Advertisment

தண்ணீரை வீணடிப்பதா? பெங்களூருவில் ரூ.1.10 லட்சம் அபராதம்: முதல் முறை!

பெங்களூரு நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம் பொழுதுபோக்கு நோக்கங்களுக்காக, திரையரங்குகள் மற்றும் மால்களில் குடிநீராகப் பயன்படுத்துவதற்கும், சாலை அமைப்பதற்கும் தடை விதித்தது.

author-image
WebDesk
New Update
In a first Rs 1 1 lakh fine imposed on 22 Bengaluru residents for misusing potable water amid crisis

பெங்களூரு காவிரியில் இருந்து 1,450 MLD (ஒரு நாளைக்கு மில்லியன் லிட்டர்) தண்ணீர் பெறுகிறது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

குடிநீரைத் தவிர வேறு நோக்கங்களுக்காக நகரத்தில் குடிநீரைப் பயன்படுத்துவதை தடை செய்வதாக அறிவித்த பிறகு முதல் முறையாக, பெங்களூரு நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம் தடையை மீறியதற்காக 22 குடும்பங்களுக்கு 3 நாட்களுக்குள் மொத்தம் ரூ.1.1 லட்சம் அபராதம் விதித்தது.

Advertisment

பெங்களூரு நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம் மார்ச் இரண்டாவது வாரத்தில், சுத்தம் செய்தல், தோட்டம் அமைத்தல், கட்டிடம் கட்டுதல், ஓடும் நீரூற்றுகள், பொழுதுபோக்கு நோக்கங்களுக்காக, திரையரங்குகள் மற்றும் மால்களில் குடிநீராகப் பயன்படுத்துவதற்கும், சாலை அமைப்பதற்கும் தடை விதித்தது.

இது குறித்து பேசிய அதிகாரி ஒருவர், “கடந்த வெள்ளிக்கிழமை கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டதாகவும், ஞாயிற்றுக்கிழமை வரை 22 மீறல் வழக்குகள் கண்டறியப்பட்டு, ரசீதுகளை வழங்கிய பின்னர் அந்த இடத்திலேயே அபராதம் வசூலிக்கப்பட்டது என்றும் கூறினார். பெங்களூரின் தென்கிழக்கு பிரிவில் பெரும்பாலான விதிமீறல்கள் கண்டறியப்பட்டு மொத்தம் ரூ.65,000 அபராதம் விதிக்கப்பட்டது” என்றார்.

இதற்கிடையில் வாரியத்தின் உத்தரவு குறித்து அவர், “பெங்களூருவில் நிரந்தர குடியிருப்பாளர்கள் மற்றும் போக்குவரத்தில் இருப்பவர்கள் உட்பட சுமார் 1.4 கோடி மக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அனைவருக்கும் குடிநீர் வழங்குவது அவசியம். தற்போது நகரில் நாளுக்கு நாள் வெப்பம் அதிகரித்து வருவதுடன், கடந்த நாட்களாக மழை பெய்யாததால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது.

இதனால், நகரில் தண்ணீர் வீணாவதை தடுக்க வேண்டியதுடன், பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.

மேலும், BWSSB சட்டம் 1964 இன் பிரிவுகள் 33 மற்றும் 34 ன் படி, பல்வேறு நோக்கங்களுக்காக நகரத்தில் குடிநீரைப் பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது.

தடையை மீறும் நபர்கள் கண்டறியப்பட்டால் உடனடியாக அதன் ஹெல்ப்லைன் 1916 க்கு தகவல் தெரிவிக்குமாறு வாரியம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

பெங்களூரு காவிரியில் இருந்து 1,450 MLD (ஒரு நாளைக்கு மில்லியன் லிட்டர்) தண்ணீரைப் பெறுகிறது, மேலும் 400 MLD பொது போர்வெல்கள் மூலம் பெறப்படுகிறது.

மேலும், நகரில் குறைந்த மழைப்பொழிவு மற்றும் அதிக கான்கிரீட் மயமாக்கல் ஆகியவை நிலத்தடி நீர்மட்டத்தை கணிசமாகக் குறைத்துவிட்டன. பெங்களூரில் தற்போது 110 கிராமங்களில் நிலத்தடி நீர் பற்றாக்குறை உள்ளது,

குறிப்பாக வர்தூர், பெல்லந்தூர், ஹூடி மற்றும் மாரத்தஹள்ளி போன்ற கிழக்குப் பகுதிகளில். BWSSB இன் மதிப்பீடுகளின்படி, நகரம் நிலத்தடி நீர் ஆதாரங்களில் இருந்து 50 சதவீதத்திற்கும் அதிகமான பற்றாக்குறையை எதிர்கொள்கிறது.

இந்த நெருக்கடி பல அடுக்குமாடி குடியிருப்புகள், நுழைவாயில் சமூகங்கள், தனியார் மற்றும் அரசு பள்ளிகள் மற்றும் தொழில்துறைகள் போன்றவற்றை பாதித்துள்ளது.

இதைத் தொடர்ந்து, பெங்களூரு மாவட்ட நிர்வாகம், தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், நான்கு மாதங்களுக்கு குடியிருப்பாளர்களிடம் இருந்து தண்ணீர் டேங்கர் மூலம் வசூலிக்கப்படும் விலையை புதன்கிழமை நிர்ணயித்துள்ளது.

ஆங்கிலத்தில் வாசிக்க : In a first, Rs 1.1 lakh fine imposed on 22 Bengaluru residents for misusing potable water amid crisis

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Bangalore
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment