Advertisment

கருத்துக்கணிப்பில் பா.ஜ.க.,வுக்கு நல்ல செய்தி; தெற்கில் ஆதரவு அலை

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்: 2019 ஆம் ஆண்டு கர்நாடகா வெற்றியை மீண்டும் தக்கவைக்கும் பா.ஜ.க; ஆந்திரா, தெலங்கானாவில் பெரிய வெற்றிகளை பெற வாய்ப்பு; தமிழகத்திலும், கேரளாவிலும் சில இடங்களைப் கைப்பற்ற வாய்ப்பு

author-image
WebDesk
New Update
bjp

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Arun Janardhanan

Advertisment

ஒட்டுமொத்த கருத்துக் கணிப்புகள் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு சாதகமான நிலவரத்தை வெளிப்படுத்தினாலும், தெற்கில் கணிப்புகள் உண்மையாக இருந்தால் பா.ஜ.க குறிப்பாக மகிழ்ச்சியடையும்.

ஆங்கிலத்தில் படிக்க:

கருத்துக் கணிப்புகளின்படி, தெற்கில் கால் பதிக்க முயற்சித்து வரும் பா.ஜ.க, கர்நாடகா மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் வலுவான செயல்திறனை வெளிப்படுத்துகிறது, தெலங்கானா மற்றும் தமிழ்நாட்டில் குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெற உள்ளது. எவ்வாறாயினும், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளின்படி பா.ஜ.க தனது இருப்பை உணர்ந்து இரண்டு இடங்களைக் கைப்பற்றினாலும் (கேரளாவில் பா.ஜ.க ஒரு லோக்சபா தேர்தலில் கூட வெற்றி பெற்றதில்லை) என்றாலும், கேரளா காங்கிரஸ் கூட்டணியான யு.டி.எஃப் (UDF) கோட்டையாகவே இருக்கும்.

2019 ஆம் ஆண்டில், கேரளாவில் உள்ள 20 இடங்களில் 19 இடங்களில் யு.டி.எஃப் வெற்றி பெற்றது, ராகுல் காந்தி மாநிலத்தின் வயநாடு தொகுதியில் போட்டியிட்டதன் விளைவாக இந்த வெற்றி பார்க்கப்பட்டது, இடதுசாரி கூட்டணியான எல்.டி.எஃப் 1 தொகுதியில் வென்றது.

ஒட்டுமொத்த கருத்துக் கணிப்புகள் தமிழகத்தில் தி.மு.க தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு ஒரு பெரிய முன்னணியைக் காட்டுகின்றன, மொத்தமுள்ள 39 தொகுதிகளில் 33-39 இடங்கள் தி.மு.க கூட்டணிக்கு எதிர்பார்க்கப்படுகிறது. கருத்துக்கணிப்புகள் பா.ஜ.க.,வுக்கு நான்கு இடங்களைக் கொடுக்கின்றன. 2019 மக்களவைத் தேர்தலில் 39 இடங்களில் 38 இடங்களைப் பெற்று தி.மு.க கூட்டணி வெற்றி பெற்றதால், பா.ஜ.க தமிழகத்தில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.

கருத்துக்கணிப்புகளின்படி முடிவுகள் அமைந்தால் பா.ஜ.க.,வின் மாநிலத் தலைவர் அண்ணாமலையின் தலைமையை உறுதிப்படுத்துவதாக இருக்கும். உட்கட்சி பிளவுடன் போராடி வரும் அ.தி.மு.க.வின் இழப்பில் பா.ஜ.க லாபம் ஈட்டியுள்ளது என்பதையும் இது உணர்த்தும்.

கடந்த ஆண்டு கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் பெற்ற வெற்றியின் அளவைக் கருத்தில் கொண்டு, 28 இடங்களில் 27 இடங்களில் வெற்றி பெற்ற பா.ஜ.க, 2019 ஆம் ஆண்டு தனது ஆதிக்கத்தை மீண்டும் காட்டினால், கர்நாடகாவில் ஒரு ஆச்சரியம் இருக்கலாம். கருத்துக் கணிப்புகளின் சராசரி, பா.ஜ.க.வுக்கு 23 இடங்களைப் பரிந்துரைத்தது, இது தேர்தலுக்கு முன்னதாக ஜே.டி(எஸ்) உடனான கூட்டணியால் பா.ஜ.க பலன் அடைந்தது என்பதைக் குறிக்கிறது.

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு உண்மையாக இருந்தால், தெலுங்கானா முடிவுகள் ஆச்சரியம் தான், ஏனெனில் பா.ஜ.க இங்கு ஒருபோதும் முக்கிய பங்கு வகிக்கவில்லை, மேலும் காங்கிரஸ் ஆளும் கட்சியாக இருப்பதால் முடிவுகள் ஆச்சரியமளிக்கும். பிரதான எதிர்க்கட்சியான பாரத் ராஷ்டிர சமிதி சரிவைச் சந்தித்தாலும், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் எதிர்பார்த்ததை விட பா.ஜ.க.,வுக்கு மிகக் கூர்மையான ஆதாயங்களைக் கணிக்கின்றன. 17 லோக்சபா தொகுதிகளைக் கொண்ட மாநிலத்தில் காங்கிரஸூக்கு பா.ஜ.க கடும் போட்டியளிக்கிறது. 2019 இல், தெலுங்கானாவில் என்.டி.ஏ 4 இடங்களைப் பெற்றிருந்தது, மீதமுள்ளவை இந்தியா கூட்டணி மற்றும் பிற கட்சிகளுக்கு சென்றது.

லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல்களை ஒரே நேரத்தில் சந்தித்த ஆந்திராவில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் என்.டி.ஏ அமோக வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கிறது. பா.ஜ.க உடனான கூட்டணியால் பலம் பெற்றுள்ள தெலுங்கு தேசம் – ஜனசேனா கட்சிகள், மாநிலத்தில் பெரிய வெற்றிகளைப் பெறுவதாகக் காணப்படுகிறது, மேலும் கருத்துக்கணிப்பு என்.டி.ஏ.,க்கு 25 இல் 22 இடங்கள் வரை கொடுத்தது. 2019 இல் YSRCP கட்சி 22 இடங்களில் வெற்றி பெற்றது.

YSRCP கணிக்கப்பட்ட அளவு குறைவாக இருந்தால், வேட்பாளர்களை பெருமளவில் மாற்றுவதன் மூலம் அதைத் தடுக்க முயற்சித்த போதிலும், ஆட்சி எதிரான மனநிலை வலுவாக இருந்தது என்று அர்த்தம். இது, தெலுங்கு தேசம் தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி, சீட்-பகிர்வு அடிப்படையில் அதன் வாக்கு சதவீதத்தை சரியாகப் பெற்றுள்ளது என்றும் அர்த்தம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Exit Polls Elections 2024 Bjp
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment