Advertisment

முறையிட்ட நுகர்வோர் துறை; தலையிட்ட வெளியுறவுத்துறை... மொசாம்பிக் துவரம் பருப்பு இறக்குமதி மீண்டும் தொடக்கம்

இந்தியாவுக்கு எதிராக செயல்படும் (ஆன்டி இண்டியா) குழு ஒன்று மொசாம்பிக்கில் உள்ள நகாலா துறைமுகத்திலிருந்து துவரம் பருப்பு இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதை தடுத்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Import of tur dal from Mozambique resumes after Centre’s intervention Tamil News

மொசாம்பிக் 2025-26 வரை 2 லட்சம் டன் துவரம் பருப்பை வழங்க இந்தியாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டது.

மொசாம்பிக் என்று அழைக்கப்படும் மொசாம்பிக் குடியரசு, தென்கிழக்கு ஆப்பிரிக்க நாடாகும். இந்த நாட்டில் இருந்து ஆண்டுதோறும் டன் கணக்கில்  இந்தியா துவரம் பருப்பு இறக்குமதி செய்து வருகிறது. இந்நிலையில், இந்தியாவுக்கு எதிராக செயல்படும் (ஆன்டி இண்டியா) குழு ஒன்று மொசாம்பிக்கில் உள்ள நகாலா துறைமுகத்திலிருந்து துவரம் பருப்பு இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதை தடுத்துள்ளது. 

Advertisment

இந்த விவாகரத்தில் தலையிடுமாறு மத்திய நுகர்வோர் விவகார அமைச்சகம் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் கோரிக்கை வைத்துள்ளது. இதனையடுத்து, வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் தலையீடு காரமாக துவரும் பருப்பு  ஏற்றுமதி மீண்டும் தொடங்கி இருக்கிறது என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் அறிந்துள்ளது.

ஆங்கிலத்தில் படிக்கவும்: Import of tur dal from Mozambique resumes after Centre’s intervention

நகாலா துறைமுகத்தில் இருந்து சுமார் 35,000 டன் துவரும் பருப்பை ஏற்றிச் செல்லும் 1,400 கொள்கலன்கள் ஏற்கனவே இந்தியாவிற்கு புறப்பட்டுவிட்டதாக மொசாம்பிக் நாட்டிற்கான இந்திய தூதரக உயர் அதிகாரி நுகர்வோர் விவகார அமைச்சகத்திற்கு தெரிவித்துள்ளார். மேலும், மீதமுள்ள 400 கொள்கலன்கள், மலாவியில் இருந்து சில கொள்கலன்களைத் தவிர, அதே துறைமுகத்தைப் பயன்படுத்தி துவரும் பருப்பை இந்தியாவிற்கு ஆகஸ்ட் நடுப்பகுதியில் ஏற்றுமதி செய்யப்படும் என்றும் கூறியுள்ளார். 

இந்த நிலையில், இந்தியாவுக்கு எதிராக செயல்படும் (ஆன்டி இண்டியா) குழு ஒன்று மொசாம்பிக்கில் உள்ள நகாலா துறைமுகத்திலிருந்து துவரம் பருப்பு இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதை தடுத்துள்ளது. இது குறித்து இந்திய தூதரக உயர் ஆணையர் நுகர்வோர் விவகார அமைச்சகத்திற்கு தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து தான் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தலையிட்டு பிரச்னையை சரி செய்துள்ளது. 

இறக்குமதி 

இந்தியா உலகின் மிகப்பெரிய பருப்பு உற்பத்தியாளராக இருந்த போதிலும், அதன் உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்ய இன்னும் இறக்குமதியை சார்ந்து இருக்க வேண்டிய சூழல் உள்ளது. அந்த வகையில், இந்தியா பல்வேறு நாடுகளில் இருந்து பல வகையான பருப்புகளை இறக்குமதி செய்து வருகிறது. இதில் மொசாம்பிக் நாட்டில் இருந்து துவரம் பருப்பை இறக்குமதி செய்து வருகிறது.

கடந்த 2023-24 ஆம் ஆண்டில், இந்தியா 7.71 லட்சம் துவரம் பருப்பை இறக்குமதி செய்தது. அதில் மூன்றில் ஒரு பங்கு (2.64 லட்சம் டன்) மொசாம்பிக்கிலிருந்து வந்தது. 2022-23ல் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருந்தது. இந்தியாவின் மொத்த துவரம் பருப்பு இறக்குமதியில் (8.94 லட்சம் டன்கள்) பாதி (4.6 லட்சம் டன்கள்) மொசாம்பிக் நாட்டில் இருந்து வந்தது. இந்தியாவிற்கு நான்காவது துவரம் பருப்பு சப்ளையரான மலாவி, கடந்த நிதியாண்டில் 52,773 டன்களை ஏற்றுமதி செய்துள்ளது. இது முந்தைய ஆண்டின் 60,463 டன்களுடன் ஒப்பிடுகையில் 12 சதவீதம் குறைவு ஆகும். 

