Advertisment

கள்ள நோட்டைக் கண்டுபிடிக்கும் ’ஆப்’ - அசத்திய ஐ.ஐ.டி மாணவர்கள்!

நாட்டில் பெரும் பிரச்னையாக இருக்கும் கள்ளநோட்டைக் கண்டுப்பிடிக்க, ஆப் உருவாக்கிய இவர்களை பலரும் பாராட்டி வருகின்றனர்.  

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
iit kharagpur students invented mobile app for detecting fake notes

காரக்பூரிலுள்ள ஐ.ஐ.டி மாணவர்கள் கள்ள நோட்டைக் கண்டுப்பிடிக்கும் மொபைல் ஆப்பை கண்டறிந்துள்ளனர்.

Advertisment

ஐ.ஐ.டி-யில் கணினி அறிவியல் துறையில் பயிலும் 6 மாணவர்கள், இந்திய ரூபாயில் இருக்கும் கள்ள நோட்டுகளை கண்டுபிடிக்க ஆப் ஒன்றை உருவாக்கியுள்ளனர்.

25 சிறப்பு அம்சங்கள் அடங்கியிருக்கும் அந்த செயலியானது, ரூபாய் நோட்டுகளின் புகைப்படங்கள் மூலம் இயங்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சந்தோஷ், சதீஷ்குமார் ரெட்டி, விபுல் தொமர், சாய் கிருஷ்ணா, திருஷ்டி துள்சி, டி.வி.சாய் சூர்யா ஆகிய 6 பேர் அடங்கிய குழு இதனைக் கண்டறிந்துள்ளது.

“ரூபாய் நோட்டை பதிவேற்றிய பிறகு 25 அம்சங்களைப் பயன்படுத்தி, அதன் உண்மை தன்மையை அறிய முடியும்” என குழுவைச் சேர்ந்த சந்தோஷ் தெரிவித்திருக்கிறார்.

நாட்டில் பெரும் பிரச்னையாக இருக்கும் கள்ளநோட்டைக் கண்டுப்பிடிக்க, ஆப் உருவாக்கிய இவர்களை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Kharagpur Iit
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment