில்களும் முடங்கியுள்ளது.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியில் இருக்கும் பொருளாதார நிபுணர்களான முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் நிதி அமைச்சரான ப.சிதம்பரம், தன்னுடைய வேலையை ராஜினாமா செய்துவிட்டு சென்ற ஆர்.பி.ஐ வங்கியின் முன்னாள் ஆளுநர் போன்றோரிடம் ஆலோசனைகளை பெற்றால் பொருளாதார சரிவை சமாளித்து இந்தியா மீடேற வாய்ப்பு உள்ளது என்று பலரும் கருதுகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”