சீனாவில் உள்ள ஊகான் நகரில் முதன் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், இந்தியாவில் கண்டறிந்து இன்றோடு (ஜனவரி 30, 2020) ஓர் ஆண்டு நிறைவடைகிறது. இந்த பெருந்தொற்று ஊகான் நகரில் இருந்து இந்தியா வந்த கேரளவைச் சேர்ந்த இளைஞருக்கு இருந்தது முதன் முதலில் உறுதி செய்யப்பட்டது. அதோடு 20-க்கு மேற்பட்ட நாடுகளில் பரவிய இந்த தொற்றுக்கு, பல்லாயிரத்திற்கும் மேற்பட்ட உயிர்கள் பலியாகின.
இந்தியாவில் தொற்று உறுதி செய்யப்பட்ட சில தினங்களிலே, மிகக் கொடியத் தொற்றாக மாறத் துவங்கி இருந்தது. நாட்டின் ஒரு சில பகுதிகளில் முழு ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டது. மத்திய அரசு இந்த தொற்றைக் கட்டுக்குள் கொண்டு வர இயலாததால், மார்ச் மாத தொடக்கத்தில் முழு ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்தது. அப்படி இருந்தும் இந்தியாவில் தொற்று பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தினந்தோறும் 1 லட்சத்திற்கு குறையாமல் பதிவாகி வந்தது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1200 -க்கு குறையாமல் இருந்தது. அதோடு உலக அளவில் தொற்று வேகமாக பரவி வரும் நாடுகளின் பட்டியலில் இந்திய முதலிடம் பிடித்தும் இருந்தது.

இந்தியாவில் பரவிய தொற்றின் விளைவாக தினசரி கூலித் தொழிலாளிகள் முதல் ஒப்பந்த தொழிலாளர்கள் வரை பல லட்சக்கணக்கானோர் தங்கள் வேலைகளை இழந்து, உணவுக்காகவும், உறைவிடத்திற்காகவும் கஷ்டப்படனர். இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்கு புலம் பெயர்ந்து வேலை செய்து வந்த புலம் பெயர் தொழிலார்களில் பலர் சொந்த ஊர்களை நோக்கி பயணம் செல்ல ஆரம்பித்தனர். அதில் சிலர் தங்களது ஊர்களுக்கு செல்ல வாகன வசதி இல்லதாதல் நடை பயணமாக செல்லும் முடிவில் இறங்கி நடக்க துவங்கினர். /tamil-ie/media/media_files/uploads/2021/01/Bihar-2-300x167.jpg)
இப்படி பொருளாதரத்திலும், சுகாதாரத்திலும் தடுமாறிய இந்தியா, தற்போது ஓர் ஆண்டை நிறைவு செய்துள்ளது. அனைத்து துறைகளும் தடுமாறிய இந்தியா இப்போது தான் மெது மெதுவாக பழைய நிலைக்கு திரும்பிக் கொண்டு இருக்கிறது. பல்வேறு பொது நிகழ்வுகளுக்கும் அனுமதியும், தளர்வுகளும் வழங்கியும் வருகின்றது. சில மாதங்களுக்கு முன்பு வரை தொற்று பதிப்பட்டோரின் எண்ணிக்கை தினமும் சராசரியா 12,000 முதல் 14,000 என பதிவாகி இருந்தது. அதில் 10,000 க்கும் அதிகமானோர் கேரளாவைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். 10 லட்சத்திற்கும் அதிமாக இருந்த தொற்று குணமடையாதவர்களின் எண்ணிக்கை, தற்போது 1.7 லட்சத்திற்கும் குறைவாக பதிவாகி இருந்தது . அதோடு தொற்றால் உயிரழந்தவர்களின் எண்ணிக்கையும் 150க்கும் குறைவாக பதிவாகி இருந்தது.

கடந்த 20 நாட்களில் கேரளா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களை தவிர மற்ற எந்த மாநிலங்களிலும் 1000-ற்கும் அதிமான தொற்று பதிப்பட்டோரின் எண்ணிக்கை பதிவகவில்லை. இந்த இரு மாநிலங்களிலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் மிகக் குறைந்த அளவிலே பதிவாகியுள்ளது. தொற்று மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலங்களாக இருந்த ஆந்திர பிரதேசம், டெல்லி, தற்போது குறைந்து காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.
இந்திய விஞ்ஞனிகளால் கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசி இரண்டு வாரங்களுக்கு முன்னர் பயன்பாட்டுக்கு வந்துள்ள நிலையில், தொற்றின் பரவல் முற்றிலும் குறையும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.