கடந்த ஆண்டில் இந்த இரு நாடுகளிலிருந்தும் இறக்குமதியில் ஏற்பட்ட இந்த வீழ்ச்சிக்கு மொசாம்பிக் "தொடர் தடைகள்" காரணம் என்றும்,  இது சீரான வர்த்தகத்திற்கு தடையாக இருந்துள்ளது என்றும் தகவல்கள் கூறுகின்றன. 

கடிதம் 

எவ்வாறாயினும், நகாலா துறைமுகத்தில் இருந்து பருப்பு வகைகளை ஏற்றுமதி செய்வதில் இந்தியாவுக்கு எதிராக செயல்படும் குழு ஒன்று தடையாக இருப்பதாக வர்த்தகர்கள் தெரிவித்ததால் பிரச்சினை முழுமையாக தீர்க்கப்படவில்லை. 

உலகளாவிய தானியங்கள் மற்றும் பருப்பு வகைகள் கவுன்சிலின் நிறுவனர் கன்வீனர் தீபக் பரீக் பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதத்தில், இந்த விவகாரத்தில் அரசின் தலையீட்டைக் கோரியுள்ளார். “நகாலா துறைமுகத்தை மேற்பார்வையிடும் மொசாம்பிக்கில் உள்ள நம்புலா மாகாணத்தின் அதிகாரிகள், இந்தியாவுக்கு விவசாயப் பொருட்களை அனுப்புவதைத் தடுக்கிறார்கள். துரதிர்ஷ்டவசமாக, இந்திய எதிர்ப்பு நடவடிக்கைகளில் பின்னணியில் உள்ள உள்ளூர் குழு ஒன்று இந்த அதிகாரிகளுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டு பொருட்கள் அனுப்படுவதை தடுக்கிறது. 

கடந்த ஆண்டு இந்திய இறக்குமதியாளர்கள் துவரம் பருப்பை அனுப்புவதற்காக மீட்கும் தொகையை செலுத்துமாறு கேட்டபோது பிரச்சினை தொடங்கியது. மேலும் இந்தியாவுக்குச் செல்லும் சரக்குகள் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டன. மொசாம்பிக் மற்றும் மலாவி ஆகிய இரு நாடுகளிலிருந்தும் சரக்குகள் தடைசெய்யப்பட்டு, சரக்குகளை வெளியிட 70-100 அமெரிக்க டாலர்களை ஒரு தனியார் குழு கோருவதால், இந்த துயரமான சூழ்நிலை மீண்டும் மீண்டும் வருகிறது. இந்த நிலைமை இந்திய வர்த்தக சமூகத்தின் நலன்களை சமரசம் செய்வதோடு மட்டுமல்லாமல், கடந்த ஆண்டு பருப்பு வகைகளில் உணவுப் பணவீக்கத்திற்கும் வழிவகுத்தது. இந்த ஆண்டு மீண்டும் வருவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன,” என்று அவர் அந்தக் கடித்ததில் எழுதியுள்ளார். 

இது தொடர்பாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் பேசிய தீபக் பரீக், "பிணைத்தொகை இன்னும் செலுத்தப்படுகிறது. அதனால், பிணைத்தொகை செலுத்தப்படும் கண்டெய்னர்கள் மட்டுமே அனுப்பப்படுகின்றன. புதிய பயிரின் அறுவடை தற்போது தான் தொடங்கியுள்ளதால், அந்த கொள்கலன்களில் உள்ள பொருட்கள் முந்தைய பருவத்தில் இருந்ததாக இருக்க வாய்ப்பு உள்ளது" என்று கூறினார். 

ஒப்பந்தம்

மொசாம்பிக் 2025-26 வரை 2 லட்சம் டன் துவரம் பருப்பை வழங்க இந்தியாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டது. இந்த ஒப்பந்தத்தின்படி, இந்தியா மொசாம்பிக்கிற்கு உறுதியான சந்தை அணுகலை வழங்குகிறது. இதேபோன்ற புரிந்துணர்வு ஒப்பந்தம் மலாவியுடன் ஆண்டுதோறும் 0.50 லட்சம் டன் துருவம் பருப்பை இந்தியாவுக்கு வழங்குவதற்காக கையெழுத்திடப்பட்டுள்ளது.

இந்தியா பல்வேறு நாடுகளில் இருந்து பல வகையான பருப்புகளை இறக்குமதி செய்கிறது. 2023-24 ஆம் ஆண்டில், இந்தியாவின் பருப்பு இறக்குமதி 47.38 லட்சம் டன்களாக உயர்ந்தாது. இதே 2022-23 ஆம் ஆண்டில் 24.96 லட்சம் டன்னாக இருமடங்காக உயர்ந்து இருந்தது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

India
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment