Implant Files the Indian Express Investigation : உள்வைப்பு அறுவை சிகிச்சை என்று சொல்லப்படும் இம்ப்ளாண்ட் அறுவை சிகிச்சைகளில் பயன்படுத்தப்படும் பொருட்களில் பெரும்பாலானவை போலியானவை மற்றும் தரமற்றவை என்று கண்டறியப்பட்டுள்ளது. இது போன்ற அறுவை சிகிச்சைகளில் 10ல் இரண்டு அறுவை சிகிச்சைகள் தவறாக முடிவடைகின்றன.
இந்தியாவின் தலை சிறந்த மருத்துவமனையான எய்ம்ஸ் வெளிநோயாளிகள் பிரிவு சிறிது நேரம் கூட ஓய்வில்லாமல் உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களால் நிரம்பி வழிகிறது. டாக்டர் சி.எஸ். யாதவ், இந்தியாவின் தலை சிறந்த எலும்பியல் சிகிச்சை நிபுணர் இவர். இவரின் வெளிநோயாளி பிரிவுகளில் அமர்ந்திருப்பவர்கள் அனைவரும் ரிவர்ஸ் சர்ஜெரி செய்து கொள்ள வந்திருப்பவர்கள். அதாவது இம்ப்ளாண்ட் அறுவை சிகிச்சை மூலமாக உள்ளே வைக்கப்பட்ட மெடிக்கல் டிவைஸ்களை திரும்ப எடுக்கவே வந்திருக்கிறார்கள்.
/tamil-ie/media/media_files/uploads/2018/11/implant-files1.jpg)
ஹிப் இம்ப்ளாண்ட் அறுவை சிகிச்சை செய்து அதில் பிரச்சனைகளுக்கு ஆளாகிய மக்கள் தான் அதில் அதிகம். இந்த அறுவை சிகிச்சை செய்யவே லட்சக் கணக்காக பணம் விரையமாகும். இந்நிலையில் இதனை மறுபடியும் எடுத்துவிட்டு வேறொன்றை பொருத்துவது நோயாளிகளுக்கு பெரும் செலவிழுக்கும் சிகிச்சைகளாகும். நகரங்கள் தொடங்கி, சிறு கிராமங்கள் வரை அனைத்து பகுதிகளிலும் இது போன்ற ரிவர்ஸ் அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டு வருகின்றன.
மேலும் படிக்க : போலி மருத்துவ உபகரணங்களால் நிரம்பும் இந்திய மருத்துவத் துறை
Implant Files The Indian Express Investigation : எலும்பு மாற்று அறுவை சிகிச்சைகள்
இந்தியாவில் வருடத்திற்கு 1.2 லட்சம் முட்டி மாற்று அறுவை சிகிச்சைகள் நடைபெறுகின்றன. அதே போல் இடுப்பெலும்பு மாற்று அறுவை சிகிச்சைகள் 70,000 நடைபெறுகிறது. இது குறித்து மருத்துவர் யாதவ் குறிப்பிடுகையில் ஒவ்வொரு 1500 இடுப்பெலும்பு மற்றும் முட்டி மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்பவர்களில் 20% பேர் மீண்டும் அறுவை சிகிச்சை செய்து கொள்ள வருகிறார்கள்.
10 வருடங்கள் வரை இந்த இம்பாள்ண்ட்கள் சிறப்பாக செயல்படும், ஆனால் தவறான உபகரணங்கள் பயன்படுத்துப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப் படும் போது வெறும் சில மாதங்கள் மட்டுமே தாக்கு பிடிக்கின்றன. 80% இது போன்ற பிரச்சனைகள் தவறான இம்ப்ளாண்ட்கள் பொருத்தப்பட்டிருப்பதால் உருவாகின்றன.
