சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: மரண வாக்குமூலம் அடிப்படையில் கைதான கொடூரன்

ஹரியானா மாநிலத்தில் 17 வயது சிறுமியை தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து, அச்சிறுமிக்கு விஷம் கொடுத்து கொலை செய்ததாக சிறுமியின் நெருங்கிய உறவினரை காவல் துறையினர் கைது செய்தனர். அச்சிறுமி அளித்த மரண வாக்குமூலத்தின் அடிப்படையில் உறவினர் கைது செய்யப்பட்டார்.

தன் வீட்டிலிருந்து கடந்த சனிக்கிழமை காணாமல் போன சிறுமி, மறுநாள் காலையில் வீட்டிற்கு வந்து, மாமா முறையான உறவினர் ஒருவர் தன்னை தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்ததாக பெற்றோரிடம் சொல்லியுள்ளார். இதையடுத்து, பெற்றோர்கள் போலீசில் புகார் கொடுத்துள்ளனர்.

கடந்த 4 மாதங்களாக உறவினரால் பதிப்புக்குள்ளானதாக சிறுமி சொல்லியுள்ளார். தன்னை கொலை செய்துவிடுவதாக உறவினர் மிரட்டியதால் வீட்டில் சொல்லவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

சிறுமி மயக்கமடையவே, அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். பரிசோதனை செய்ததில் அவருக்கு விஷம்
கொடுக்கப்பட்டது தெரியவந்தது. காவல் துறையினரிடம் சிறுமி வாக்குமூலம் அளித்தார். ஞாயிற்றுக்கிழமை அச்சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

விசாரணையில், குற்றம்சாட்டப்பட்ட உறவினர் நான்கு குழந்தைகளுக்கு தந்தை எனவும், தன்னை போலீஸார் கண்டுபிடித்துவிட்ட விஷயம் அறிந்த அந்நபரும் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றதாகவும் காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.

இதையடுத்து, கைது செய்யப்பட்ட அந்நபர் மீது கொலை மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close