Implant Files : போலி மருத்துவ உபகரணங்களால் நிரம்பும் இந்திய மருத்துவத் துறை

இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் மருத்து உபகரணங்கள் தர நிர்ணயம் கூட செய்யப்படாதவை

இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் மருத்து உபகரணங்கள் தர நிர்ணயம் கூட செய்யப்படாதவை

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Implant Files, Cardiac stents, ortho implants

Implant Files

கௌனைன் ஷெரிஃப், ஜெய் மசூம்தார், ரித்து ஷெரின்

Implant Files : இந்தியா போன்ற வளரும் நாடுகள் பெரும்பான்மையான மருத்து உபகரண தேவைகளுக்கு வெளிநாடுகளையே நம்பியுள்ளது. 5.2 பில்லியன் டாலர்கள் அளவிற்கான உபகரணங்களை இறக்குமதி செய்து வருகிறது இந்தியா. இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மனிதர்களின் உடலுக்குள் வைக்கப்படும் அளவிற்கு நம்பிக்கையானதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது தி இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் நடத்திய விசாரணை.

Advertisment

பனமா பேப்பர்ஸ், சுவிஸ் லீக்ஸ் விசாரணைகளைத் தொடர்ந்து இந்தியன் எக்ஸ்பிரஸ் தற்போது மீண்டும் 36 நாடுகளின் ஊடகவியலாளர்களுடன் இணைந்து புதிய விசாரணைகளை மேற்கொண்டுள்ளது. To read this article in English

அறுவை சிகிச்சை செய்து உடலுக்குள் வைக்கப்படும் இம்ப்ளாண்ட்கள் அனைத்தும் போலியானவை என்று கண்டறியப்பட்டுள்ளது. இதயம், மார்பகம், முழங்கால்கள் ஆகியவற்றில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு அதில் வைக்கப்படும் இம்ப்ளாண்ட்டுகள் அனைத்தும் போலியானவை என்று இந்த விசாரணையில் இந்தியன் எக்ஸ்பிரஸ் கண்டறிந்துள்ளது. 10 மாதங்கள் இந்த விசாரணை நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எய்ம்ஸ் மருத்துவமனையின் தரை தளத்தில் நடைபெற்று வருகிறது மார்பகம் சார்பான இம்ப்ளிமெண்ட் அறுவை சிகிச்சைகள். இந்த இடத்தில் எப்போதும் கூட்டம் குறைவதேயில்லை. ஏற்கனவே ஜான்சன் அண்ட் ஜான்சன் ஹிப் இம்ப்ளிமெண்ட் ஆப்ரேசன்கள் செய்ததில் 4000 பேர் பாதிப்பிற்கு ஆளானார்கள்.

Advertisment
Advertisements

அது தொடர்பான வழக்கு இன்னும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.  மும்பை, சென்னை, மற்றும் புது டெல்லி போன்ற மாநகரங்களில், மருத்துவ உபகரணங்கள் வர்த்தகம் தொடர்பான ஒரு மீட்டிங்கில் கலந்து கொண்டார்கள்.

Implant Files குறித்த இந்தியன் எக்ஸ்பிரஸ் விசாரணை

  • சர்வதேச அளவில் மருத்துவ உபகரணங்கள் உற்பத்தி செய்யும் மெட்ரோனிக், ஸ்ட்ரைகெர், அப்பாட் மற்றும் பேயர் போன்ற நிறுவனங்களின் தயாரிப்புகளில் தர நிர்ணயத்திற்கான ஆய்வுகள் எதையும் சரிவர நடத்துவதில்லை என்று கண்டறியப்பட்டுள்ளது.
  • ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் தயாரிப்புகள் கூட உலக அளவில் பயன்படுத்துவதற்கு தடை செய்யப்பட்ட மருத்துவப் பொருட்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
  • மருத்துவத்துறை உபகரணங்கள் தொடர்பான மசோதா கூட 12 வருடங்களுக்கு முன்பு கொண்டுவரப்பட்டது. மிக சமீபத்தில் தான் அந்த மசோதாவில் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன.
  • தனியார் மருத்துவமனையில் பயன்படுத்தப்பட்டு வரும் உபகரணங்களில் ?பெரும்பான்மையானவை இரண்டாம் தரம் அல்லது ஏற்கனவே உபயோகப்படுத்தப்பட்டு கை மாற்றப்பட்ட பொருட்கள்
  • இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வரும் மருத்துவ உபகரணங்கள் பற்றிய தகவல்கள் எதுவும் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படவில்லை.
  • மருத்துவ இம்ப்ளாண்ட்டுகளை உடலுக்குள் வைத்து அறுவை சிகிச்சை செய்து கொள்பவர்கள் பலர் தற்போது அந்த இம்ப்ளாண்ட்டுகளை திரும்ப எடுக்கச் சொல்லி அறுவை சிகிச்சை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
  • செயற்கை மார்பகம் செய்து கொள்ளும் மூன்றாம் பாலித்தனவர்கள், நிறைய பிரச்சனைகளை சந்திப்பதால், தாய்லாந்திற்கு சென்று மறுபடியும் அறுவை சிகிச்சை செய்து கொள்கிறார்கள்.

மேலும் படிக்க : உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளில் பயன்படுத்தப்படும் மருத்துவ உபகரணங்களின் தரம்

India

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: