Ravish Tiwari , Dipanker Ghose
In high-stakes West Bengal election battle, it’s Modi pull vs Mamata pushback :தேர்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை மாலை நான்கு மாநிலங்கள் மற்றும் புதுவை யூனியன் பிரதேசத்திற்கான சட்டமன்ற தேர்தல் தேதிகளை அறிவித்தது. அது மேற்கு வங்கத்தில் மட்டும் எட்டு கட்டங்களாக தேர்தல் ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெறும். இது மற்ற மாநில தேர்தல்களைக் காட்டிலும் மிக முக்கியத்துவம் கொண்டதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேற்குவங்கத்தில் முதன்மையாக மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் பாஜகவிற்கு இடையில் நடைபெறும் தேர்தலாக பார்க்கப்படுகிறது. மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் 2011 மற்றும் 2016 தேர்தல்களில் வெற்றி பெற்றது. 2016 தேர்தலில் மொத்தமாக 211 தொகுதிகளில் வெற்றியை பெற்றது . பாஜக முறையே 0 மற்றும் மூன்று இடங்களில் வெற்றி பெற்றது. நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பாஜக 41 தொகுதிகளில் 18 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதன் வாக்கு வங்கி 40.6 % இருந்த போது அம்மாநிலத்தின் அரசியல் ஒரு குழப்பத்திற்கு ஆளாகி வருகிறது.
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட பல உயர்மட்ட தலைவர்கள் அடிக்கடி மேற்குவங்க வருகை அங்குள்ள உள்ளூர் தலைவர்களில் இந்துத்துவா உந்தல்களை ஏற்படுத்தி உள்ளது. இதனை பாஜக முதலீடாக நம்புகிறது. திரிணாமுல் காங்கிரஸ் பாஜகவை வெல்லும் என்றும் நம்புகிறது. மூன்றாவது அணி உருவாவதற்கு வாய்ப்புள்ளதாகவும் நம்பப்படுகிறது. ஆனால் இறுதியாக 1971 ஆம் ஆண்டு அஜய் முகர்ஜி முதல்வராக இருந்தபோது இவ்வாறு நடைபெற்றது. 50 ஆண்டுகளுக்கு பிறகு இப்படியான ஒரு சூழல் உருவாகியுள்ளது.
நீண்ட காலமாக கம்யூனிஸ்ட் கட்சியின் கோட்டையாக இருந்த மேற்கு வங்கத்தில் ஒரு துருவமுனை பிரச்சாரம் இப்போது தான் உருவாகியுள்ளது. தற்போது நடைபெற்று வரும் தேர்தல் பிரச்சாரம் தற்போது இருக்கும் நிலவரம் என்பதை வெளிப்படுத்தியுள்ளது. பாஜக துர்கா பூஜை, சரஸ்வதி பூஜை மற்றும் ஸ்ரீ ராம் சொல்லாட்சிகளுடன் ஆரம்பிக்க, மதசார்பற்ற தன்மையை குறைக்கும் நிலைக்கு ஆளானார் பானர்ஜி.
பாஜகவின் சவாலை தடுக்க 30% சிறுபான்மை வாக்காளர்கள் கை கொடுப்பார்கள் என்று திரிணாமுல் காங்கிரஸ் அறிந்திருக்கிறது. உ.பி. மற்றும் பீகாரைக் காட்டிலும் மேற்கு வங்கத்தில் அதிக அளவு சிறுபான்மையினரின் வாக்குகள் கிடைக்கும் என்று டி.எம்.சி. சுட்டிக்காட்டியுள்ளது.
பாஜக குறிப்பிட்ட வாக்குகளை ஒருமுகப்படுத்தும் அரசியலை எவ்வாறு மேற்கொண்டாலும் அது டி.எம்.சிக்கு வாக்குகளை பெற்றுத்தரும். சிறுபான்மையினரின் (இஸ்லாமியர்கள்) பெரும்பான்மை மற்றும் பெரும்பான்மையினரின் (இந்துக்கள்) சிறுபான்மை வாக்குகள் இந்த தேர்தலில் டி.எம்.சி.க்கு வெற்றியை உறுதி செய்யும் என்று அக்கட்சியின் செல்வாக்கு மிக்க தேர்தல் மேலாண்மை செயல்பாட்டாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
கூடுதலாக, டி.எம்.சி கருத்துக் கணிப்பு மேலாளர்கள், மாநிலத்தின் மேற்குப் பகுதிகளில் உள்ள ஜங்கல்மஹால் மற்றும் வடக்கில் கூச்ச்பெஹார் (மக்களவைத் தேர்தலின் போது அது ஒரு வலுவான இடத்தைப் பிடித்தது) மீது பாஜகவின் நம்பிக்கை எவ்வாறு உள்ளது என்பதை சுட்டிக்காட்டுகிறது, அதே நேரத்தில் மாநிலத்தின் 294 சட்டமன்ற இடங்களில் 200 தெற்கு 24 பர்கானாக்கள், வடக்கு 24 பர்கானாக்கள், முஷிதாபாத், ஹூக்லி, மால்டா, ஹவுரா, கிழக்கு மெடினிபூர், மேற்கு மெடினிபூர், பர்த்வான் மற்றும் நாடியா ஆகிய ஒன்பது மாவட்டங்களில் உள்ளது. இந்த பகுதிகளில் பாஜகவின் வலிமையானது மற்ற மாவட்டங்களில் இருப்பதைப் போல் இல்லை என்று டி.எம்.சி. கருத்து கணிப்பு மேலாளர் ஒருவர் கூறினார். இந்த பகுதிகளில் இருந்து மட்டும் டி.எம்.சி. கடந்த தேர்தல்களில் 150 தொகுதிகளில் வெற்றியை தக்கவைத்தது.
