ராஜஸ்தான் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், மூன்றாவது அணி தோன்றும் சாத்தியங்கள் தென்படுகிறது.
ராஜஸ்தானில் கடந்த 30 ஆண்டுகளாக பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையேதான் போட்டி நிலவுகிறது. இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை ஜனநாயக ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அஜய் சிங் சவுதாலா, கூறுகையில் ராஜஸ்தான் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார். தற்போது ஹரியானாவில் பாஜகவுடன் இக்கட்சி கூட்டணியமைத்து ஆட்சி செய்து வருகிறது.
கடந்த சில மாதங்களாக ஹரியானாவின் துணை முதல்வர் துஷ்யந்த் சவுதாலா உள்பட ஜனநாயக ஜனதா கட்சியின் முக்கிய தலைவர்கள், கூறுகையில், ராஜஸ்தானில் பாஜகவுடன் கூட்டணி அமைப்பது முக்கியம் என்றுதான் கருத்து தெரிவித்துள்ளனர்.
ராஜஸ்தானில் மக்கள் தொகையில் குறிப்பிட்ட அளவில் ’ஜாத்’ பிரிவினர் இருப்பதால், இதை வாக்கு வங்கியாக மாற்ற ஜனநாயக ஜனதா கட்சி முடிவு செய்துள்ளது. இந்நிலையில் இதுதொடர்பாக பாஜக எந்த கருத்தையும் கூறாமல் மவுனமாக உள்ளது.
இந்நிலையில் ஜனநாயக ஜனதா கட்சியின் நோக்கம் சாத்தியமாகுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு ராஜஸ்தானின் அரசியல் வரலாற்றை புரட்டி பார்க்க வேண்டும். இந்நிலையில் 1960 மற்றும் 1970 களில் காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராக பல்வேறு கட்சிகள் தோன்றின.
1962-ல் ஜெய்பூர் ராயல் காயத்ரி தேவி தலைமையில், சுதந்திரா கட்சி முக்கிய எதிர்கட்சியாக இருந்தது. 3 முறை தொடர்ந்து இந்த கட்சிதான் முக்கிய எதிர்கட்சியாக இருந்தது.
1962-ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் 36 இடங்களும், 1967 தேர்தலில் 49 இடங்களை பெற்று, முக்கிய எதிர்கட்சியாக இருந்தது. 1972 சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 145 இடங்களில் வெற்றி பெற்றது. இதனால் சுதந்திரா கட்சி வெறும் 11 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.
காலப்போக்கில் சுதந்திரா கட்சி, அதன் முக்கியத்துவத்தை இழந்தது. பாஜகவின் முன்னோடி கட்சியான பாரதிய ஜனசங் கட்சி, ஜனதா கட்சியாக மாறி, 1997-ல் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸை வீழ்த்தியது.
1980 மற்றும் 1990-களில் ஜனதா கட்சியின் சிறு குழுக்கள், ராஜஸ்தான் தேர்தலில் போட்டியிட்டன. குறிப்பாக லோக் தளம் கட்சியின் பெயரில் கூட போட்டியிட்டன. மேலும் அக்குழுக்கள் முக்கிய இடங்களையும் கைப்பற்றியது. போபர்ஸ் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் கட்சிக்கு எதிராக உருவாகிய மனநிலையால், ஜனதா தளம் கட்சி 55 இடங்களில் வெற்றி பெற்று, பாஜகவுடன் இணைந்து ஆட்சி அமைத்தது. அத்தேர்தலில் பாஜக 85 எம்.எல்.ஏக்களுடன் தனிபெரும்பான்மை பெற்ற கட்சியாக மாறியது.
இந்நிலையில் ஜனதா தளம் மற்றும் பாஜகவின் கூட்டணி அமைய பைரோன் சிங் ஷெகாவத்-தான் முக்கிய காரணம். இவர் பின்நாட்களில் துணை குடியரசுத் தலைவரானார்.
இதே ஆண்டில், ராமர் கோவில் விவகாரத்தில் எல்.கே அத்வானி கைது செய்யப்பட்டதால், மத்தியில் வி.பி.சிங் தலைமையிலான ஜனதா தளம் கட்சிக்கு, கொடுத்த ஆதரவை பாஜக திரும்பப்பெற்றது. இந்நிலையில் ஜனதா தளம் ராஜஸ்தானில் அதன் எம்.எல்.ஏக்களை வைத்து, ஷகாவத் அரசுக்கு சிக்கலை ஏற்படுத்த முயற்சித்தது. ஆனால் ஷெகாவத், ஜனதா தளம் கட்சியில் பிரிவை ஏற்படுத்தியதால், ஜனதாளம் ( திக்விஜய்) என்ற பிரிவு உருவானது.
1993 சட்டமன்றத் தேர்தலில் ஜனதளம் ( திக்விஜய்) கட்சியின் தலைவர்கள் பாஜக சார்பாக போட்டியிட்டனர். அந்த தேர்தலில் ஜனதா தளம் கட்சி 6 இடங்களை மட்டுமே வென்றது. இதைதொடர்ந்து அரசியல் களத்தில் ஜனதா தளம் கட்சி காணாமல் போனது.
இதனால் ராஜஸ்தானில் காங்கிரஸ் மற்றும் பாஜக இரண்டு கட்சிகளும் மாறி மாறி ஆட்சி செய்து வருகின்றன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.