ஐ.ஐ.டி பம்பே கலாச்சார விழாவில், மார்ச் 31 அன்று நடந்த கலை நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக "ராஹோவன்" என்ற தலைப்பில் நாடகம் நடத்தப்பட்டது. ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த நாடகம் ராமரைச் சித்தரித்த விதம் சர்ச்சைக்கு உள்ளாகியது. இந்த நிகழ்வின் வீடியோக்கள் ஏப்ரல் 8 அன்று, சமூக வலைதளங்களில் வைரலாகிய நிலையில், இந்த விவகாரம் கலை சுதந்திரம் மற்றும் மத உணர்வுகள் பற்றிய விவாதத்தை தூண்டியது.
இதனையடுத்து, நடத்தை விதிகளை மீறியதற்காக ஐ.ஐ.டி பாம்பேயின் ஒழுங்குமுறைக் குழு முன்பு மாணவர்களுக்கு அபராதம் விதித்தது. இருப்பினும், ஐ.ஐ.டி பாம்பே அதிகாரிகள் மாணவர்களுக்கான அபராதம் எவ்வளவு எனபதை தீர்மானிக்கிறார்கள் என்பது குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டனர்.
இந்த நிலையில், ராமர், சீதையை இழிவுபடுத்தும் வகையில் நாடகம் அரங்கேற்றியதாக இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐ.ஐ.டி) பாம்பே, மாணவர்களுக்கு ரூ.1.2 லட்சம் அபராதம் விதித்துள்ளது. இது கிட்டத்தட்ட ஒரு செமஸ்டர் கட்டணத்திற்கு சமம் ஆகும்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: IIT Bombay fines students up to Rs 1.2 lakh for ‘derogatory’ play on Ram, Sita
இந்த விவகாரத்தில் குறைந்தது 7 மாணவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒழுங்கு நடவடிக்கையின் தன்மை மற்றும் அபராதத்தின் அளவு ஆகியவற்றைக் கண்டறிய முடியவில்லை. நிறுவனம் எடுத்த நடவடிக்கை குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் கேட்டபோது, ஐ.ஐ.டி பாம்பே செய்தித் தொடர்பாளர் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.
ஐ.ஐ.டி பம்பே ஜூன் 4 அன்று மாணவருக்கு ‘பெனால்டி’ அறிவிப்பை வெளியிட்ட நிலையில், அதற்கு முன்னதாக, நாடகம் தொடர்பான புகார்களைத் தீர்ப்பதற்காக மே 8 ஆம் தேதி ஒழுங்குக் குழுக் கூட்டம் கூட்டப்பட்டது. கேள்விக்குரிய மாணவர் கூட்டத்தில் பங்கேற்றார்கள். மேலும் "ஆலோசனைகளின்" அடிப்படையில், குழு தண்டனை நடவடிக்கைகளை பரிந்துரைத்தது.
1.20 லட்சம் அபராதம் ஜூலை 20, 2024 அன்று மாணவர் விவகாரங்களின் டீன் அலுவலகத்தில் செலுத்தப்பட வேண்டும் என்றும், அந்த மாணவர் நிறுவனத்தின் ஜிம்கானா விருதுகளிலிருந்து எந்த அங்கீகாரத்தையும் பெறுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அபராதத்தை மீறினால் மேலும் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என்று கூறப்பட்டது.
நடவடிக்கை எடுக்கப்பட்ட மாணவர்கள் பேச மறுத்தாலும், இந்த மாத தொடக்கத்தில் அபராதம் விதிக்கப்பட்டதை அவர்களுடன் உடனிருக்கும் மாணவர்கள் உறுதிப்படுத்தினர். "நிர்வாகத்துடன் உரையாடல் மூலம் நிலைமையை தீர்க்க மாணவர்கள் நம்பினர், ஆனால் ஒரு மாணவரின் தண்டனை அறிவிப்பு கடந்த புதன்கிழமை சமூக ஊடகங்களில் கசிந்தது" என்று மாணவர் ஒருவர் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் தெரிவித்தார்.
மற்றொரு மாணவர், 'இந்த நாடகத்தை ராமாயணத்தின் மாற்றப்பட்ட பாத்திரப் பெயர்கள் மற்றும் கதைக்களத்தின் 'பெண்ணிய' மறுவிளக்கம் என்று விவரித்தார். பார்வையாளர்களும் எதிர்க்கவில்லை, நடுவர்களும் எதிர்க்கவில்லை' என்று அவர் கூறினார்.
ஜூலையில் பட்டம் பெற்ற மாணவர்கள் உட்பட நாடகத்தில் ஈடுபட்ட எட்டு மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாணவர்கள் தெரிவித்தனர். பட்டம் பெறும் மாணவர்கள் அதிக அபராதங்களை எதிர்கொண்டனர். அதே சமயம் படிப்பைத் தொடர்பவர்கள் குறைவான அபராதம் மற்றும் விடுதி இடைநீக்கங்களை எதிர்கொள்கின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.