Advertisment

20 ஆண்டுகள் முன்னேற்றம் ஒன்றுமில்லாமல் போனது - ஆப்கானின் முதல் பெண் தலைமை தேர்தல் ஆணையர் வேதனை

என்னுடைய மகன் மகள்களும், கர்ப்பிணியாய் இருக்கும் என்னுடைய மருமகளும் தற்போது மறைந்து வாழும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்று அவர் கூறினார்.

author-image
WebDesk
New Update
Hawa Alam Nooristani, first female head of Afghanistan’s poll panel

Ritika Chopra

Advertisment

first female head of Afghanistan’s poll panel : ஹவா ஆலம் நூரிஸ்தானி (56) காபூலை விட்டு ஆகஸ்ட் மாதம் 8ம் தேதி, பெய்ரூட்டில் ஒரு மாநாட்டில் கலந்து கொள்ள சென்ற போது அடுத்து என்ன நடக்கும் என்று அறிந்திருக்கமாட்டார்.

ஒரு வாரம் கழித்து ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி அன்று அவரும் அவருடைய சக பணியாளர்களும் பெய்ரூட்டில் இருந்து காபூலுக்கு திரும்ப துபாய் விமான நிலையத்தில் காத்துக் கொண்டிருந்த போது, அவருடைய குடும்பத்தினர், தாலிபான்களின் தொடர் முன்னேற்றம் குறித்து அவருக்கு தெரிவித்தனர். மேலும் காபூலுக்கு திரும்புவது பாதுகாப்பானது இல்லை என்றும் அவருக்கு கூறப்பட்டது.

அந்நாட்டில் தேர்தல் நடத்துவதற்காக இந்த 8 பேர் ஆற்றிய முக்கிய பங்கின் வினைப்பயனிற்கு பயந்து கொண்டு 8 தேர்தல் ஆணையர்களும் தங்களின் பயண திட்டத்தை மாற்றி வெவ்வேறு நாடுகளுக்கு சென்றனர்.

வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்துள்ள முக்கிய அதிகாரிகளில் நூரிஸ்தானியும் ஒருவர். அவர் ஆப்கானிஸ்தானின் சுதந்திர தேர்தல் ஆணையத்தின் முதல் பெண் தலைவர். 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் அஷ்ரப் கானியின் வெற்றியில் கையெழுத்திட்டார்.

இந்தியாவிற்கு எப்படி தலைமை தேர்தல் ஆணையமோ அது போன்று ஆப்கானிஸ்தானில் ஐ.இ.சி. செயல்பட்டு வந்தது. இந்தியாவில் மூன்று தேர்தல் ஆணையர்கள் இருப்பார்கள். ஆப்கானிஸ்தானில் 8 பேர் இருந்தனர்.

நூரிஸ்தானி இந்த ஆண்டு தலைவராக தனது பதவிக்காலத்தை நிறைவு செய்தார், ஆனால் எட்டு கமிஷனர்களில் ஒருவராக தொடர்ந்து பணியாற்றுகிறார். அவருக்கு பதிலாக புதிய தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட ஔரங்கசைப்பும் தற்போது வெளிநாட்டில் சிக்கிக் கொண்ட தலைவர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்து ஆப்கான் அதிகாரிகளும் தற்போது அவர்கள் சென்ற நாட்டில் ஒரு வாடகை வீட்டில் தங்கியுள்ளனர். நூரிஸ்தானி கேட்டுக் கொண்டதற்கு இணங்க அவர்கள் எந்த நாட்டிற்கு பயணித்தார்கள் என்ற தகவல்களை இந்தியன் எக்ஸ்பிரஸ் இந்த கட்டுரையில் குறிப்பிடவில்லை.

“தாலிபான்கள் காபூலை கைப்பற்றி முன்னேறிவருகிறார்கள் என்று கேள்விபட்ட போது என்னுடைய உணர்வுகளை என்னால் விளக்கமுடியவில்லை என்று நடுங்கிய குரலுடன் தொலைபேசியில் பேசினார் நூரிஸ்தானி. நாங்கள் இதற்கு தயாராக இல்லை. உண்மையில் நாங்கள் லெபனானில் அடுத்த தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினோம். எங்கள் நாட்டில் ஜனநாயகத்தை நிறுவனமயமாக்க திட்டமிட்டிருந்தோம்” என்று அவர் கூறினார்.

தான் ஏறாத விமானத்திற்காக துபாய் விமான நிலையத்தில் காத்துக் கொண்டிருந்த அவர் முற்றிலுமாக இந்த பிரச்சனையில் தன்னை தொலைத்துவிட்டதாக கூறீனார். நிச்சயமற்ற எதிர்காலத்தை நாங்கள் பார்த்துக்கொண்டிருந்தோம். இங்கிருந்து எங்கு செல்ல வேண்டும் என்று எங்களுக்குத் தெரியாது. நாம் எங்கு செல்வோம், எங்கு வாழ்வோம்? எல்லாம் திடீரென்று நடந்தது, "என்று அவர் கூறினார். சில மணி நேரங்களில் நூரிஸ்தானியும் அவருடைய சகாக்களும் வேறு ஒரு நாட்டில் தரையிறங்க, ஆப்கானிஸ்தான் முழுமையாக தாலிபான்களின் கட்டுப்பாட்டிற்குள் வந்தது.

Hawa Alam Nooristani, first female head of Afghanistan’s poll panel, afghanistan, kabul, taliban crisis,

குடும்பத்தினரின் ஆலோசனையை கேட்கும் முடிவு நல்லதாக முடிந்தது. தாலிபான்கள் எங்களின் வீடுகளை கைப்பற்றினர். எங்களுடைய கார்கள், பாதுகாப்பு அதிகாரிகள், எங்களின் ஆயுதங்கள் அனைத்தையும் கைப்பற்றியுள்ளனர். எங்களின் வீடுகள் சூரையாடப்பட்டுள்ளன. எங்களின் குழந்தைகள் வெவ்வேறு இடங்களுக்கு செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. என்னுடைய மகன் மகள்களும், கர்ப்பிணியாய் இருக்கும் என்னுடைய மருமகளும் தற்போது மறைந்து வாழும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்று அவர் கூறினார்.

இந்த நிருபருடனான உரையாடலின் போது, தலிபான்களின் இராணுவ வெற்றியின் நம்பமுடியாத வேகத்தை நூரிஸ்தானி அடிக்கடி குறிப்பிட்டார் - ஆகஸ்ட் 8 அன்று தனது சகாக்களுடன் பெய்ரூட்டுக்குச் சென்றபோது காபூல் இவ்வளவு விரைவாக வீழ்ச்சியடையும் என்று நான் நினைத்தும் கூட பார்க்கவில்லை என்று அவர் கூறினார்.

எங்களிடம் பாதுகாப்புப் படைகள் இருந்தன. எங்கள் அரசாங்கத்தின் பிரதிநிதி தோஹாவில் தலிபான் தலைவர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். என்னுடைய குடும்ப உறுப்பினர்களுக்காக நான் அன்பளிப்புகள் எல்லாம் வாங்கி வந்தேன். எனக்கு இன்னும் அதிர்ச்சியாக இருக்கிறது. என்னுடைய குழந்தைகளை மட்டும் நான் விட்டுவரவில்லை. என்னுடைய மக்கள், நான் விரும்பி வேலை பார்த்த என்னுடைய தாய்நாட்டையும் இழந்தேன். அனைத்தும் ஒரு நொடியில் அரங்கேறிவிட்டது என்று கூறினார் நூரிஸ்தானி.

தாலிபான்கள் நாட்டை கைப்பற்றியது ஆப்கானிஸ்தான் வரலாற்றில் ஒரு இருண்ட பக்கம். இருபது ஆண்டுகள் நாங்கள் மேம்படுத்திய மனித உரிமைகள் மற்றும் பெண்களுக்கான உரிமைகள் அனைத்தையும் இழந்துவிட்டோம். உலகம் வளர்ச்சி அடைந்து வருகிறது. ஆனால் நாங்கள் பின்னோக்கி செல்கிறோம். என்னுடைய பயணத்தை திரும்பி பார்த்தாலும், நான் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தேன். பிறகு மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக இருந்தேன். 2019ம் ஆண்டு தேர்தலை நடத்தி முடித்தேன். தாலிபான்கள் கீழ் இதெல்லாம் சாத்தியம் இல்லை. இந்த தலைமுறை பெண்கள் மூத்த அதிகாரிகளாக பணியாற்றுவதைக் கண்டது. வெளிநாடுகளில் நம் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பெண் பிரதிநிதிகளும் கூட இருந்தனர். ஆனால் அனைத்தும் சிறிது நேரத்திற்குள் காணாமல் போனது என்றார் நூரிஸ்தானி.

தற்போது காபூல் திரும்புவதற்கான வாய்ப்புகள் இல்லை. தாலிபான்களுக்கு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லை. காபூலை கைப்பற்றி ஒருவாரத்திற்கும் மேலாகிவிட்டது. அமைச்சரவை இல்லை. அரசு இல்லை. உள் மட்டும் வெளிவிவகாரத்துறை அமைச்சரங்கள் இல்லை. ஏன் என்றால் அங்கே ஜனநாயகம் இல்லை. அதனை அவர்கள் உருவாக்குவார்கள் என்ற நம்பிக்கையும் இல்லை என்று அவர் கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Afghanistan Taliban
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment