”நான் ஒரு சாமானியன், எனக்கு நெறிமுறைகள் தெரியாது”: தலைவர்களை கட்டிப்பிடிப்பது குறித்து மோடி

ஒரு சாமானியன் எனவும், தனக்கு எந்தவித நெறிமுறையும் தெரியாது எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் வெளியிட்ட வீடியோவுக்கு பதிலடியாக இவ்வாறு கூறியுள்ளார்.

தான் ஒரு சாமானியன் எனவும், தனக்கு எந்தவித நெறிமுறையும் தெரியாது எனவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பிற நாடுகளின் தலைவர்களை கட்டிப்பிடிப்பது குறித்து காங்கிரஸ் வெளியிட்ட சர்ச்சை வீடியோவுக்கு பதிலடியாக அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு, பிரதமர் நரேந்திர மோடியை கேலி செய்யும் விதமாக காங்கிரஸ் கட்சி தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியது. பிரதமர் நரேந்திர மோடி வெளிநாடுகளுக்கு செல்லும்போதும், வெளிநாட்டு தலைவர்கள் இந்தியாவுக்கு வருகை தரும் போதும் அவர்களை கட்டிப்பிடித்து வரவேற்பதை வழக்கமாக வைத்திருக்கிறார். அவரது இந்த நடவடிக்கையை கிண்டல் செய்யும் விதமாக காங்கிரஸ் கட்சி தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டது.

இந்நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திரமோடி, “நான் ஒரு சாமானியன். எனக்கு நெறிமுறை கிடையாது. அதுதான் என்னுடைய பலம். என்னுடைய வெளிப்படைத்தன்மை உலக தலைவர்களால் விரும்பப்படுகிறது”, என கூறியுள்ளார்.

×Close
×Close