கொரோனா நோயால் 2020ல் 1,60,618 பேர் உயிரிழந்துள்ளனர், இது நாட்டில் மருத்துவ ரீதியாக சான்றளிக்கப்பட்ட 18.11 லட்சம் இறப்புகளில் 8.9 சதவீதம் என்று இந்தியப் பதிவாளர் ஜெனரல் (RGI) அலுவலகம் புதன்கிழமை வெளியிட்ட இறப்புக்கான காரணத்திற்கான மருத்துவச் சான்றளிப்பு-2020 அறிக்கை தெரிவித்துள்ளது.
Advertisment
2020 ஆம் ஆண்டில் தேசிய அளவில் மருத்துவ சான்றளிக்கப்பட்ட இறப்புகளுக்கு கொரோனா நான்காவது பெரிய காரணமாக இருந்தது. அதிலும், மகாராஷ்டிரா (17.7 சதவீதம்), மணிப்பூர் (15.7 சதவீதம்), உத்தரப் பிரதேசம் (15 சதவீதம்), இமாச்சலப் பிரதேசம் (13.5 சதவீதம்), ஆந்திரப் பிரதேசம் (12 சதவீதம்), பஞ்சாப் (11.9 சதவீதம்) மற்றும் ஜார்கண்ட் (7.6 சதவீதம்) ) உள்ளிட்ட ஏழு மாநிலங்களில் இது இரண்டாவது பெரியதாக இருந்தது.
2020 ஆம் ஆண்டில் மருத்துவ சான்றளிக்கப்பட்ட கோவிட் இறப்பு எண்ணிக்கை1,60,618 ஆகும். இது, 2020 இல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட மத்திய சுகாதார அமைச்சகத்தின் கோவிட் இறப்பு எண்ணிக்கையான 1,48,994 ஐ விட அதிகமாகும்.
தொற்றுநோய் தொடங்கியதில் இருந்து மே 25, 2022 வரை, இந்தியாவில் 5,24,507 கோவிட் இறப்புகள் பதிவாகியுள்ளன என்று மத்திய சுகாதார அமைச்சகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.
அறிக்கையில், கோவிட் இறப்புகள் இரண்டு துணைத் தலைப்புகளின் கீழ் பதிவாகியுள்ளன:
அதில் ஒன்று 'வைரஸ் அடையாளம் காணப்பட்டது' என்ற குறியீடு "கோவிட் 19 இன் நோய் கண்டறிதல் ஆய்வக சோதனை மூலம் உறுதிப்படுத்தப்பட்டது". இரண்டாவதாக, 'வைரஸ் அடையாளம் காணப்படவில்லை' என்ற குறியீடு.
1,60,618 கோவிட் இறப்புகளில், 1,38,713 இறப்புகளில் வைரஸ் அடையாளம் காணப்பட்டுள்ளது, அதே நேரத்தில் 21,905 பாதிப்புகளில் இது சரிபார்க்கப்படவில்லை.
2020 ஆம் ஆண்டில், முழுமையான எண்ணிக்கையில் அதிகபட்ச கோவிட் இறப்புகள் மகாராஷ்டிராவில் பதிவாகியுள்ளன (61,212). அதைத் தொடர்ந்து உத்தரப் பிரதேசம் (16,489), கர்நாடகா (15,476), ஆந்திரப் பிரதேசம் (12,193) மற்றும் டெல்லி (8,744) உள்ளன.
ஒரே ஒரு மாநிலம் - அருணாச்சலப் பிரதேசம் - மற்றும் யூனியன் பிரதேசம் – லட்சத்தீவில் மட்டும் - 2020 ஆம் ஆண்டில் மருத்துவ சான்றளிக்கப்பட்ட கோவிட் மரணம் எதையும் தெரிவிக்கவில்லை.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“