ஜெய்ப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வியாழக்கிழமை (மார்ச் 03) மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. பின்னர் அது வெறும்புரளி என்று தெரியவந்தது. ஆட்சியர் ஜிதேந்திர குமார் சோனியின் அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் முகவரிக்கு இந்த வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் வந்தது. காலை 11:30 மணிக்கு காவல் ஆணையரிடம் ஆட்சியர் தகவல் தெரிவித்தார். இதையடுத்து, ஆட்சியர் அலுவலகத்தில் இருந்த சுமார் 200 அறைகள் காலி செய்யப்பட்டு சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டன.
/indian-express-tamil/media/media_files/2025/04/04/WuPdtaNRIHTKAyqm95KE.jpg)
வெடிகுண்டு செயலிழப்புப் படை, அவசரகால மீட்புக் குழு மற்றும் மோப்ப நாய் படையினரால் 2 மணி நேரத்திற்கும் மேலாக முழுகட்டிடத்தையும் சல்லடையிட்டு சோதனையிடப்பட்டது. ஆனால், சந்தேகத்திற்கிடமான எதுவும் கிடைக்கவில்லை என்று போலீசார் தெரிவித்தனர். ஆட்சியர் அலுவலகத்தில் IED குண்டு வைக்கப்பட்டிருப்பதாக மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டுள்ளதாக துணை கண்காணிப்பாளர் தரம்வீர் சிங் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் தெரிவித்தார் .
2ஜி வழக்கில் (தமிழ்நாடு யூடியூபர்) சவுக்கு சங்கர் நியாயமற்ற முறையில் நடத்தப்பட்டதற்கும், சாதிக் பால்வா காவலில் இறந்ததற்கும் பழிவாங்க வெடிகுண்டு வைத்ததாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தரம்வீர் சிங் தி கூறினார். அண்ணா பல்கலை எம்ஐடி வளாகத்தின் இயந்திர பொறியியல்துறையில் வெடிகுண்டு தயாரிக்கப்பட்டதாகவும் அந்த மின்னஞ்சலில் கூறப்பட்டதாக சிங் கூறினார்.
ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரி ஒருவர், தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் , போலீசார் கட்டிடத்தை சோதனை செய்ய வந்தபோது இந்த சம்பவம் குறித்து தங்களுக்குத் தெரிய வந்ததாகக் கூறினார். போலீசார் எங்களை உடனடியாக அலுவலக வளாகத்தை காலி செய்யச் சொன்னார்கள். பிற்பகலில், போலீஸ் குழு சோதனைகளை முடித்த பிறகு, நாங்கள் எங்கள் பணியை மீண்டும் தொடங்கினோம் என்று அந்த அதிகாரி கூறினார்.
இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆட்சியர் ஜிதேந்திர சோனியைத் தொடர்பு கொள்ள முயன்றது. ஆனால் அவர் அழைப்புகளுக்கு பதிலளிக்கவில்லை. இதேபோல், பிப்ரவரி 20 அன்று, எஸ்.எம்.எஸ். மருத்துவக் கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. அது பின்னர் புரளி என்று தெரியவந்தது. அக்டோபர் 4, 2024 அன்று, ஜெய்ப்பூர் சர்வதேச விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்தன.