மூன்றாம் நிலை நகரங்களில் இருந்து வருபவர்கள் தான் நிறையே பேர் இந்த ரிவர்ஸ் அறுவை சிகிச்சை செய்து கொள்கிறார்கள். இதற்கு யார் காரனம் என்று கூறுகிறீர்கள்.. இந்த இண்டெஸ்ட்ரி, சரியான பயிற்சி பெறாத மருத்துவர்கள், மோசமாக தயாரிக்கப்படும் இம்ப்ளாண்ட்கள் மற்றும் சரியான கட்டமைப்பு இல்லாத மருத்துவமனைகள் தான். இது தொடர்பான
மருத்துவர் யாதவ் எய்ம்ஸ் மருத்துவமனையில் திங்கள், புதன், மற்றும் வெள்ளி போன்ற நாட்களில் வெளி நோயாளிகளை பார்வையிடுகிறார். செவ்வாய், வியாழன், மற்றும் சனிக்கிழமைகளில் அறுவை சிகிச்சை மேற்கொள்கிறார்.
ஒரு நாள் முழுவதும் யாதவ் அவர்களின் புற நோயாளிகள் பிரிவில் இருந்தது இந்தியன் எக்ஸ்பிரஸ் குழு. அங்கு நொய்டாவைச் சேர்ந்த ஒரு பெண்ணிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஹரியானாவில் இரண்டு முறை ஹிப் இம்ப்ளிமெண்ட் அறுவை சிகிச்சை செய்து அதனால் இன்ஃபெக்சன் ஏற்பட்டதால் மீண்டும் அறுவை சிகிச்சை செய்து கொள்ள வந்திருக்கிறார்.
51 வயதாகும் அரவிந்த் குமார் என்பவர் அயோத்யாவில் இருந்து 700 கி.மீ பயணம் செய்து எய்ம்ஸ்ஸில் ஹிப் ரீப்லேஸ்மெண்ட் சர்ஜரி செய்து கொண்டார். இதற்கு முன்பு இரண்டு முறை லக்னோவில் இவர் செய்து கொண்ட அறுவை சிகிச்சை தவறாக போய் முடிந்துள்ளது. இதற்கு மட்டும் இதுவரையில் 13 லட்சம் செலவு செய்துள்ளேன். என்னுடைய சேல்ஸ் மேனேஜர் பதவியை நான் இதனால் இழந்துள்ளேன் என்று குறிப்பிட்டிருக்கிறார் அந்த நோயாளி.
55 வயது மதிக்கத்தக்க சஷிக்கந்தா வர்ஷ்னி, பல வருடங்களாக இடுப்பு வலியால் அவதிப்பட்டு வந்தார். பின்னர் ப்ரோஸ்தெசிஸ் அல்லது செயற்கை முட்டு வைத்துக் கொள்ளலாம் என்று முடிவு எடுத்தார்.
அவர் சென்ற மருத்துவமனையில் ஹிப் ரீப்லேஸ்மெண்டை பரிந்துரை செய்ததால் அவர் 5 லட்ச ரூபாய் செலவு செய்து அறுவை சிகிச்சை செய்து கொண்டார். ஆனால் அதன் பின்பு தீராத வலி ஏற்படவும் மூன்று மருத்துவமனைகளுக்கு சென்றிருக்கிறார். பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்கள் வர்ஷினியின் உடலுக்குள் வைக்கப்பட்டிருக்கும் இம்ப்ளாண்ட் சரியாக பொருந்தவில்லை என்றும் இடத்தில் இருந்து நழுவிய வண்ணம் இருக்கிறது என்றும் கூறியுள்ளனர்.
150 வகையான முட்டி இம்ப்ளாண்ட்கள் தற்போது இந்திய மருத்துவமனைகளில் கிடைக்கின்றன. இது ஏதாவது சரியாக படுகிறதா உங்களுக்கு ? இதே நிலை இந்தியாவின் ஏவியேசன் துறையில் இருந்திருந்தால் எத்தனை மோசமான உயிரிழப்புகளை நாம் காண நேரிடும் என்று கேள்வி கேட்கிரார் யாதவ்.