Kaunain Sheriff M
நாட்டின் மக்கள் தொகையில் தகுதியானவர்களில் முக்கால்வாசி நபர்கள் கொரோனா தொற்றுக்கு எதிராக முதல் டோஸ் தடுப்பூசியை செலுத்திக் கொண்ட நிலையில் 48 மாவட்டங்களில் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கை 50%க்கும் குறைவாக உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி, மிகவும் குறைவாக கொரோனா தடுப்பூசி கவரேஜ் கொண்ட மாவட்டங்கள் மத்தியில் புதன்கிழமை அன்று விரிவான ஆய்வுக் கூட்டத்தை நடத்துகிறார்.
குறைவான கவரேஜ் பதிவாகியுள்ள 48 மாவட்டங்களில் 27 மாவட்டங்கள் வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்தவை. அவற்றில் மணிப்பூர் மற்றும் நாகலாந்து மாநிலங்களில் தலா 8 மாவட்டங்கள் அடங்கும். அனைத்து மாநிலங்களையும் ஒப்பிடுகையில் ஜார்கண்ட்டில் அதிகபட்சமாக, 9 மாவட்டங்களில் 50%க்கும் குறைவாகவே முதல் டோஸ் கவரேஜ் பதிவாகியுள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சகத்தின் தரவு அறிவிக்கிறது.
டெல்லியில் ஒரு மாவட்டமும், மகாராஷ்ட்ராவில் 6 மாவட்டங்களும் இந்த பட்டியலில் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா ஜனவரி மாதம் 16ம் தேதி முதல் தடுப்பூசி போடும் திட்டம் துவங்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை வரையில் இந்தியாவில் முதல் மற்றும் இரண்டு டோஸ்கள் உட்பட 106,33,38,492 டோஸ்கள் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. முதல் டோஸ் செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கை 77.44% ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. நாட்டில் வயது வந்தவர்களில் 35% பேர் கொரோனா தொற்றுக்கு எதிராக முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.
மாநிலங்கள் 'ஹர் கர் தஸ்தக்' தடுப்பூசி பிரச்சாரத்தை துவங்கப்பட்டு ஒரு நாள் கழித்து மோடியின் இந்த ஆலோசனைக் கூட்டம் இடம் பெறுகிறது. அடுத்த மாதத்தில், வீட்டுக்கு வீடு சென்று தடுப்பூசி வழங்கப்பட்டு முழுமையான கோவிட்19க்கு எதிரான தடுப்பூசி கவரேஜை பெற இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
50 சதவீதத்திற்கும் குறைவான முதல் டோஸ் கவரேஜ் உள்ள 48 மாவட்டங்களை அடையாளம் காணும் அமைச்சகத்தின் தரவு அக்டோபர் 27 முதல் உள்ளது. அன்றைய தினம், மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியாவும், நாடு முழுவதும் 10.34 கோடிக்கும் அதிகமானோர் பரிந்துரை செய்யப்பட்ட கால இடைவெளியில் இரண்டாம் டோஸ் மருந்து எடுக்கத் தவறிவிட்டனர் என்று அந்த மாநிலங்களின் பட்டியலை வரிசைப்படுத்தினார். மேலும் இரண்டாம் டோஸ் கவரேஜை அதிகப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
நவம்பர் மாத இறுதிக்குள் தகுதியான அனைவரும் நாட்டில் முதல் டோஸ் தடுப்பூசியை பெற்றிருப்பதை உறுதி செய்யும் இலக்குடன் செயல்படுங்கள் என்று மாநிலங்களை கேட்டுக் கொண்டார்.
அமைச்சகம் வெளியிட்ட தரவுகளின் அடிப்படையில்
ஜார்க்கண்டில் 50 சதவீதத்திற்கும் குறைவான முதல் டோஸ் கவரேஜ் கொண்ட ஒன்பது மாவட்டங்கள்: பாகூர் (37.1%), சாஹேப்கஞ்ச் (39.2%), கர்வா (42.7%), தியோகர் (44.2%), மேற்கு சிங்பூம் (47.8%), கிரிதிஹ் (48.1%), லதேஹர் (48.3%), கோடா (48.3%), மற்றும் கும்லா (49.9%).
மணிப்பூர் மாநிலம்
காங்போக்பி (17.1%), உக்ருல் (19.6%), கம்ஜோங் (28.2%), சேனாபதி (28.6%), பெர்சாவல் (31.1%), தமெங்லாங் (35%), நோனி (35.4%), மற்றும் தெங்னௌபால் (43.7%)
நாகலாந்து
கிஃபிர் (16.1%), டுசாங் (20.8%), பெக் (21.9%), பெரன் (21.9%), மோன் (33.5%), வோக்கா (38.5%), ஜுன்ஹெபோடோ (39.4%), மற்றும் லாங்லெங் (40.4%) )
அருணாச்சலப் பிரதேசம்
கர் தாடி (18.3%), குருங் குமே (27.4%), மேல் சுபன்சிரி (32.1%), கம்லே (36.4%), லோயர் சுபன்சிரி (41.3%), மற்றும் கிழக்கு கமெங் ( 42.5%).
மகாராஷ்ட்ரா
ஔரங்காபாத் (46.5%), நாந்துர்பர் (46.9%), புல்தானா (47.6%), ஹிங்கோலி (47.8%), நாந்தெட் (48.4%), மற்றும் அகோலா (49.3%)
மேகாலயா
மேற்கு காசி மலைகள் (39.1%), தெற்கு கரோ ஹில்ஸ் (41.2%), கிழக்கு காரோ ஹில்ஸ் (42.1%), மேற்கு ஜாந்தியா ஹில்ஸ் (47.8%).
டெல்லி மற்றும் இதர மாவட்டங்கள்
நுஹ் (ஹரியானா, 23.5%), திருவள்ளூர் (தமிழ்நாடு, 43.1%), தெற்கு சல்மாரா மங்காச்சார் (அஸ்ஸாம், 44.8%), நாராயண்பூர் (சத்தீஸ்கர், 47.5%), வடமேற்கு டெல்லி (டெல்லி, 48.2%), லாங்ட்லாய் (மிசோரம், 48.6%), மற்றும் அராரியா (பீகார், 49.6%).
இரண்டாவது டோஸ் தடுப்பூசியைப் பொருத்தவரை, எட்டு பெரிய மாநிலங்களில் நான்கு, தேசிய சராசரியான 31 சதவீதத்தை விட அதிகமாக கவரேஜ் பெற்றுள்ளன: குஜராத் (55%), கர்நாடகா (48%), ராஜஸ்தான் (39%), மற்றும் மத்தியப் பிரதேசம் (38) %).
மகாராஷ்டிரா (34%), உத்தரப் பிரதேசம் (22%), பீகார் (25%), மற்றும் மேற்கு வங்கம் (30%) மாவட்டங்கள் இரண்டாவது டோஸ் கவரேஜ் தேசிய சராசரியைக் காட்டிலும் குறைவாக உள்ளது.
ஞாயிற்றுக் கிழமை வரை, 1.03 கோடி சுகாதாரப் பணியாளார்கள் முதல் டோஸ் தடுப்பூசியை பெற்றுள்ளனர். 92.21 லட்சம் பேர் முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். முன்னணி களப்பணியாளர்களில் 1.83 கோடி பேர் முதல் டோஸ் தடுப்பூசியையும் முழுமையாக 1.59 கோடி நபர்கள் தடுப்பூசியையும் செலுத்திக் கொண்டனர்.
60 வயதுக்கு மேற்பட்ட 10.96 கோடி பேர் முதல் டோஸை பெற்றுக் கொண்டதாக சுகாதாரத்துறை அமைச்சகத்தின் தரவுகள் அறிவிக்கின்றன. இரண்டாம் டோஸை 6.66 கோடி நபர்கள் பெற்றுக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
45 வயதுக்கு மேற்பட்டவர்களில், 17.47 கோடி பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. இரண்டாம் டோஸை 9.62 கோடி நபர்கள் பெற்றுள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.