நாட்டின் 77ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் ஜி20 தலைமைத்துவம், பொருளாதார சவால்கள் என பல்வேறு விஷயங்களை குறிப்பிட்டு பேசினார்.
அப்போது, “இந்தியாவின் ஜி 20 தலைவர் பதவி உலகளாவிய உரையாடலை வடிவமைக்க ஒரு வாய்ப்பாக உள்ளது. பணவீக்கத்தை சமாளித்து நாட்டின் ஜிடிபி வளர உதவியதற்காக மத்திய மற்றும் ரிசர்வ் வங்கிக்கு வாழ்த்துக்கள்.
இஸ்ரோவின் சந்திரயான்-3 திட்டத்துடன் தொடர்புடைய அனைவருக்கும் பாராட்டுகள். இது வரவிருக்கும் பெரிய விஷயங்களின் படிக்கட்டு” என்றார்.
முன்னதாக, திங்கள்கிழமை (அக்.14) பிரதமர் நரேந்திர மோடி, "நாட்டின் பிரிவினையில் உயிர் தியாகம் செய்த இந்தியர்களுக்கு" அஞ்சலி செலுத்தினார்.
மேலும் "இடப்பெயர்வின் சுமைகளை சுமக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளவர்களின் துன்பம் மற்றும் போராட்டத்தை" நினைவு கூர்ந்தார்.
பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிப்பு
இந்நிலையில், சுதந்திர தின விழாவை முன்னிட்டு தலைநகர் டெல்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர்.
ஆகஸ்ட் 15 அன்று வடக்கு டெல்லியில் உள்ள செங்கோட்டை மற்றும் பிற பகுதிகளில் சுமார் 700 காவலர்கள் நிறுத்தப்படுவார்கள்.
மேலும், சட்டம் ஒழுங்கை பராமரிக்கவும், நகரம் முழுவதும் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும் 10,000 க்கும் மேற்பட்ட பணியாளர்கள் களத்தில் நிறுத்தப்படுவார்கள்.
பாதுகாப்பு நடவடிக்கைகளில் 1,000 க்கும் மேற்பட்ட கேமராக்கள், நான்கு அடுக்கு பாதுகாப்பு கவசம், ட்ரோன் எதிர்ப்பு அமைப்புகள், முகத்தை அடையாளம் காணும் அமைப்புகள், வெடிகுண்டுகளை அகற்றும் குழுக்கள் மற்றும் துணை ராணுவப் படைகள் உள்ளிட்டவை உள்ளன.
“இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“