இது மக்களவைத் தேர்தல் அல்ல. 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் முடிவுகளை சட்டமன்ற தேர்தலில் பாஜகவின் செயல்திறனை வைத்து கணிக்க இயலாது. மமதா பானர்ஜி பிரதம வேட்பாளராக நிற்கவில்லை. பாஜக நாடு முழுவதும் வெற்றி பெற உள்ளது என்பது தெளிவாக இருந்தது. தேசிய தேர்தலில் இருந்து மாநில தேர்தல்களை பார்க்கும் போது பாஜகவின் வாக்கு வங்கி 10%-ஆக குறைந்துள்ளதை நம்மால் அறிய முடியும்.
ஊடகங்களால் அதிக அளவில் மிகைப்படுத்தப்பட்டிருந்தாலும் பாஜக இங்கு இரட்டை இலக்கில் வெற்றிகளை பெறுவது கடினம் என்று பிரசாந்த் கிஷோர் டிசம்பர் மாதம் ட்வீட் ஒன்றை வெளியிட்டார். அவர் டி.எம்.சி.க்காக தேர்தல் அறிவுரைகளை வழங்குகிறார்.
இடதுசாரி - காங்கிரஸ் கூட்டணியைக் காட்டிலும், டி.எம்.சி. பாஜகவையே மிகப்பெரிய போட்டியாக கருதுகிறது. இரு முனை தேர்தலாகவே டி.எம்.சி. இந்த தேர்தலை பார்ப்பதால், பாஜகவிற்கு எதிரான வாக்குகள் டி.எம்.சி.யில் சேரும் என்றும், டி.எம்.சி மற்றும் இடதுசாரி - காங்கிரஸ் கூட்டணிக்கு மத்தியில் இது விரிசலை உருவாக்காது என்றும் நம்புகின்றனர். முகுல் ராய் முதல் சுவேந்து அதிகாரி வரையில் பாஜகவில் இணைந்த டி.எம்.சி. உறுப்பினர்களால் பாஜக உற்சாகத்துடன் போராடுகிறது.
தேர்தல் நிர்வாகத்திற்காக கட்சி பல அடுக்கு நிறுவன கட்டமைப்பை அமைத்துள்ளது பாஜக. மக்களவைத் தேர்தலின்போது கட்சி அமைப்பை வழிநடத்திய ஆர்.எஸ்.எஸ்.பிராரக் மற்றும் தேசிய கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சிவ் பிரகாஷ் மற்றும் கட்சி பொதுச் செயலாளர் கைலாஷ் விஜயவர்ஜியா ஆகிய இரு மாநில பொறுப்பாளர்களின் வெற்றிகரமான கூட்டணியை தக்க வைத்துக் கொண்ட நிலையில், கட்சித் தலைவர் ஜே.பி.நட்டா, ஆர்.எஸ்.எஸ்.பிராரக் அரவிந்த் மேனன் மற்றும் அமித் மால்வியா ஆகிய இருவரை சிவ் பிரகாஷ் மற்றும் விஜயவர்கியா ஆகியோருக்கு உதவ நியமித்துள்ளார்.
இந்த மாத துவக்கத்தில் அக்கட்சி பரிவர்தன் யாத்திரைகளை இந்த மண்டலங்களில் துவங்கியது. இதில் மூன்றினை நட்டாவும், இரண்டினை ஷாவும் துவங்கி வைத்தனர். இந்த யாத்திரைகளை தினமும் குறைந்தது மூன்று சட்டமன்ற தொகுதிகளில் நடைபெறும். அங்கு உள்ளூர் தலைவர்கள், மாநில தலைவர்கள் மற்றும் ஒரு மத்திய தலைவர் ஆகியோர் வாக்கெடுப்பு தொடர்பாக பேசுவார்கள். அடுத்த மாத தொடக்கத்தில் கொல்கத்தாவில் உள்ள பிரிகேட் மைதானத்தில் மோடி உரையாற்றவுள்ள பேரணியில் இந்த யாத்திரைகள் முடிவடையும்.
இதில் மேலும் பல்வேறு முக்கியமான விசயங்கள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். தேர்தலில் வேட்பாளர்கள் தேர்வும் முடிவுகளை பாதிக்கும். மூன்றாம் அணியும் முக்கியமானது. இந்திய மதச்சார்பற்ற முன்னணியுடன் காங்கிரஸ் - இடதுசாரி கூட்டணியா என்பது தொடர்பாக இன்னும் கேள்வி உள்ளது. ஹூக்லியில் ஒரு செல்வாக்கு மிக்க முஸ்லீம் மதகுருவால் நிறுவப்பட்ட ஒரு கட்சி இதில் இணைய உள்ளது. அது திரிணாமுல் அல்லது பாஜகவின் வாய்ப்புகளை தூண்டமுடியுமா என்பதையும் பொறுத்திருந்து அறிய வேண்டும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.