இந்திய கலாச்சாரம் உலகமயமாக்கல் குறித்த கேள்விக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பதிலளிக்கும் போது பிரபலமான இந்தி வாக்கியத்தை பயன்படுத்தினார். நேற்று (திங்கட்கிழமை) ஸ்வீடனின் ஸ்டாக்ஹோமில் இந்திய மக்களை சந்தித்து அமைச்சர் ஜெய்சங்கர் உரையாடினார். அப்போது, இந்த உலகமயமாக்கல் யுகத்தில், ஹாம்பர்கர்களுக்குப் பதிலாக ‘பானி பூரி’ சாப்பிடத் தொடங்குவார்களா? உலகளவில் பிரபலமான எச்&எம் டி-சர்ட்களில் ‘நியூயார்க்’ என்பதற்கு பதிலாக ‘புது டெல்லி’ என்று அச்சிடப்படுமா என்று கேட்டார். மேலும், பதிலளித்த ஜெய்சங்கர், “(இந்தியில்) ‘ஆப்கே மூஹ் மே நெய்-ஷக்கர்’ (நீங்கள் சொல்வது உண்மையாகிவிடும் என்று நம்புகிறேன்) என்று கூறினார். இதனால் அவையில் சிரிப்பலை ஏற்பட்டது.
“டைகர் ஷா”
நீதிபதி எம்.ஆர் ஷா திங்களன்று ஓய்வு பெற்ற நிலையில் பிரியாவிடை நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, இந்திய தலைமை நீதிபதி டி.ஒய் சந்திரசூட் உரையாற்றும் போது,அவர் தனது சக ஊழியரும் நீண்ட கால நண்பருமான நீதிபதி எம்.ஆர் ஷா-வை “டைகர் ஷா” என்று அழைப்பதை வெளிப்படுத்தினார். கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜு, நீதிபதியுடனான தனது தொடர்பு 1990-களில் இருந்து வருவதாகவும், அப்போது அவர் அவரை “முகேஷ் பாய்” என்று அழைத்ததை நினைவு கூர்ந்தார். நீதிபதி ஷாவின் பெயர் முகேஷ்குமார் ரசிக்பாய் என்பதாகும். ஓய்வுக்குப் பிறகு மீண்டும் அவரை முகேஷ் பாய் என்று அழைக்க முடியும் என்று மகிழ்ச்சியாக கூறினார்.
இந்தியன் லாஜிக்
மத்திய சுற்றுச்சூழல் மற்றும் தொழிலாளர் துறை அமைச்சராக பூபேந்தர் யாதவ் உள்ளார். இருப்பினும் அவர் வழக்கறிஞருக்கு படித்தவர். சட்டம் தொடர்பாக பேச அவருக்கு அரிதாகவே வாய்ப்பளிக்கின்றன. அந்த வகையில், Y20 டாக்ஸ் சீரிஸ் இளம் வழக்கறிஞர் சந்திப்பில் பேசிய அவர், தனது சட்ட ஞானத்தைப் பகிர்ந்து கொண்டார். லத்தீன் மாக்சிம்ஸ் நீதித்துறை பகுத்தறிவை உள்ளடக்கியதாக பெரும்பாலான வழக்கறிஞர்கள் கருதுகின்றனர். ஆனால் இந்த கோட்பாடுகள் இந்திய சமூகத்தின் நீதித்துறை மற்றும் சட்டமன்ற கட்டமைப்பை வழங்கவில்லை என்றார். மேலும், இளம் வழக்கறிஞர்கள் இந்தியன் லாஜிக்கிற்கு திரும்ப வேண்டிய நேரம் இது என்று கூறினர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“